சனி, 3 ஜூன், 2017

அர் வேர்ச்சொல் அரு ஆர் அரி ஆரியர் அரசர் ர்

aathi tamil aathi1956@gmail.com

18/12/14
பெறுநர்: எனக்கு
தொல்பழந்தமிழின் வேர்ச்சொற்களில் ஒன்று அர்
அதுநீண்டு ஆர் ஆகும். அர் என்பதை ஆய்வோம். அர்
என்பது மணல்மேடு குவியலாகக்
கிடக்கும்போது காற்று அடித்தால் அர் என்றும் சர்
என்றும் அரிக்கும்.சரியும். பழங்காலத்தில் சர்
என்பதை நீக்கி அர் எனக்கொண்டனர். அர் +அம்=அரம்.அரம்
இரும்பை அறுக்கும்.அர்+இ=அரி.அர்+உ=அரு.
அருகன்=சமணர்களின் உருவமற்றக் கடவுள்,அரிவாள்
அறுக்கக் கூடியக் கருவி. இதைக் கொண்டு வயலில்
அறுவடை செய்யலாம். அர்+ஐ=அரை.அரை=ப
ாதி.சிதைக்கப்பட்டு பாதிஆனப் பொருள். அர்
+அ=அர<அரயன்<அரையன்=மன்னன்.வேந்தன்.
பல்வேட்டு அரையன்.பழுவேட்டரையன். முத்தரையன்.
தொண்டைமான் இளந்திரையன்.இதில் அரையன் என்ற பெயர்கள்
உள்ளன.அரையன்=குறுநில மன்னன்.சிற்றரசன்.
 முடியுடைய மன்னன் அரசன்.அவனுக்குக் காசடிக்கும்
அதிகாரம் உண்டு.அரையர்களூ
க்கு முடியுடை கிடையாது. காசடிக்கும்
அதிகாரம் கிடையாது. பேரரசர்களுக்குக் கீழ்
சிற்றரசர்களாக இருக்கவேண்டும். சிற்றரசன்<அரையன்.
பேரரசர்< முடியுடைய சேர சோழ பாண்டியர்கள்
போலவாகும். அரசர்கள் இல்லாமல்
சிற்றரசர்களாலே சோழர்களின் கீழ் ஆண்டப்
பகுதி இராயல்லா சீமை<இராயல சீமை! கிருட்டின
தேவராயர் வரும்வரை சிற்றரசர்களாலே ஆளப்பட்ட இடம்
இராயலசீமை. இராயர்<அரையர்.அரசர் என்பதில் சகரம்
உள்ளது.சகரம் முழுமையைக் காட்டும்ஒலியன். யகரம்
தொடக்க மெய்யொலியன். அதுவே அரை உயிர்ஒலியன்ஆக
வேலை செய்யும். This is an yellow
light.என்று ஆங்கிலத்தில் Yஅரை உயிர் ஒலியன்!
 அரு<அருமை. அரிய போன்றவை உன்னதத்தைக் காட்டும்
உயரியச் சொற்கள். அரயன்<அரையன்<அரசன்.
அர்+அ=அர.ர்+அ+அ=ர அ அ<ரா. ராயன்<ராசன்<ராஜ
ன்.ராஜ்<
ராஜா.ராஜாதி ராஜர்.=பேரரசர்.மன்னாதி மன்னன்.
இராயர் ஆக இல்லாத அரசர் ஆக இல்லாத அரசர்
குடும்பம் பிரான்சுநாட்டு உயர்ந்த குடியினர்
இராயல் என்றழைக்கப்பட்டார். Rayal Familyஎன்பர்.வட
மொழியில் உள்ள இராஜா வந்தவிதம் அறியலாம்.
இராஜபுத்திரர்.இராஜஸ்தான்.வந்தவிதம் அறியலாம்.
மகாராஷ்டிரம் என்பது மகாராயர்திரம்
என்பது மகாராட்டிரம் ஆனது. அர் என்பதில்
அரிசி வந்தது.அதன்மூலம் ரைஸ்.ருஸ்போன்றவ
ை உருவாயின.
யானை என்பதை ஆனை என்கிறோம்.யாறு என்பதை ஆறு என்கிறோம்.
இந்த அரி மூலம் உருவான கடவுள்சொல் அரி!
அவரது கையில்அறுக்கும் சக்கரம் இருக்கும்.
 
சகரம் சங்கக் காலத்தில்சொல்லுக்கு முதலில் அருகிய
வந்தது.அர்+உள்=அருள். இதையே ஆங்கிலம் எடுத்துக்
கொண்டது .Ruleஆட்சி என்ற பொருளும் அருளிய என்ற
பொருளும் ஏறக்குறைய ஒன்றாகும்.உருள் =உர்
+உள்=உருள் R0le' உருண்டை என்பது Roundஆகும்.
 தொல்பழங்காலத்தில் அர் ஆர் மூலம்
தமிழே ஆட்சி செலுத்தி உள்ளது.
 தமிழ்வேந்தன் தமிழன்
மின்னுவது மீன். உதாரணமாக, கடல் மீன், விண்மீன்.
மின்>மீன்(முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்).
மின் - வினைச்சொல்
மீன் - பெயர்ச்சொல்(தொழிற்பெயர்)
அதுபோல, அருவது ஆர். அர்>ஆர். ஆர் என்ற
சொல்லை மரியாதைக்குறிய விகுதியாக நாம்
பயன்படுத்துகிறோம். உதாரணமாக, ஐயன்+ஆர்=ஐயனார்.
அர் என்பதையும் நாம் மரியாதைக்குறிய
விகுதியாகவும் பலர்பால் குறிக்கும்
விகுதியாகவும் நாம் பயன்படுத்துகிறோம்.
அனைத்தும் சிறந்த உயரிய நிலைகளாக இருக்காது.
சிறந்த நிலைகள் மற்ற நிலைகளிலிருந்து
தனியாகவும் அருகியவைகளாகவும் தான் இருக்கும்.
உலகில் அருகியவை சிறந்தவைகளாகக் கருதப்படும்.
இது தான் தமிழர் சமயங்களின்(மெய்யியல்களின்)
கோட்பாடு. இயல்பான(இயற்கையான) மனித உளவியலும்
கூட. தன்னிடம் அருகியது சிறந்தவையாக தோன்றும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழியும்
இதனடியே தோன்றியதே. சிறந்த உயரிய
நிலையை அடைந்தவர்கள் மரியாதைக்குரியவர்களாவர்.
ஆகையால், அர், ஆர் ஆகிய வேர்ச்சொற்களில் உருவாகும்
சொற்கள் அடிப்படையில் சிறந்தவைகளையும்
சீரானவைகளையும் அரிதானவைகளையும் குறிப்பனவாக
இருக்கும். அவை மரியாதைக்குரியவைகளாக
கருதப்படும்.
இதனால் தான், பெயருக்கு முன் சீர்(சீராக
இருப்பது தான் சிறந்தது அழகானது...) என்ற
சொல்லையும் சேர்த்து அழைப்பார்கள். இந்த சீர் என்ற
சொல்லின் சுருக்கமே சீ என்ற சொல்.
வார்>வா
தார்>தா
சீர்>சீ
இந்த சீ என்ற சொல் தான், சங்கதம்(தமிழ் மொழியின்
சமயம் சார்ந்த வழக்குகளுள் ஒன்று...பாகதம், பாழி,
சங்கதம் போன்றவை தமிழ் மொழியின் சமயம் சார்ந்த
வழக்குகள்...)>சமஸ்கிருதம் திரிபில்
சீ(Chee)>ஸீ(ஸ்+ஈ, See)>ஸ்ரீ(ஸ்+ர்+ஈ)
என்று திரிந்தது. சொல்லின் முதல் எழுத்தில் ரகரம்
சேர்ந்து சொல் திரிவது போன்று சங்கதம்-சமஸ்கிர
ுதம் திரிபில் பல சொற்களை நம்மால் காண முடியும்.
உதாரணமாக,
காமம்(ஒற்றுமையாக சேர்ந்திருக்கும் பண்பு,
கதிர்காமம்)>க்ராமம்
மெது>ம்ரெது>ம்ருது>மிருது(தமிழ்
மொழிக்கு ஏற்றாற்போல மாற்றும் போது)
படி>ப்ரடி>ப்ரதி>பிரதி
பயணம்>ப்ரயணம்>ப்ரயாணம்>ப்ரயாண்>பிரயாணம்
பிசனை>ப்ரிசனை>ப்ரஷனா>பிரச்சனை
பதிட்டை>ப்ரதிட்டை>ப்ரதிஷ்டை>பிரதிஷ்டை
சுதி(ச்(ஸ்)+உ+தி)>ஸுதி(ஸ்+உ+தி
)>ஸ்ருதி>சுருதி
சங்கதம் சமஸ்கிருதம் ஆனதும் இப்படித்தான்.
சமஸ்கிருதத்தின் உண்மையான உச்சரிப்பு சங்ஸ்க்ரித்
என்று பிராமணர்கள் கூறுவார்கள்.
சம்+கதம்(கதைக்கும் பண்பு)=சங்கதம்
கதம்>க்ரதம்>க்ரிதம்>க்ரித்
சங்கதம்>சங்க்ரித்>சங்ஸ்க்ரித்(சொல்லுக்கு இடையில்
வல்லின மெய்க்கு பக்கத்தில் ஸ்
சேர்த்து ஒலிப்பது ஒரு வகை சங்கத-சம்ஸ்கிருத
திரிபு)>சமஸ்கிருதம், Sanskrit
தமிழ் த்ராவிட்(திராவிடம்) ஆனது இப்படித்தான்.
இதேச் சொல் தான்,
சீ(Chee)>ஜீ(Jee)
என்று திரிந்தது. ச>ஜ திரிபு என்பது மக்கள்
பேச்சு வழக்கில் இயல்பானது. ஸ்ரீ என்ற சொல்லின்
பயன்பாடு சமயம் சார்ந்த வழக்கிலும் ஜீ என்ற சொல்லின்
பயன்பாடு மக்கள் வழக்கிலும் நம்மால் அதிகம் காண
முடியும்.
சீரங்கப்பட்டினம்(17ஆம் நூற்றாண்டில் உள்ள
பெயர்)>ஸ்ரீரங்கப்பட்டினம்
சீராமன்(கம்பராமாயணத்தில் ராமனைக் குறிப்பிடும்
போது...சூடாமணி நிகண்டிலும் காணலாம்...)>ஸ்ர
ீராமன

இப்போது, அர், ஆர் என்ற வேர்ச்சொற்களை வேர்களாகக்
கொண்ட சொற்களைப் பார்ப்போம்.
அர்>அர>அரகு>அரக்கு - அரசு அலுவலகங்களில்
அரக்கு வைப்பதற்குப் பயன்படும் சிவப்பு நிறத்தில்
உள்ள பொருள்.
அர்>அர>அரகு>அரங்கு
அர்>அர>அரது - அரதுப் பழசு(அரித்துப் போனது)
அர்>அர>அரது>அரத்து>அரத்தம்(>ரத்தம்
(திரிபு)>இரத்தம்) - குருதி
அர்>அரி>அரிவாள் - சீர்மை படுத்தும் கருவி
அர்>அரி>அரிது - உலகில் அரிதாக
இருப்பவை அருமையாவைகளாக(சிறந்தவைகளாக)
கருதப்படும்.
அர்>அரி>அரிது>அரித்து - அரிதாக்குதல்
அர்>அரு>அருமை(அரு+மை, பண்பு)
அர்>அரு>அருகு - அருகும் வினை(rare),
அருகியவை அருமையானவைகளாக கருதப்படும்.
அர்>அரு>அருகு>அருகன் - ஜைனர்களின்(சமணர்கள்
அல்ல) கடவுள். ஆசீவகர்களின் கடவுளும் கூட.
முருகனுக்கு அருகன் என்ற பெயரும் உண்டு.
அர்>அரு>அருது>அருத்து>அருத்தம்
(பொன்>பொருள்)>அர்த்தம்(திரிபு)
அர்>அரை - சிறப்பான தொழில்(சிறப்பான விகிதமாக
ஆக்கும் தொழில்)
அர்>அரை>அரையர் - சிறப்பான தொழிலைச் செய்பவர்
அர்>அரம்(அர்+அம், பண்பு) - அராவும்
கருவி(சீராக்கும் கருவி,
சீரானது சிறந்தது என்று பொருள்)
அர்>அராவு
அர்>அரண்(அர்+அண்)
அர்>அரசு(அர்+அசு)>அரய்(அசு=அய்)>அரசன்(>ரசன்(த
ிரிபு), ஹர்ஷா(திரிபு)>ராஜ்>ராஜன், ராஜா,
ராஜ்ஜியம்), அரயன்(>ராயன்(திரிபு)>ராய்)
ஆர்>ஆரது>ஆரத்து>ஆரத்தி -
சிறந்தவருக்கு செய்யப்படும் மரியாதை
ஆர்>ஆரம்(ஆர்+அம், பண்பு) - சிறந்த
பண்பு என்று பெயர். வட்டத்தின் ஆரம் என்றால்
வட்டத்தின் சிறந்த பண்பு என்று அருத்தம்.
 சமஸ்கிருதம் தமிழ் மொழியின் சமயம் சார்ந்த
வழக்குகளுள் ஒன்றான சங்கதத்திலிருந்
து திரித்து உருவாக்கப்பட்டதால் தற்கால
சம்ஸ்கிருத வழக்கில்(மொழியல்ல) உள்ள குறைந்தபட்சம்
(குறைந்தபக்கம்,Minimum) முக்கால்வாசிச் சொற்கள்
தமிழ்ச் சொற்களாகவோ திரிந்த தமிழ்ச்
சொற்களாகவோ தமிழ் வேர் கொண்ட
சொற்களாகவோ இருக்கின்றன.
 உங்கள் தோழன் சவரிமுத்து
அவ் +அன்=அவன். அவ்+அர்=அவர். அர்
என்பது தொல்பழங்காலத்தில் மூன்றாமிடம் பன்மையாக
இருந்தது. தற்காலத்தில் மூன்றாம்இடம்
மரியாதை ஒருமை மாறிவிட்டது.மூன்றாம் இடம்
பன்மையாக அவர்கள் என்று கள் வந்து சேர்ந்தது.
பழங்காலத்தில் அங்கும்மிங்கும் நிலைக்காமல்
ஓடியவர்கள் ஆரியர்.ஆர்+அம்=ஆரம். வட்டத்தின்
நடுவே ஓடும் குறுக்குக் கோடு ஆரம்,ஆர்+ஐ=ஆரை.
ஆரைக்கீரை.நாலுஇலை ஒற்றைக் காலில்
நின்று கொடியாக ஓடும்.ஆர்+இ=ஆரி<ஆரிய.ஆரியர்
அங்கும்இங்கும் எங்கும் நிலையில்லாமல் வாழ்பவர்கள்,
இறந்தவர்களை ஆங்காங்கே கொளுத்திவிட்டு செல்பவர்கள்.
ஆர் இந்த ஆர் ஆரியர்கள் தமிழ் மாந்தர்
நன்மதிப்பு பெற்றபோது அதுவே இலக்கணத்தில்
ஏறியது. வந்தார் என்று ஆர் உயர்வாக மாறியது.
savarimuthu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக