புதன், 30 செப்டம்பர், 2020

மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பானது என கட்டுரை

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 25 ஜன., 2019, பிற்பகல் 4:49
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
(1) மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய இயலாது!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் (Ilango Pichandy )
---------------------------------------------------------------
முன்குறிப்பு: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்று நீட்டி முழக்குவதற்குப் பதிலாக EVM என்று இனி இக்கட்டுரை முழுவதும் சொல்லப்படும்.
---------------------------------------------------------------------------
----------
1) இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1982ல் முதன் முதலாக EVM அறிமுகப் படுத்தப்பட்டது. பரீட்சார்த்த முறையில் கேரள மாநிலம் வடக்கு பரவூர் தொகுதியின் சில வாக்குச் சாவடிகளில் EVMகள் மூலம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
2) தேர்தலில் EVMகளைக் கொண்டு வந்தது காங்கிரசின் மகத்தான சாதனை ஆகும். காங்கிரஸ் கட்சியானது அறிவியலுக்குச் செய்த நன்மைகளில் இதுவும் ஒன்று.
3) 1999ல் சிறிய மாநிலமான கோவாவில் தேர்தல் முழுவதுமே EVM மூலமாக நடத்தப்பட்டது.
4) நாடு முழுவதும் 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முழுவதுமாக EVM மூலமாக நடத்தப் பட்டது. மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் EVM மூலம் நடத்தப்பட்ட முதல் தேர்தல் இதுதான்.
5) 2004 தேர்தல் EVM மூலமே நடக்கும் என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தபோது பிரதமராக இருந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய்.
6) EVM மூலமாக நடந்த 2004 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.
7) அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலும் EVM மூலமாகவே நடந்தன. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும்
காங்கிரஸ் வெற்றி பெற்று, டாக்டர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆனார். 2014ல் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனார்.
8) ஆக, தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்கள் EVM மூலமாகவே நடைபெற்றுள்ளன.
இந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களும், பல்வேறு இடைத்தேர்தல்களும் EVM மூலமாகவே
நடைபெற்று உள்ளன. இவ்வாறு EVM இந்தியத் தேர்தல்களில் நிலைபேறு உடையதாக ஆகிவிட்டது.
9) டாக்டர் சுப்பிரமணியம் சாமி EVM குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள்
தொடுத்தார். வாக்காளர்கள் தாங்கள் என்ன சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்திட ஏதேனும் ஒரு நிரூபணம் தரப்பட வேண்டும் என்றும் EVMகளில் அத்தகைய நிரூபணம்
இல்லை என்றும் டாக்டர் சுவாமி டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது வழக்கு தள்ளுபடியானது.
10) இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுவாமிவழக்குத் தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் மனுதாரர் கூறியவாறு ஒரு நிரூபணத்தை வழங்க வேண்டும்
என்று தீர்ப்பளித்தது. பிரசித்தி பெற்ற இந்தத் தீர்ப்பை வழங்கியவர் அன்றைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்கள்.
11) இத்தீர்ப்பின் விளைவாக VVPAT எனப்படும் Voter Verifiable Paper Audit Trail EVMகளில் பொருத்தப் பட்டது. வாக்களித்த பின்னர் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தோம் என்று வாக்காளர் சரி பார்க்கும் வசதி EVMகளில் ஏற்படுத்தப் பட்டது.
12) வாக்காளர்களின் இந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி என்பது வரலாறு.
13) பரீட்சார்த்த முறையில் முதன் முதலாக நாகாலாந்து மாநிலத்தில் உள்ள நோக்சென் (Noksen) சட்டமன்றத் தொகுதியில் செப்டம்பர் 2013ல் VVPAT பயன்படுத்தப் பட்டது.
14) 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னோடித்திட்டம் என்ற பெயரில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் VVPAT அறிமுகப்
படுத்தப் பட்டது. அந்த எட்டில் மத்திய சென்னைத் தொகுதியும் ஒன்று. இக்கட்டுரை ஆசிரியர் மத்திய சென்னைத் தொகுதியைச் சேர்ந்தவர்
என்பதால், வாக்களித்த பின், வாக்களித்த சின்னத்திற்கே வாக்கு பதிவாகி இருக்கிறதா என்று அதாவது
VVPAT சரியாக வேலை செய்கிறதா என்று சரிபார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். VVPAT அற்புதமாக வேலை செய்தது.
15) நாட்டின் 543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்பட்ட EVM மூலமாகவே வாக்குப் பதிவு நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. எனவே வரவிருக்கும் 2019 தேர்தலில் அநேகமாக 543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்பட்ட EVM நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
15) மறைந்த எழுத்தாளர் சுஜாதா பற்றிக்
குறிப்பிடாவிட்டால் இந்தக் கட்டுரை முழுமைஅடையாது; மூளியாகவே இருக்கும். பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் பொறியாளராக இருந்த சுஜாதா EVM உருவாக்கக் குழுவில் இடம் பெற்று சாதனை புரிந்தவர் ஆவார். 1982ல் நடந்த வடக்கு பரவூர் (கேரளம்) தேர்தலில், சுஜாதாவே நேரடியாக தொகுதிக்குச் சென்று EVMஐ இயக்கிக் காட்டினார்.
16) இக்கட்டுரையின் அறிவியல் பகுதி நாளை வெளியாகும்.
..............தொடரும்...............
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு: VVPAT முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட 2013 செப்டம்பரிலேயே நியூட்டன் அறிவியல் மன்றம் VVPAT குறித்து கூட்டங்கள் நடத்தியது. பிறர் நடத்திய பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றும் விளக்கம் அளித்தது. இது வரலாறு.

2) மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய இயலாது!
கட்டுரைத் தொடரின் பகுதி-2.
---------------------------------------------------------------------------
--------
நியூட்டன் அறிவியல் மன்றம் (Ilango Pichandy )
---------------------------------------------------------------------------
அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலுமே EVM முறை கைவிடப்பட்டு காகித வாக்குச் சீட்டு (paper ballot) முறை வந்து விட்ட பிறகு , நாம் ஏன் EVMகளை (Electronic Voting Machines) கட்டிக்கொண்டு அழ வேண்டும் என்பது EVM எதிர்ப்பாளர்களின் வாதம்.
அமெரிக்காக்காரன் எவனும் ஒரே மனைவியோடு காலம் பூராவும் வாழ்வதில்லை. நாம் ஏன் ஒரே பொண்டாட்டியை ஆயுள் முழுவதும் கட்டிக்கொண்டு அழ வேண்டும்? நம் பொண்டாட்டிகளை விவாகரத்து செய்தால் என்ன என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
மேலும் அமெரிக்காவும் எல்லா ஐரோப்பிய நாடுகளும் EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு முறைக்கு வந்து விட்டன என்று கூறுவது உண்மையல்ல. ஒரு சில நாடுகள் காகித வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பி இருப்பது உண்மையே. ஜெர்மனியில் அந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் (German Constitutional Court) 2009ல் வழங்கிய தீர்ப்பின்படி, ஜெர்மனி காகித வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பி இருக்கிறது. இது போல ஒருசில நாடுகள், அங்குள்ள குறிப்பான சூழல்கள் காரணமாக EVM முறையைக் கைவிட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டுப் போடுவது, மக்களில் சில பிரிவினரை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தேர்தல் அதிகாரியை மிரட்டி தேர்தல் முடிவை மாற்றிச் சொல்லுவது ஆகிய நடைமுறைகள் மேற்கூறிய நாடுகளில் இல்லை என்பதால் வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் திரும்புவதால் அங்கெல்லாம் எந்த நஷ்டமும் கிடையாது.
இந்தியாவில் அப்படி அல்ல. வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்புவதானது எவ்விதத்திலும் நிலைமையைச் சீராக்காது என்பதுடன் முன்னிலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்பது கண்கூடு.
சரி, ஜெர்மனி போன்ற நாடுகள் ஏன் EVMகளைக் கைவிட்டன? அங்கெல்லாம் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையுமே முழுவதுமாகக் கணினிமயம் ஆக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவிலும் அப்படியே. அதாவது வேட்பு மனு தாக்கல் செய்வது முதல் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பது வரை அனைத்துமே கணினிமயம்.
இதன் காரணமாக அந்நாடுகளின் EVMகள் தகவல் தொடர்பு வலைப்பின்னலுடன் இணைக்கப் பட்டவையாக இருந்தன (connected to a communication network). நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட EVMகளை மிகவும் சுலபமாக ஹேக் (hack) செய்ய முடியும். அதாவது அத்தகைய EVMகளின் முடிவுகளை எவர் வேண்டுமானாலும் எளிதில் திருத்த முடியும்.
நம் நாட்டின் EVMகள் அனைத்தும் எந்த வலைப்பின்னலுடன் இணைக்கப்படாத தனித்த கணினிகள். அதாவது நம் நாட்டு EVMகள் stand alone வகைக் கணினிகள்.
நம் நாட்டில் ஒட்டு மொத்த தேர்தல் நடைமுறையானது முழுவதுமாகக் கணினிமயம் ஆக்கப் படவில்லை. வாக்குப்பதிவு மட்டுமே இங்கு கணினி மூலமாக (அதாவது EVMகள் மூலமாக) நடைபெறுகிறது. மீதி அனைத்தும் மனிதச் செயல்பாடுதான் (manual actions).
எனவே மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், நமது EVMகள் அனைத்தும் stand alone தன்மையிலானவை. அதாவது நெட்வொர்க்குடன் இணைக்கப்
படாதவை. இவற்றை ஹேக் (hack) செய்வது எளிதல்ல.
அப்படியானால், நம் நாட்டின் standalone EVMக்கும், பிற நாடுகளின் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட EVMக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளதா என்று கேட்டால், ஆம் ஆம் என்று அடித்துக் கூறலாம்.
நம் நாட்டின் EVMகளுடன் எந்த ஒரு "தொடர்புக்கருவி"யையும் (communication device) பொருத்த முடியாது. ஒரு ப்ளூ டூத் (Bluetooth) கருவியையோ அல்லது வேறு ஏதாவது வயர்லெஸ் கருவியையோ (Wi-Fi device) நம் நாட்டு EVMகளில் பொருத்த முடியாது. ஏதேனும் கருவியைப் பொருத்துவதற்கான ஏற்பி (receptor) எதுவும் நம் EVMகளில் கிடையாது.
வீட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு பாதுகாப்புடன் இருக்கும் பெண் போன்றது standalone EVM. வெளியில் நள்ளிரவில் சாலையில் நடந்து செல்லும் பெண் போன்றது நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட EVM.
அப்படியானால், இந்தியாவின் standalone EVMஐ ஹேக் (hack) செய்யவே முடியாதா?... முடியும் என்றால், அதற்கான நிகழ்தகவு (probability) என்ன என்று எவரும் கேட்கலாம்.
இதற்கு அறிவியல் கூறும் விடை இதுதான். Yes, it can be hacked and there is a NON ZERO probability for hacking.
இதன் பொருள் என்ன?
நம் நாட்டின் standalone EVMகளையும்
ஹேக் (hack) பண்ண முடியும். ஆனால் அதற்கு அந்த EVMகளுடன் PHYSICAL ACCESS வேண்டும். அதாவது அந்த EVMகளைக் கைப்பற்றினால் மட்டுமே
அவற்றை ஹேக் பண்ண முடியும்.
EVMகளைக் கைப்பற்றுவது என்பது எளிதல்ல. எனவே நம் நாட்டு EVMகள் பாதுகாப்பானவை. அவை வெளியில் இருந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஹேக் பண்ண முடியாதவை. மிக எளிமையாகவும் குறைந்த நேரத்திலும் அவற்றை ஹேக் பண்ண இயலாது.
பூஜ்யமற்ற நிகழ்தகவு (non zero probability) என்பது கோட்பாட்டு ரீதியாகக் கூறப்படும் ஒன்று (a theoretical possibility). மிக மிக அற்பமான நிகழ்தகவையே பூஜ்யமற்ற நிகழ்தகவு (non zero probability) என்னும் சொல் குறிப்பிடுகிறது.
Probability always lies between 0 and 1 என்ற கோட்பாட்டைக் கணக்கில் கொண்டால், பூஜ்யமற்ற நிகழ்தகவு என்பது 0வுக்கு மிக நெருக்கமாக இருப்பது என்ற புரிதலுடனே இந்தப் பகுதியை வாசகர்கள் படிக்க வேண்டும். பூஜ்யமற்ற நிகழ்தகவானது நடைமுறையில் சாத்தியப் படுவது என்பது கணக்கற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டது; நிறைவேற்ற இயலாத
நிபந்தனைகளையும் உள்ளடக்கியது.
இதுதான் உண்மை! இது மட்டுமே உண்மை!
--------------------------------------------------------------------------------
தொடரும்

Ilango Pichandy , Kesavan Chidambaram மற்றும்
8 பேருடன் இருக்கிறார்.
(3) வாருங்கள்! வந்து எங்கள் EVMகளை
ஹேக் (hack) செய்து காட்டுங்கள் என்ற
தேர்தல் ஆணையத்தின் சவாலை ஏற்க நாதி இல்லை!
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலாது! தொடர் கட்டுரை பகுதி-3.
---------------------------------------------------------------------------
-------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
-------
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMகளை
ஹேக் செய்ய எவனும் இன்னும் பிறக்கவில்லை!
இந்தக் கூற்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நிரூபிக்கப்
பட்ட எந்தக் கூற்றும் கணிதத்தில் ஒரு தேற்றமாகக்
கருதப்படும். (Any statement which is proved is a theorem).
எனவே நியூட்டன் அறிவியல் மன்றத்தின் மேற்கண்ட
கூற்றும் பித்தகோரஸ் தேற்றம், அப்பலோனியஸ்
தேற்றம் போல ஒரு தேற்றமே ஆகும்.
2017 பெப்ரவரி- மார்ச்சில் இந்தியாவில் ஐந்து
மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்,
மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களே
அவை. உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
மாயாவதியும் அகிலேஷ் யாதவும் படுதோல்வி
அடைந்தனர்.
தங்களின் தோல்விக்குக் காரணம் EVMகளே என்று
அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் மூலம் EVMகளின்
நம்பகத் தன்மை மீது ஐயத்தை ஏற்படுத்தினர்.
எனவே EVMகளின் நம்பகத் தன்மையை உறுதி
செய்யவும், அரசியல் கட்சிகளின் ஐயங்களைப்
போக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் முன்வந்து
பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அ) 12 மே 2017ல் நாட்டிலுள்ள தேசியக் கட்சிகளையும்
மாநிலக் கட்சிகளையும் அழைத்து EVM குறித்து
விளக்கம் அளித்ததுடன் அவர்களின் ஐயங்களையும்
இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டுத் தெரிந்து
கொண்டது. இதில் 42 கட்சிகள் பங்கேற்றன.
பெருவாரியான கட்சிகள் EVMகள் மீது நம்பிக்கை
தெரிவித்தன.ஒரு சில கட்சிகள் மட்டுமே
ஐயங்களைக் கூறின.
ஆ) 20 மே 2017ல் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு
செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இதில் EVMகளின்
செயல்முறையை விளக்கியும், ஐயங்களைப்
போக்கியும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இச்சந்திப்பில் EVM Challenge எனப்படும் EVM சவாலை
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இ) EVMகளில் மோசடி செய்ய முடியாது என்றும்
மோசடி செய்ய முடியுமானால் அதை நிரூபித்துக்
காட்டுமாறும் இந்தியத் தேர்தல் ஆணையம் சவால்
விடுத்தது. செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக
விடப்பட்ட சவால் இது. இந்தச் சவாலில் பங்கேற்குமாறு
தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு அன்றைய தினமே
(20 மே 2017) அழைப்பு அனுப்பப் பட்டது.
ஈ) 2017 ஜூன் 3 தேதியானது சவாலுக்கான நாளாக
நிர்ணயிக்கப் பட்டது. சவாலில் பங்கேற்கும் அரசியல்
கட்சிகள் தங்கள் பங்கேற்பைத் தெரிவிக்க 26 ஜூன் 2017
மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப் பட்டது.
எனினும் மார்க்சிஸ்ட் கட்சி (CPM), சரத் பவரின்
தேசியவாத (NCP) காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள்
மட்டுமே சவாலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து
இருந்தன.
உ) நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில்
பயன்படுத்தப்பட்ட எந்தவொரு EVM எந்திரத்தையும்
சோதித்துப் பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்து இருந்தது. அதாவது மேற்கூறிய ஐந்து
மாநிலங்களில் இருந்து எந்தத் தொகுதியில்,
எந்த பூத்தில் பயன்படுத்தப்பட்ட EVMஐயும்
சோதிக்கலாம் என்றும், எந்தெந்த EVMகள்
கொண்டுவரப் பட வேண்டும் என்று அரசியல்
கட்சிகள் விருப்பம் தெரிவிக்கலாம் என்றும்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
ஊ) இருப்பினும் இன்னின்ன EVMகள் வேண்டும் என்று
எந்தக் கட்சியும் கோரவில்லை. எனவே தேர்தல்
ஆணையம், கட்டுக்காவல் மிகுந்த அறைகளில்
(strong rooms) சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த
EVMகளை முற்றிலும் தற்போக்கான முறையில்
தெரிவு செய்து (random selection) சவாலுக்கு முன்வைத்தது.
உ.பி, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மூன்று
மாநிலங்களில் உள்ள 12 சட்ட மன்றத் தொகுதிகளில்
இருந்து மொத்தம் 14 EVMகள் இவ்வாறு கொண்டு
வரப்பட்டன.
எ) சவால் நாளான 3 ஜூன் 2017 அன்று, மார்க்சிஸ்ட்
கட்சி, தான் சவாலில் பங்கேற்க வரவில்லை என்றும்
தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள
மட்டுமே வந்ததாகக் கூறியது.
ஏ) திருமதி வந்தனா சவான் தலைமையில் வந்த
தேசியவாத காங்கிரசும் அவ்வாறே கூறியது.
வந்திருந்த இவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும்
தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்
குழுவினர் EVMகளின் செய்முறை விளக்கம்
அளித்தனர்.
(:ஆதாரம்: அ முதல் ஏ வரையிலான பத்திகளில்
கூறப்பட்ட விவரங்களுக்கான ஆதாரம், EVM சவால்
முடிவுற்ற உடன் (03 ஜூன் 2017) இந்தியத் தேர்தல்
ஆணையம் வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பு
மற்றும் செய்தியாளர் சந்திப்பு)
ஆக, வாக்குப் பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய
முடியும் என்று கூறியவர்கள் எவரும் அதை நிரூபிக்க
முன்வரவில்லை. கொள்ளையடிப்பது, ஊழல்
செய்வது, பதவிச் சுகங்களை அநுபவிப்பது
ஆகியவை தவிர வேறெதிலும் அக்கறையற்ற
முற்றிலும் தற்குறிகளையும் கிரிமினல்களையும்
கொண்ட அரசியல் கட்சிகள் எவ்வளவு
பொறுப்பற்றவை என்பதையும் நம்பகத்தன்மை
துளியும் இல்லாதவை என்பதையும் EVM சவால் என்ற
இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
இதற்கப்புறமும் EVMகளை ஹேக் செய்ய முடியும்
என்று நம்பும் அப்பாவிகள் உண்மையை உணர வேண்டும்.
ஆக மொத்தத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின்
EVMகளை எந்தக் கொம்பாதி கொம்பனாலும்
ஹேக் (hack) பண்ண முடியாது என்பதை இதன் மூலம்
நியூட்டன் அறிவியல் மன்றம் நிரூபிக்கிறது. QED.
*********************************************
*************
நேற்று, பிற்பகல் 4:11

(4) சையது சுஜா என்பவர் EVMஐ ஹேக் செய்தாரா?
ஹேக் பண்ணியதாகக் கூறுவது பொய்!
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலாது!
கட்டுரைத் தொடரின் நான்காவது கட்டுரை!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
லண்டனில் ஒரு கூட்டம் அண்மையில் ஏற்பாடு
செய்யப் பட்டது. சையது சுஜா என்பவர் இக்கூட்டத்தில்
பங்கேற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின்
EVMஐ ஹேக் (hack) செய்து காட்டப் போவதாக ஆரவாரமான அறிவிப்புக்கள் வெளியாயின.
ஆனால் திரு சையது சுஜா அந்தக் கூட்டத்திற்கு
வரவில்லை; லண்டனுக்கே வரவில்லை. மாறாக
அமெரிக்காவில் இருந்து கொண்டு ஸ்கைப்
தொலைபேசி மூலம் பேசினார்.அவ்வளவுதான்.
இதை வைத்துக் கொண்டு திரு சையது சுஜா
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMஐ ஹேக்
செய்து விட்டதாக பொய்ச் செய்திகள் உலா
வந்தன.
திரு சையது சுஜாவோ அல்லது வேறு யாருமோ
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMஐ இந்த
நிமிடம் வரை ஹேக் செய்யவில்லை. ஹேக்
செய்யவும் எவராலும் இயலவில்லை. இதுதான்
உண்மை.
மாறாக, திரு சையது சுஜா என்பவர் EVMஐ ஹேக்
செய்து காட்டி விட்டதாக நம்புபவர்கள் தமிழ்
நாட்டில் கணிசமாக இருக்கிறார்கள். இவர்கள்
முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறவர்கள்.
(They live in Fool's paradise).
இப்படிப்பட்டவர்கள் EVMகளால் ஆபத்து என்று
கூச்சல் இடுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது!
அந்தக் காலத்துப் பட்டிக்காட்டுக் கிழவிகள்
நம்பியாரால் எம்ஜியாருக்கு ஆபத்து என்று
பதறுவதைப் போல இவர்களும் பதறுகிறார்கள்.
திரு சையது சுஜா லண்டனுக்கு வர வேண்டாம்,
இந்தியாவுக்கும் வர வேண்டாம். இருக்கும்
இடத்திலேயே அவர் இருந்து கொண்டு, இந்தியத்
தேர்தல் ஆணையத்தின் EVMஐ ஹேக் செய்வதற்கு
உரிய algorithmஐ பகிரங்கமாக வெளியிடலாமே!
(algorithm = step by step commands, அதாவது கணினியில்
படிப்படியாகச் செய்ய வேண்டிய உத்தரவுகளின்
(தொகுப்பு).
அல்லது லண்டனில் அவர் செய்து காட்டப் போவதாக
அறிவித்த EVM hackingஐ, அவர் காமிரா முன்பாக
செய்து காட்டி, அதை யூடியூபில் வீடியோவாக
வெளியிடலாமே! அதை யாரும் தடுக்கவில்லையே!
நியூட்டன் அறிவியல் மன்றம் திரு சையது சுஜா
அவர்களிடம் இவ்விரு கேள்விகளையும் கேட்கிறது.
1) EVM hacking செய்வது பற்றிய algorithmஐ
வெளியிடுங்கள்.
2) அல்லது EVM hackingஐ நீங்களே உங்கள் நண்பர்கள்
முன்னிலையில் செய்துகாட்டி, அதை காமிராவில்
படமெடுத்து யூடியூப் வீடியோவாக வெளியிடுங்கள்.
உண்மையிலேயே EVM hacking செய்ய முடிந்த
ஒருவரால், இந்த இரண்டையும் வெகு சுலபமாகச்
செய்ய முடியும். இது எலக்ட்ரானிக் யுகம். ஒரு
மொபைல் போன் இருந்தால் போதும். மொபைல்
போனில் உள்ள காமிராவில் EVM hackingஐ படம்
எடுத்து யூடியூபில் வீடியோவாக வெளியிடலாம்.
தன்னை ஒரு எலக்ட்ரானிக் நிபுணர் என்று
சொல்லிக் கொள்ளும் திரு சையது சுஜாவுக்கு
இந்த எளிய வழிமுறைகூடத் தெரியாதா?
ஆனால் திரு சையது சுஜா இதைச் செய்யவில்லை;
செய்ய முன்வரவும் இல்லை. இதிலிருந்தே
திரு சையது சுஜா ஒரு மோசடிப் பேர்வழி என்பது
நிரூபணம் ஆகிறது.
திரு சையது சுஜா ஏதோ மலையைப் புரட்டி
விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்யும் அவரின் திடீர்
ரசிகர்கள், அவர் ஏன் தனது ஹேக்கிங்கை (hacking)
வீடியோவாக வெளியிடவில்லை என்று
சிந்தித்தாலே உண்மை விளங்கும்.
இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம்
(scientifically illiterate nation). அழுகிப் போன
நிலவுடைமைச் சமூகத்தின் பிற்போக்குச்
சிந்தனைகளில் இருந்து விடுபடாத, விடுபட
முயலாத மக்களைக் கொண்டுள்ள தேசம்.
எனவே திரு சையது சுஜா போன்ற மோசடிப்
பேர்வழிகள், இங்கு எந்த நச்சை வேண்டுமானாலும்
விதைத்து விட்டுப் போக முடியும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு. .
*********************************************
*********
17 மணி நேரம்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/03/blog-post_12.html?m=0
வாக்குச்சீட்டு பயன்படுத்தும் நாடுகள்

தேர்தல் வாக்குச்சீட்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக