புதன், 30 செப்டம்பர், 2020

பார்ப்பனர் என சிவன் போற்றப்படுதல் பரிபாடல்

aathi1956 சனி, 22 டிச., 2018, பிற்பகல் 12:26 பெறுநர்: எனக்கு 47 விளக்கம் : வேலனின் அழைப்பிற்கு இணங்கத் தோன்றி அருள் புரியும் இரக்கம் உடையை அவன் பாட்டு நின் புகழ்மையைச் சரியாகக் கூறாதபோதும்,அதன் அன்பை மட்டுமே நினைந்து அவ்விடம் செல்லும் அருளாளன் நீ என்பதாம். வினைப்பயனை விதிக்கும் விதியும் நீயே என்பவர், ஏனோர் நின் வலத்தினது என்றனர். உருவு திரித்தோன் ஆதி யந்தனன் அறிந்து கொளுவ, வேத மாபூண் வையத் தேர் ஊர்ந்து, நாகம் நானா, மலை வில் லாக, - மூவகை ஆரெயில் ஒரழல் அம்பின் முளிய 25 மாதிரம் அழல வெய்து, அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான் உமையோடு புணர்ந்த காம வதுவையுள், அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி இமையா நாட்டத்து ஒருவரம் கொண்டு 30 விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன் விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்தது அரிதென மாற்றான் வாய்மையன் ஆதலில் எரிகனன் றானாக் குட்ாரிகொண் டவன்உருவு - திரிந்திட் டோனிவ் வுலகேழும் மருளக், 35 ஆதி அந்தணனாகிய பிரமதேவன் செலுத்தும் முறை யறிந்தோனாய்ச் செலுத்த, வேதங்களாகிய குதிரைகள் பூட்டப் பெற்ற வையகமாகிய தேரிலேறிச் சென்றான் சிவபிரான். மேரு மலையினை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பினை நாணாகவும் கொண்டவில்லினை, அவன் கைக்கொண்டான்.பொன் வெள்ளி இரும்பு என்னும் மூவகைப்ப்ட்ட உலோகங்களால் அமைந்த கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளைக் குறித்து ஓர் அழல் அம்பினை ஏவினான். திக்கெல்லர்ம் பற்றி எரியச் சென்ற அவ்வம்பினால், அக் கோட்டைகள் மூன்றும் எரிந்து அழிந்தன. அவன் வெற்றியைப் போற்ற நினைத்தனர் அமரர்கள். அவனைக் குறித்த வேள்வியை அவர்கள் செய்தனர். அதன் கண், அவர்கள் அளித்த அவிர்ப்பாகத்தை உண்ட சிவபிரான் தன் சீற்றம் தணிந்தான். பசுமையான கண்களைக் கொண்டவனானான். உமையம்மையை மணந்து, அவளோடுங் கூடிக கலந்த இன்பக் கலவியுள் அடங்குதலற்ற புணர்ச்சியுள் பொருந்திக்களிப்பவனும் ஆயினான். ஒளிபரப்பும் மணிகள் பதித்த அணிகளைப் பூண்டோனும், தேவர்கள் செய்த வேள்விக்கு முதல்வனாகத் திகழ்ந்தோனுமாகிய தேவர் கோமானான இந்திரன், இமைத்தலற்ற நெற்றிக்கண்ணைக் கொண்டோனான அச் சிவபிரானிடம், ! புராணம் இலக்கியம் குறிப்பு சைவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக