புதன், 30 செப்டம்பர், 2020

கோபாலகிருஷ்ண நாயுடு கொலை திக இல்லை கொளத்தூர் மணி ஒப்புக்கொண்ட நிகழ்வு

aathi1956 ஞாயி., 30 டிச., 2018, பிற்பகல் 5:27 பெறுநர்: எனக்கு மேகநாதன் முனுசாமி பொய்யன் 'கன்னட' கொளத்தூர் மணி! - Krishna Muthukumarappan (25-12-2017) ஆதிக்கவாத நாயுடுக்கள் ஆதித்தமிழ் வேளாண் குடிகளான மள்ளர்களை அவர்கள் வேளாண் நிலத்திலேயே பண்ணை அடிமைகளாக்கியதோடு... அரை மரக்கால் நெல்லை கூலி உயர்வாக கேட்ட போது அவர்களை உயிரோடு கொளுத்தி கொன்றார்கள். அந்த வகையில் தமிழ் மண்ணில் கோர சாதிப்படுகொலைகளுக்கு முதன்முதலாக வித்திட்டது கீழ்வெண்மணி படுகொலை. கூலி உயர்வு கேட்ட இரண்டு கர்ப்பிணிப்பெண்கள், பத்தொன்பது சிறுவர்கள், ஒரு எழுபது வயது முதியவர் உட்பட 44 பேரை உயிரோடு கொளுத்தினான் கோபாலகிருஷ்ண நாயுடு. அந்த கோபாலகிருஷ்ண நாயுடு திராவிடம் கொண்டாடும் சமூக நீதி காவலன் ஈ வெ ராமசாமி நாயுடுவின் நண்பன். ஈவெரா தஞ்சைக்கு செல்லும் போது அவன் வீட்டில் தங்குவதும், அவன் பண்ணையில் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு கூட்டங்கள் நடத்துவதும் வழக்கம். அந்த கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட ஈவெ ராமசாமி, கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிக்காது கம்யூனிஸ்டுகள், காந்தி, எரிந்து போனவர்கள் என அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். அந்த அறிக்கைக்கு உரை எழுதும் இன்றைய தெலுங்கு திராவிடர்கள், ஐயா அப்போது சுகமில்லாமல் இருந்தார், ஐயா பெயரில் குத்தூசி அறிக்கை வெளியிட்டு விட்டார் என பலதரப்பட்ட சாராமில்லா உரைகள் எழுதுகிறார்கள். அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அண்டப்புளுகன் கொளத்தூர் மணி செத்தவர்களையே குற்றம் சாட்டும் ஈவெ ராமசாமியின் பாசிச அறிக்கை குறித்து வாய் திறக்காமல்... அந்த 'கோபால கிருஷ்ண நாயுடுவை கொலை செய்ததே திராவிட கழகத்தினர்தான்' என்று திசைதிருப்பும் சமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை தொடர்ந்தும், சமீபத்தில் டிவியிலும் அவிழ்க்கிறார். மள்ளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டு, அதற்கு ஈவெராவின் பாசிச எதிர்வினை அரசியல் தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திராவிடர் கழகம் சமூக விடுதலை பெற்றுத் தரும் என்று நம்பி ஏமார்ந்த தோழர்கள் அதிலிருந்து வெளியேறினார்கள். கீழ்வெண்மணி படுகொலை குறித்த பாரதி கிருஷ்ணகுமாரின் 'ராமய்யாவின் குடிசை' குறும்பட வெளியீட்டு விழாவிலும் மற்றும் பல நிகழ்வுகளிலும் தோழர் தியாகு இதுகுறித்து தெரிவித்து உள்ளார். பட்டுக்கோட்டை மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் அழித்தொழிப்பில் ஈடுபட்டு, தற்போதும் வாழ்ந்து வரும் பல முன்னாள் நக்சல்பாரிகள் இதுகுறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள். 'ஊர்வலம் போனாயேடா, ஒப்பாரி வைத்தாயேடா' என்று ஈவெரா மீது நேரடியாக சீறி, பின்னாளில் நாயுடுவை கொலை செய்த ஒரு தோழர் கவிதை எழுதினார். கோபாலகிருஷ்ண நாயுடு திராவிட அரசுகளால் சாட்சியம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்ட போது, பொதுவுடமை புரட்சிகர தோழர்கள் கீழ்வெண்மணி போராளிகளின் நினைவிடத்திற்கு அருகாமையிலேயே அவனை வெட்டி வீழ்த்தினார்கள். கோபாலகிருஷ்ண நாயுடுவை அழித்தொழிப்பு செய்த 'நக்சல்பாரி லிபரேஷன் அமைப்பினர்' அதே இடத்தில் நாயுடுவின் குருதியாலேயே அதன் மத்திய கமிட்டி தலைவர் 'தோழர் வினோத் மிஸ்ரா வாழ்க' என்று எழுதி வீசி சென்றனர். நக்சல்பரிகளுக்கு மற்றவர்களின் போராட்டத்தை திருடும் வழக்கம் இல்லை என்பது அமெரிக்க சி.ஐ.ஏ தரும் சான்றிதழ். அதேவேளை, ஊரில் எங்கு பிள்ளை பிறந்தாலும் அதற்கு தனது இனிஷியலை இட்டுக்கொள்ளும் வழக்கம் திராவிட வடுகர்கள் வழக்கம் என்பது நம் தலைமுறையில் அனைவரும் அறிந்தது. அது மாயாவதியின் உபி துவங்கி மம்தாவின் வங்கம்... கேரளா, Jணூ கன்கையா குமார், சமீபத்தில் குஜராத்தின் ஜிக்னேஷ் மேத்வானி வரை பார்த்து வருகிறோம். அப்படியான அப்பட்டமான போராட்ட திருட்டும், நக்சல்பாரிகளை சென்றடைய வேண்டிய cரெடிட் ஐயும் திருடுவதுதான் வொக்காலிக வடுக புளுகன் கொளத்தூர் மணியின் செயல். இன்று தமிழ்த் தேசிய பாதையில் பயணிக்கும் 100% பேரும் இதற்கு முன்பு திராவிடத்தில் ஊறி, ராமசாமியை தொழுதவர்கள். அதற்காக, இன்றைய அவர்களின் சாதனை திராவிடத்தையா சாறும்? அதுபோலவே திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி, நக்சல்பாரி புரட்சியாளர்களாக அழித்தொழிப்பு செய்த ஒரு சிலர் எப்படி திராவிடர்கள் ஆவார்கள்? ஆயுதம் ஏந்துபவர்களையும், முதலாளிகளை, பண்ணையார்களை சீண்டுபவர்களையும் காலிகள் என்று பல நேரங்களில், குறிப்பாக அந்த கீழ்வெண்மணி அறிக்கையிலேயே சாடும் ஈவெராவின் இயக்கத்தை சார்ந்தவர்களா அழித்தொழிப்பு போராளிகள்? சாகித்ய அகாடமி உள்ளிட்ட எண்ணற்ற அரச, அதிகார வர்க்கத்தின் விருதுகளை மறுத்த கவிஞர் இன்குலாப் திராவிடத்தில் இருந்து வெளியேறி, மார்க்சீய லெனினிய பாதையில் பயணிக்க துவங்கியதற்கும் காரணம் வெண்மனியே. அரசுகளை, அதிகாரத்தை எதிர்ப்பதாக பாவலா செய்து கொண்டே, பிராமணர்களுக்கும் ஒட்டு பொறுக்கியதும், அரசதிகாரத்தின் விருதுகளை வாங்கி அலங்காரம் செய்துகொண்டவர்களும் யாரென அறிவோம் அதுமட்டும் இல்லை. கோபாலகிருஷ்ண நாயுடு சிறையில் இருக்கும்போது ஈவெரா மற்றும் அண்ணாதுரையின் முகவர்கள் சிறையில் அவனை சந்தித்ததாக தோழர்கள் பதிவு செய்திருக்கிறார ்கள். கோபாலகிருஷ்ண நாயுடுவுக்காக மிராசுதார்களை திரட்டி, அந்த வழக்கை நடத்தி வெற்றி கண்டவர், திருமா தனது புரட்சியாளர் என்று பெருமிதப்படும் நிலச்சுவான்தார் திரு ஜிகே மூப்பனார். திராவிட அமைப்புகளுக்கு காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த செல்லப்பிள்ளை ஜிகே மூப்பனார் என்பதை அறிவோம். வழக்கில் விடுதலையான கோபாலகிருஷ்ண நாயுடுவை அண்ணாத்துரை உள்ளிட்ட எண்ணற்ற திராவிட இயக்க தலைவர்கள் சந்தித்ததை பல புரட்சிகர தோழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாது, இப்படியாக வரலாற்றை புறட்டியும், திரித்தும் தமிழினத்தை வீழ்த்தியதோடு... தொடர்ந்து ஒடுக்கப்பட்ட தமிழ் சொந்தங்களை ஏமாற்றி, தங்களுக்கு சேவகம் செய்ய வைத்து... ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த சான்றோர்களை மறைத்து, அவ்விடத்தில் 'ஈவெரா சிலையை' நிறுவியது திராவிடம். தமிழர்களை வீழ்த்தி, அடக்கி அடிமைப்படுத்த வந்தவர்களையே திராவிட ஆட்சியாளர்களாக்கியது... தங்களை கொலை செய்தவர்களேயே வணங்க வைத்து சமூக நீதி காவலர்களாக்கியது என எத்தனை எத்தனை பொய்யும், புரட்டும்..? இதற்கெல்லாம் காரணம் திராவிடம் எனும் போலி கருத்தியல், அதன் சூத்திரதாரி ஈவெரா எனும் இனப்பகைவன். அவனை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ வைக்க முயல்பவர்களை அழித்தொழிக்கும் வரலாற்று கடமை தமிழ்த் தேசிய தோழர்களை சாரும்! ---- கோபாலகிருஷ்ண நாயுடுவை பின்னாளில் கொலை செய்து பழித்தீர்த்தவர்கள் எம்.எல். கட்சியினரே என்று நியூஸ் 18 தமிழ் செய்தித் தொலைக்காட்சியில் இன்று (25-12-2017) காலை சரியாக 9 மணிக்கு கொளத்தூர் மணி ஒப்ப்புக்கொண்டா ன். ஆனல் அக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் தி.க.வினர் என்றும் அவர் கூறினான். அவர்கள் அக்கொலையை (பழிவாங்கலை) ஆதரித்து பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்றும் கூறினான். - Kannan Mahalingam இந்த சம்பவம் நடைபெற்றபோது திமுக அண்ணாதுரைதான் முதல்வர். திராவிடம் தெலுங்கர்களுக்கானது என்பதை திராவிடத்தின் முதல் முதல்வரே நிருபித்துவிட்டுத்தான் சென்றார். நேற்று, பிற்பகல் 12:18 · Facebook for Android · பொது நக்சலைட் அழித்தொழிப்பு கம்யூனிஸ்ட் கீழவெண்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக