செவ்வாய், 29 செப்டம்பர், 2020

1951 தனித்தமிழ்நாடு கட்டுரை இசுலாமுயர் கி.ஆ.பெ.விசுவநாதம் தமிழர்நாடு பத்திரிக்கை

aathi1956 இணைப்புகள் வியா., 20 டிச., 2018, பிற்பகல் 6:25 பெறுநர்: எனக்கு கதிர் நிலவன் தமிழ்நாடு வேண்டும் - ஏன்? கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய "தமிழர் நாடு" இதழில்... தமிழ்நாடு வேண்டும். தமிழனுக்குத் தனிநாடு வேண்டும். தமிழையே தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்குத் தமிழ் நாடு வேண்டும் - ஏன்? தயக்கமின்றி விடையிறுக்க முடிந்த வினாவாகி விட்டது. இன்று, விளையாட்டான வினையன்று, மொழிப் போராட்டத்தை முதலிலே கொண்டு , நாட்டுப் பற்றை நாயகமாக நிறுத்தி, " நமக்கென்று நானிலத்தில் வேண்டும்" என நம் தமிழ்த் தலைவர்கள் நவில ஆரம்பித்து விட்டனர் இன்று. ஆம் நமக்கென்றொரு நாடு நானிலத்தில் வேண்டும்" அந்நாடு எந்நாடு? அதுவே நம் தமிழ் நாடு. தமிழ்நாடு கேட்டால் தனித்தியங்க முடியாதே என்கின்றனர் ஆட்சியாளர். பாரத நாடெனப்படும் இன்றைய இந்தியா என்றும் ஒரே நாடாக இருந்ததில்லை என்று சரித்திரம் கூறுமே சான்று. தமிழ்நாடு தனித்தியங்கியதில்லையா? தமிழரசர் தனியாட்சி புரியவில்லையா? விண்ணும் வியக்க மண்ணிலே மாண்புற இருந்தது எம் தமிழ்க்கொடிகளல்லவா? அக்கொடிகளுக்கு உரிய வேந்தர் எம் தமிழர் அல்லவா? இமயம் வரை , சென்று வாகை சூடி, அதற்கு மேலும் செல்ல இயலாதபடி இடைமறித்த இமயத்தின் மீது தன் இலாஞ்சினையைப் பொறித்தவன் எம்மறத்தமிழன் அல்லவா? எனவே, தமிழ்நாடு தனித்தியங்க இயலாது என்று எங்ஙனம் கூற முடியும்? கன்னித்தமிழை காக்க வகையறியார் வந்தனர் ஆட்சிக்கு. காக்கத்தான் வகையறியாரே. கருத்தைத்தான் வகைப்படுத்தினரா? இல்லை, முயற்சித்தனரா? இல்லை. முயற்சியற்ற நிலையில் வளர்ச்சியைக் காண முடியுமா? தமிழின் நிலை தாழ்த்தப்பட்ட து. தனியொரு வகுப்பினரின் மொழி இடம் பெற வேண்டிய காரணத்தால் , இந்த இழிநிலை ஏன்? தமிழ்நாட்டின் ஆட்சி தமிழர் கையில் இல்லை. ஆட்சியாளரில் அனேகருக்கு அதைப் பற்றி அக்கறையில்லை. .... எனவேதான், தமிழ் நாடு தனிநாடாக வேண்டுமென்று - தமிழர் ஆட்சியில் தமிழ் காக்கப்பட வேண்டுமென்று - கேட்கப்படுகிறது. தரணி மீது தமிழ் மொழி தலை சிறந்ததாகக் கருதப்பட வேண்டுமென்பதற்காகப் கேட்கப்படுகிறது.... எனவே, தமிழ்மொழி தழைக்க , தமிழன் தன்மானத்தோடு வாழ , தமிழ்நாடு தனிநாடு ஆக வேண்டும். இனியேனும் ஆட்சியாளர் அறிவாரா? " தமிழ்நாடு ஏன் வேண்டும் என்பதை! தனித்து இயங்கட்டும் தமிழரின் நாடு! (கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய தமிழர் நாடு இதழில் பி.எச்.சேக் அலாவுதீன் என்பவர் எழுதியது) இசுலாமியத்தமிழர் தனிநாடு 17.06.1951

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக