புதன், 30 செப்டம்பர், 2020

சேலம் மார்வாடி ஆதிக்கம் திமிர் சாட்சிகள்

aathi1956 வெள்., 11 ஜன., 2019, பிற்பகல் 3:20 பெறுநர்: எனக்கு PLEASE READ AND SHARE! *மார்வாடி தேசமாகும் தமிழகம்* சேலம் புதியப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும், வீரபாண்டி நகர் பகுதிக்கு இன்று வேலை நிமிர்த்தமாக செல்ல வேண்டி இருந்தது. ஒரு நிமிடம் ராஜஸ்தானுக்கு வந்து விட்டோமோ! என்று அதிர்ந்துவிட்டேன். எங்கு பார்த்தாலும் வடமாநில மக்கள். அங்கு இருக்கும் அனைத்து கடைகளிலும் அவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் பார்க்கும், பார்வையில் எத்தனை திமிர், தமிழர்களை மிக ஏளனமாக பார்த்தார்கள். பிறகு அருகில் இருக்கும் சில தமிழர்களிடம் பேசினேன். அவர்கள் சொன்ன தகவல் மிக அதிர்ச்சியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் ஆயிரம் ராஜஸ்தான் மார்வாடி குடுபங்கள் அந்த பகுதிக்கு குடி வந்து உள்ளனர். அங்கு இருக்கும் அனைத்து கடைகளிலும் அவர்கள் மட்டும் வியாபாரம் செய்யும்படி மாற்றிக்கொண்டனர். *தமிழ் நாட்டில் தமிழர்கள் நிலை தமிழர்கள் கடைவைத்தாலும், அவர்களிடம் பிரச்சனை செய்து கடைகளை காலிசெய்ய சொல்கின்றனர் அல்லது நான்கு ஐந்து பேர் சேர்ந்து உங்கள் கடை அருகில் கடைபோட்டு அவர்களை காலி செய்ய வைப்பார்கள். இதற்கு அங்கு இருக்கும் சில அரசியல் தலைவர்களும் உடந்தை என்பதுதான் பெரும் கொடுமை. தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் இவர்களுக்கு பயந்து வாழும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அங்கு இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.. அவர் சொன்னது, ‘அவர் இதே பகுதியில் பல தலைமுறையாக வசித்து வருவதாகவும், ஆனால் இதற்கு மேல் இங்கு வசிக்க முடியாத சூழலை மாரவாடிகள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றும், கூடியவிரைவில் அந்த பகுதியில் தமிழர்களே வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.’ இருபது வருடம் கஷ்டப்பட்டு ஆட்டோ ஓட்டி உழைத்து கட்டிய வீட்டை இவர்களிடமே விற்றுவிட்டு வரவேண்டி உள்ளது என்று குரல் தழுதழுக்க கூறினார். நாம் வாழும் தெருவில் திடீரென்று ஆயிரம் ஹிந்தி பேசும் மக்கள் குடிவந்தால், அந்த கலாச்சாரத்தை நம் மனம் ஏற்காது. குறிப்பாக தமிழ் பெண்கள் அங்கு இருந்து விலகி செல்லுவார்கள், அதை பயன்படுத்தி அங்கு இருக்கும் வீடுகளை இவர்களிடம் மட்டும் விற்று விட்டு செல்லும் நிலை எற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் ஒரு சில சாலைகளில் அனைத்து வீடுகளையும் வாங்கிவிட்டனர், அந்த பகுதி பொது சாலைகளில் சென்றால் கூட இவர்களிடம் அனுமதி வாங்கி செல்லவேண்டுமாம். இவர்களின் இருப்பை தக்கவைத்து கொள்ள அங்கு ஒரு கோவிலை கட்டிவிட்டார்கள். கோவிலை கேடயமாக பயன்படுத்தி அங்கு இருக்கும் தமிழர்களை மெல்லமெல்ல வெளியேற்றிவிட்டார்கள். அந்த கோவில் இருக்கும் பகுதியில் இவர்கள் அடிக்கடி ஒன்றுகூடி பஜனை, பூஜை என்ற போர்வையில், சத்தம் போடுவதால், அந்த தெருவில் இருக்கும் பல வீடுகளை விற்று விட்டு செல்லும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். *பாட்டியின் ஆதங்கம் அங்கு இருக்கும் ஒரு பாட்டி கூறியது.... ‘எங்கு இருந்து திடீர் என்று இத்தனை பேர் வந்தாங்கனே தெரியலப்பா ஆனா நம்மள எல்லாம் மனுஷங்களா கூட மதிக்க மதிக்கமாட்டேன்றாங்க. நம்ம ஆளுங்களுக்கு வீடு கூட வாடகைக்கு குடுக்கமாட்டேன்றாங்க' என்று நொந்து கொண்டார். அந்த பகுதியை சுற்றி பார்த்தபோது புரிந்து கொண்டது மார்வாடி கும்பல் மிக தந்திரமாக செயல்படுகின்றனர், அந்த பகுதிக்கு மீண்டும் தமிழர் குடிவரக்கூடாது என்று மிக திட்டமிட்டு செயல்படுகின்றனர். அங்கு இருக்கும் வணிகம், அங்கு இருக்கும் வீடுகள் அனைத்தும் தமிழர்களை விட்டு சென்று கொண்டு இருக்கின்றது. இதை பற்றி அந்த பகுதி எம்பி, எம்எல்ஏ என்று யாரும் மக்களிடம் பேசியது கூட கிடையாது. *தமிழ் இளைஞனின் கோபம் அடுத்த தலைமுறையில், அந்த பகுதியே முற்று முழுதுமாக, ஏதோ ஹிந்தி பேசும் மக்கள் வாழும் பகுதி என்று நாம் இப்பொழுது சௌகார்பேட்டை பகுதியை நினைத்து கொண்டு இருக்கின்றோமோ, அதே மாதிரி சேலம் கூடியவிரைவில் மாறிவிடும். நமது அடுத்த தலைமுறை அங்கு எல்லாம் வாழ முடியாது என்று மிகத் தெளிவாக தெரிந்தும் அதை தடுக்க முடியாத இயலாமை தான் தன்னை கொல்லுவதாக ஒரு இளைஞர் தெரிவித்தார். *செவ்வாய்பேட்டை தெலுங்கு மக்கள் நிலை அங்கு இன்னும் ஒருவர் சொன்ன செய்தி எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது சேலத்தில் “செவ்வாய்பேட்டை” என்ற பகுதி உள்ளதாகவும் அங்கு வடமாநில மக்கள் செய்யும் அதிகாரங்களுக்கு பயந்து, தெருவுக்கு தெரு ஜெயின் கோவில்களை கட்டி புதிய கலாச்சாரத்தை புகுத்தி பத்து வருடத்தில் அங்கு பல காலமாக வாழ்ந்து வந்த தெலுங்கு மக்கள், அவர்கள் நிலங்களை விற்றுவிட்டு, அவர்கள் தொழில்களை இழந்து, இன்று அவர்களின் அடுத்த தலைமுறை பிள்ளைகள் தனியார் வங்கிகளில் மார்க்கெட்டிங் வேலை மற்றும் சென்னை போன்ற நகரங்களில் வேலை தேடி வருவதாக தெரிவித்தார். தெலுங்கு மக்களின் அனைத்து தொழில்களும் இவர்கள் வசம் சென்றுவிட்டது. அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான தெலுங்கு பேசும் மக்கள் வேறு பகுதிக்கு குடியேறிவிட்டார்கள் என்று கூறினார். திராவிடம், திராவிடம் என்று முழக்கமிடும் திராவிட கட்சிகளே நீங்கள் தமிழர்களுக்கும் நல்லது செய்யவில்லை.. இங்கு பல தலைமுறையாக வாழ்ந்து வரும் தெலுங்கு மக்கள் அடித்து விரட்டப்படாத குறையாக செவ்வாய்பேட்டை பகுதியில் அனாதையாக நிற்கும் போதும், ஏன் என்று கூட ஒரு கட்சியும் கேட்கவில்லை. எதனால் அந்த பகுதியை விட்டு தெலுங்கு மக்கள் வெளியேறி கொண்டு இருக்கின்றார்கள் என்று இதுவரை அவர்களிடம் கேட்டதுண்டா?? அவர்கள் அடுத்த தலைமுறை இப்போது நடுத்தெருவில் நிற்பது உங்களுக்கு தெரியுமா? அரசியல் தலைவர்களே வெட்கி தலைகுனியுங்கள். *அடுத்த தலைமுறைக்கு காத்து இருக்கும் பேராபத்து சென்னை, திருத்தணி, கன்னியாகுமரி என்று தமிழர்கள் ரத்தம் சிந்தி போராடி வாங்கிய பகுதிகளை எல்லாம் மார்வாடிகளிடம் மிக சாதாரணமாக இழந்து கொண்டு இருக்கின்றோம். சென்னையில் தமிழர்களை மாதவரம் தாண்டி விரட்டி விட்டார்கள். வடசென்னை பகுதியில் தமிழர்களுக்கு வீடு கூட வாடகைக்கு கிடைப்பதில்லை அதே போல் நிலைமை சேலத்திலும் கூடியவிரைவில் ஏற்படும் சூழல் வந்து உள்ளது. சேலத்தில் அடுத்த பத்து வருடத்தில் தமிழர்கள் ஓமலூர், கொண்டலாம்பட்டி தாண்டி குடியிருக்க வேண்டிய நிலை வரலாம் என்று மக்கள் தெரிவித்தார்கள் . *ஜெயின்ஸ் ஒன்லி (JAINS ONLY) - நவீன தீண்டாமை* "பிராமின்ஸ் ஒன்லி” (“Brahmins only") என்று குறிப்பிட்டப்போது, பொங்கிய திராவிட கட்சிகள் இன்று ("ஜெயின்ஸ் ஒன்லி" – Jains only) என்று குறிப்பிடும் போது வாய்பொத்தி இருப்பது ஏன்??? இவர்கள் கட்டும் கோவில் அருகில் தமிழர்கள் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றார்கள். தென் இந்தியர்கள் அவ்வளவு அருவறுப்பானவர்களா ? அப்புறம் எதற்கு தமிழ் நாட்டுக்கு வருகின்றிர்கள் ???? 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி 915 ஜெயின் மக்கள் மட்டும் தான் சேலத்தில் இருந்து உள்ளனர். வெறும் எட்டு ஆண்டுகளில் அது பல்லாயிரமாக மாறியது எப்படி ??? *கேரள அரசாங்கம் மஹாவீர், ராஜஸ்தானி, ஜெயின் கோவில் சிறுபான்மை என்று சொல்லிச்சொல்லி அதை கேடயமாக பயன்படுத்தி மெல்ல அவர்கள் அனைத்து மாநகரத்திலும் பெருபான்மையினர் ஆக மாறிவருகின்றனர். தமிழ் நாட்டில் தமிழர்கள் வாழமுடியாத பகுதிகள் உருவாகி வருகின்றது என்பது எத்தனை பெரிய அசிங்கம். தமிழ்நாடு கேட்பார் யாரும் இல்லாத நாடக மாறிவிட்டது. அடுத்த தலைமுறை பற்றி எந்த அக்கறையும் யாருக்கும் இங்கு கிடையாது. இவர்கள் கோவில்களை பயன்படுத்தி வணிகத்தை வளைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்ட கேரள அரசாங்கம் வடமாநில மக்கள் கோவில் கட்டவேண்டும் என்றால் குடியிருப்பு பகுதியில் கோவில் கட்ட அனுமதி தருவதில்லை. நேஷனல் ஹைவே பகுதியில் அரசாங்கம் கொடுக்கும் இடத்தில மட்டும் இவர்கள் கோவில் கட்டமுடியும். எந்த பகுதியிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ் நாட்டில் இவர்கள் என்ன செய்ய விரும்பினாலும் செய்யலாம். அந்த பகுதி கவுன்சிலருக்கு காசு கொடுத்தால் அனைத்திற்கும் அனுமதி கிடைக்கும். தமிழர்களை அருவெறுப்பாக நினைக்கும் வடமாநில மக்களிடம் காசு வாங்கி நம்மையே அடிமை படுத்தும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாம் அடிமை தான். சேட்டு வீடு, சேட்டு தெரு, அடுத்து சேட்டு ஊராக சேலம் மாறப்போகின்றது. *சேலம் மக்கள் கோரிக்கை சேலம் மக்களின் கோரிக்கை என்னவென்றால்… அரசியல் தலைவர்களே செவ்வாய்பேட்டை, வீரபாண்டி நகர், ஆலமரக்காடு, நாராயண நகர், சங்கர் நகர் கல்லாங்குத்து, தேவேந்திரபுரம், ரெட்டிபட்டி, சிவாய நகர் பகுதிகளில் தமிழ் மக்களிடம் சென்று பேசுங்கள் தமிழர்கள் எப்படி பயந்து வாழ்கின்றனர் என்று புரியும். அடுத்த தலைமுறை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் அரசியல் தலைவர்களே. அவர்கள் எதற்கு கோவில் கட்டுகின்றனர் என்பதை புரிந்துகொள்ளுங்கள். காசு இருக்கும் திமிரில் அவர்கள் அமைப்புகள் மூலம் நம்மை விரட்டி அடிப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துங்கள். இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் என்று எந்த மதமாக இருந்தாலும் தமிழர்களாய் ஒன்றுபடுங்கள்..இன்று செவ்வாய்பேட்டை மக்களுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை உங்களுக்கு ஏற்படும். நாம் பிரிந்து இருப்பது தான் அவர்களின் பலம். இப்போது நமக்கு தேவை ஒரே ஒரு ஒருங்கிணைப்பாளர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று அனைவரும் யோசித்துக்கொண்ட ு இருக்கின்றோம். இவர்கள் வருகையால் நிலம் இழந்தோர் , தொழில் இழந்தோர் என்று அனைவரும் ஒன்று சேரும் தருணம் இது. ஒரு குழுவாக இணைந்து அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துங ்கள். சேலம் வர்த்தகசபை இதை முன்னெடுக்க வேண்டும். அல்லது யாராவது நம்மில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் மக்களை சமூக வலைதளங்கள் மூலம் திரட்டி வரவையுங்கள். இது கூடிய விரைவில் நடக்காமல் போனால் அடுத்த தலைமுறையினர், சேலத்தின் வணிகம், நிலம் என்று அனைத்தையும் இழந்து நிற்பார்கள். இந்த பதிவை படிக்கும் போது கண்டிப்பாக தமிழ் நாட்டில் தமிழர்க்கு இந்த நிலையா என்று அனைவர்க்கும் கோபம் வரும் ஆனால் யாரை குறை சொல்லுவது… அடிப்படை அறிவு இல்லாத அரசியல் தலைவர்களையா இல்லை இந்த கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்களையா ??? “Migration need to be stopped or else you need to migrate” பதிவு: சேலம் விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக