புதன், 30 செப்டம்பர், 2020

பிரான்ஸ் ஈழத்தமிழர் வணிகம் பகுதி லா சப்பல் ஹிந்தியர் சிங்களவர் இடையூறு

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 20 ஜன., 2019, பிற்பகல் 2:57
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வேளமாலிகிதன்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் லா சப்பல் பிரதேசமானது நகரின் மிக முக்கியமானதொரு இடத்தில் அமைந்தது மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் மிக நுட்பமாக கைப்பற்றிக்கொண்ட தொழில் பேட்டை
இதற்கு முன் சிங்களவர்களால் கைப்பற்ற முயன்று தோற்ற நிகழ்வுகள் கூட உண்டு இங்கு
பல நாட்டவர்களின் கண்களை உறுத்தும் ஒரு விடயமாகவே லா சப்பல் இருந்துள்ளது
இன்றும் இருக்கிறது
ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவு ஒரு தொழில் பிரதேசத்தை கைக்குள் வைத்துக்கொண்ட இடமும் இதுவே
பிரான்சில் சாராசரியாக எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கு அண்ணளவாகத் தெரியாது. புதுவைத் தமிழர்கள் 3 இலட்சம் பேரும் ஈழத்தமிழர்கள் ஒரு இலட்சம் பேருமாக 4 இலட்சம் பேர் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.புதுவைத் தமிழர்களில் ஒரு இலட்சத்தக்கு அதிமானோர் பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான றியூனியன் தீவில் வாழ்கிறார்கள்.புதுவைத் தமிழர்கள் பிரான்சுக்கு வந்து 150 வருடங்கள் ஆகின்றது.ஈழத்தமிழர்கள் வந்து 35 வருடங்கள் ஆகின்றன.
1990 களின் நடுப்பகுதியல் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில்Gare de nord தொடரூந்து நிலைத்துக்கு அண்மையில் பாரிஸ் 10 நிர்வாகப் பிரிவிலுள்ள La Chapelle பகுதி
Quartier Tamoul (தமிழர் பகுதி) என்று அழைக்கப்பட்டு வந்தது.
லண்டனிலே பிரமாண்டமான இந்திய கடைத்தொகுதிகள் இருந்தாலும் அங்கு குஜராத்தி மற்றம் சீக்கியர்கள் என்று வட இந்தியர்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் கடைகள் சிறுபான்மையாகவுமே இருக்கின்றன.
லா சப்பல் மட்டும் தான் ஐரோப்பாவில் தமிழர்களுடைய பெரிய வணிகப் பகுதியாக இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள இடமாக லா சப்பல் திகழ்கிறது.
ஆனால் அண்மைக்காலமாக இந்தப் பகுதியில் பங்களாதேஷ் மற்றும் கேரள மாநிலத்தவர்களின் வணிக முயற்சிகள் அதிகளவுக்கு தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
பாரிசில் மானுடவியல் தொடர்பான ஆய்வு கற்கையை மேற்கொள்ளும் இத்தாலி நாட்டு இளைஞர் ஒருவர் இது பற்றி ஆராய்ந்திருக்கிறார்.அவர் தனது ஆய்வில் இந்த வணிக நிறுவனங்கள் லா சப்பல் பகுதியில் வருவதை ஊக்குவிக்குப்பதில் சிறீலங்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகளின் மறைகரம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.
அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக லா சப்பலிலுள்ள வணிகர்கள் சிலரை வினவிய போது அவர்களும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.
பாரிசிலே எவரும் எந்த இடத்திலும் எவரும் வணிகம் செய்லாம் அதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும் சீனர்கள் ஆபிரிக்கர்கள் அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு என்று பாரிசிலே வணிக பகுதிகள் இருக்கின்றன.அது போலவே தமிழர்களுக்கு என்று பிரான்சினுடைய சமத்துவம் சகோதரத்தவம் விடுதலை என்கிற அடிப்படை கோட்பாடுகளுக்கு விரோதமில்லாவகையில் லா சப்பல் பகுதி இருப்பதை தடுக்க முடியாது.
ஆனால் தமிழர்களுக்கென்று அப்படி ஒரு பகுதி இருக்க கூடாது என்ற அடிப்படையில் சிறீலங்கா இந்திய அதிகாரிகள் காய் நகர்த்தினால் அது பிரெஞ்சு அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு முறியடிக்கப்படவேண்டும்......

புலத்தமிழர் புலம்பெயர் உலகத்தமிழர் பிரான்சு ஐரோப்பா குடியேற்றம் மக்கட்தொகை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக