செவ்வாய், 29 செப்டம்பர், 2020

நெய்வேலி அரச ஆலை 40 கிராமங்களை காவு கேட்கிறது காவிரி சாராத டெல்டா

aathi1956 வியா., 20 டிச., 2018, பிற்பகல் 5:09 பெறுநர்: எனக்கு Tamil King , மேகநாதன் முனுசாமி மற்றும் 30 பேருடன் இருக்கிறார். ஏற்கெனவே 80 க்கும் மேற்பட்ட கிராமங்களை விழுங்கிய நெய்வேலி NLC நிறுவனம் தற்போது எமது கிராமம் உட்பட மேலும் 40 கிராமங்களை விழுங்க திட்டமிடுகிறது.தற்போது இயங்கும் 2வது சுரங்கத்தில் இன்னும் 15 வருடங்கள் வெட்டியெடுக்கும் அளவிற்கு நிலக்கரி உள்ள நிலையில் வலுகட்டமாக மூன்றாவது சுரங்கத்தை அமைத்து எமது கிராமம் உடபட நாற்பது கிராமங்களை தரைமட்டமாக துடைத்துவிட்டு தமிழக கனிம வளங்களை திருடிசெல்ல இந்தியம் முனைகிறது.மின்சார தேவையை பூர்த்தி செய்ய உலக நாடுகள் மாற்று வழிகளுக்கு மாறிவரும் சூழ்நிலையில் இன்னும் இந்தியா மட்டும் மக்களின் வாழ்வாதாரங்களை,வாழிடங்களை அழித்து திரந்தவெளி சுரங்கம் அமைத்து இன்னும் நிலக்கரி மின்சாரத்தை அதிகப்படுத்துகி றது.காரணம் தமிழக வளங்களை ,வாழிடங்களை எவ்வளவு அழித்து சென்றாலும கேட்பதற்கு நாதி இல்லாததே! 80 கிராமங்களை தொடர்ந்து மேலும் 40 கிராமங்களை வரைபடத்திலிருந்து அழித்து அகதிகளாக்க இந்தியம் திட்டமிடுகிறது.அவர்கள் தற்போது தேர்ந்தெடுத்துள்ள கிராம பகுதிகள் அனைத்தும் பொன்விளையும் பூமி.அனைத்து பயிர்களும் விளைய்க்கூடிய கடலூர் மாவட்ட விவசாயத்தின் இதயப்பகுதி.என் எல்சி வரவிற்கு முன்பு ஆர்ட்டீசியன் ஊற்றுகளால் தண்ணீர் பாசனம் செய்த பகுதி! இப்போது தண்ணீர் பஞ்சமே வர வாய்ப்பிள்ளாத பகுதி.ஏனெனில் இங்குள்ள ஆறுகள்(வெள்ளாறு ,மணிமுத்தாறு) இரண்டும் தமிழகத்திலேயே உற்பத்தியாகி வருவதால் தண்ணீர் பிரச்சனையே இல்லை.இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சென்னை வரை சென்று மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்கிறது. தமிழகத்தில் மழை பொய்த்து போனாலும்,காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றாலும் அந்த பகுதிகளில் விவசாயம் நின்றுவிடும்,ஆனால் அதுபோன்ற சமயங்களிலேயே எந்த தண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் சிறப்பாக விவசாயம் செய்யப்பட்டு அந்த சமயங்களில் தமிழகத்தின் உணவுத்தேவையை,கால்நடைக்கு தேவையான வைக்கோல் போன்றவற்றை பூர்த்தி செய்து காப்பாற்றுவது இந்த பகுதியே. தற்போது இரண்டு வருடத்திற்கு முன்பு டெல்டா காய்ந்த போது,மற்ற தமிழக பகுதிகள் வரட்சியால் சிக்கியபோது அப்போது கால்நாடைகளுக்கு தேவையான வைக்கோலே அதிக விலைகொடுத்து தமிழகதின் பல பகுதிகளில் இருந்து வந்து வாங்கி சென்றனர். இந்த பகுதியில் நெல் ,எள்,கரும்பு,கம்பு,கேழ்வரகு,கா ய்கறிகள்,சோளம்,பருத்தி,பூ வகைகள்..etc ஆகிய அனைத்து பயிர்களும் தரமாக வளரக்கூடிய சிறந்த மண்வளம் கொண்ட பகுதி. தமிழக வரட்சி காலங்களிலும் பயிர் சாகுபடி சிறப்பாக செய்யப்பட்டு தமிழகத்தின் உணவுத்தேவையை சரிசெய்யும் இப்பகுதி அழிக்கப்பட்டால் வரட்சி காலங்களில் தமிழகம் மிகப்பெரிய பேரழிவில் சிக்கும்.இப்பகுதியை நேரில் வந்துபார்த்தால் அசந்துபோவீர்கள் .அந்தஅளவிற்கு தரமான மண்வளமும்,நீர் வளமும் கொண்ட பகுதி.இத்தகைய வளமான பகுதியை அடியோடு விழுங்க முனைகிறது இந்திய என்எல்சி நிறுவனம்.என்எல்சியின் இத்தகைய அறிவிப்பை தொடர்ந்து இங்குள்ள மக்கள் அச்சத்துடனும் மிகுந்த போராட்ட எழுச்சியுடனும் உள்ளார்கள்! இப்பகுதி அழிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டால் மட்டுமே தமிழகம் வரட்சி காலங்களில் உணவு பஞ்ச்த்தில் சிக்காமல் தப்பிக்கலாம்.எனவே இப்பகுதி இந்தியத்தின் பேரழிப்பில் சிக்காமல் தப்பிக்க அனைவரும் கைகொடுங்கள்! எமது போராட்டத்திற்கு ஆதரவாக பின் நில்லுங்கள்! # GoBackNLC 16 மணி நேரம் வேளாண்மை அரச கார்ப்பரேட் நிலக்கரி மண்ணழிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக