சனி, 3 ஜூன், 2017

இத்தாலி தமிழ் தொடர்பு வேர்ச்சொல் ஐரோப்பா ரோம் லத்தீன் முதல்மொழி

aathi tamil aathi1956@gmail.com

22/12/14
பெறுநர்: எனக்கு

aathi tamil aathi1956@gmail.com

22/12/14
பெறுநர்: எனக்கு
இத்தாலியும் தமிழும்
பகுதி-1
நான் தொடங்க நினைத்திருப்பது தமிழுக்கும்
இத்தாலிக்கும் உள்ள மொழி தொடர்பு பத்தியே.
முதல்ல ஒரு வார்த்தை வேதோவா(Vedova) நம்மூர்
விதவை. இது நம்ம தமிழ்
மாதிரி இருக்குதேன்னு பார்த்தேன்.
அப்படி ஒவ்வொரு வார்த்தையா தேடி ஏறக்குறைய 300
வார்த்தைகள் தமிழோடு தொடர்புடைய வார்த்தைகளை தேட
முடிஞ்சது.
எல்லாத்தையும் ஒரே மூச்சில சொல்லல, பயப்பட
வேண்டாம். மெதுவாவே பயணம் செய்வோம்.
மொதல்ல இத்தாலி ங்கற நாட்டு பேரே தமிழ் பெயர்.
1. இத்தாலியை அவர்கள்
இத்தாலியா என்றே அழைக்கிறார்கள்.
இதற்கு என்னடா அர்த்தம் என்று கூகிளில் தேடினேன்.
இத்தாலியாவின் மூலச் சொல் கிரேக்கத்திலிரு
ந்து வந்தது என்றார்கள். அந்த கிரேக்கச்சொல்
இத்தேல்லோஸ் (itellos). இந்த இதல்லோஸ் என்ற
வார்த்தை எங்கிருந்து வந்தது என்று தேடிய
பொது அது ஒரு இலத்தின் வார்த்தை மூலம். அந்த
வார்த்தை விதெல்லோஸ். இலத்தினில் விதெல்லோஸ் என்றால்
இளங்கன்று என்று போட்டிருந்தார்கள். இத்தாலிய
மொழியிலும் வித்தெல்லொ (Vitello)
அப்படின்னா இளங்கன்று தான்.
இப்பதான் முக்கியமான திருப்பம். இந்த
வித்தெல்லொ எங்கிருந்து வந்தது என்றால் இந்தோ-
ஐரோப்பிய தொடர்பு அ கிழக்கத்திய மூலச்சொல்
என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இன்னும் போனால்
குட்டு வெளிப்பட்டுவிடும் அல்லவா. அதாவது அவர்கள்
இங்கிருந்து, தென் இந்தியாவிலிருந்து பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன் சென்று குடியேறியவர்கள் என்ற
உண்மை வெளி வந்துவிடும். ஐரோப்பியர்களுக்
கு தாங்கள் மேன்மையானவர்கள்; தங்களிடமிருந்தே
உலகம் அறிவு பெற்றது என்று எண்ணிக்கொண்டிரு
ப்பவர்கள்.
சரி நம்ம விசயத்திற்குள் வருவோம்
இந்த Vitello எங்கேருந்து வந்ததுன்னு தேடிப்
பார்த்தால் நம்மூரு விடலை. விடலை என்றால்
இளங்கன்று என்று தமிழ் அகராதியில் போட்டிருந்தார்க
ள். நாம சொல்வோம் இல்லையா. விடல பையன்
இளங்கன்று பயமறியாதுன்னு. ஆக தொடக்கத்தில்
மாடுகள் அதிகமாக இருந்த நாடு இது. மாடுகளின்
நாடு. மாடு மேச்ச பசங்கதான் இந்த இத்தாலியர்கள்.
___
உறவுக்கான வார்த்தைகளில்
அடுத்து இத்தாலி மொழியில் உறவுக்கான
வார்த்தைகளில் தமிழோடு தொடர்புகொண்ட ஒரு சில
வார்த்தைகளை தேடுவோம்.
2. இத்தாலிய உறவுகள் பெயரில் தமிழ்
1. Genitori- பெற்றோர்-ஜெனித்தல், சனித்தல், சனனம்,
பிறப்புக்கு காரணமானவர்கள்.
2. Vedova-விதவை. (வேதொவா) அப்படியே உள்ளது.
தமிழில் பெண்ணுக்கு மட்டுமே இந்தப்பெயர்.
ஆணுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் இத்தாலியர்கள்
சமத்துவமாக பயன்படுத்துகிறார்கள்.
ஆணுக்கு vedovo, பெண்ணுக்கு vedova.
3. Papa-அப்பா
4. Mamma-அம்மா
(அம்மா என்ற சொல் உலகளவில் 48 மொழிகளிலும்,
அப்பா என்ற சொல் 23 மொழிகளிலும் பயன்படுத்தப்படு
கிறது என்கிறார், மொழியியல் அறிஞர்
தேவநேயப்பாவாணர். ஆக உலக மொழிகளுக்கெல்லாம்
அப்பனும் ஆத்தாவும் தமிழே)
5. Juvenile-யுவன், யுவதி
6. Marito-மரித்தோ (கணவன் )
7. Moglie-மோளியே (மனைவி)
கணவன் மனைவிக்கான இத்தாலிய வார்த்தை. Marito-
Moglie. நம்மூரில் பல வார்த்தைகள். கணவன் மனைவி,
புருஷன் பொண்டாட்டி, துணைவி, இணைவி (உபயதாரர்
ஆரூரார் ?) இதுல கணவன் இறந்தால் மனைவியை சில
வார்த்தைகளில் அழைப்பார்கள். ஒன்னு விதவை.
இன்னொன்னு மூளி.
கணவன் மரித்தால் மனைவி மூளி.
கணவன் - மரித்தோ-Marito மனைவி-மோளியே - Moglie.
(தமிழ்நாட்டுல ஆத்துல புது பெருக்கு வந்தால்
அது வெள்ளம் ஆனா சேர (கேரள)நாட்டுல அந்த
வார்த்தை பொதுவாக தண்ணியையே மட்டுமே குறிக்க
பயன்படுது.) இங்கே தனிச்சொல்லாக
இருப்பது அங்கே பொது சொல்லாக மாறுகிறது.
அது போல கணவன் மனைவி உறவு முறைக்கான
வார்த்தைகளில் மரித்த கணவன்
மூளி மனைவி உறவு வார்த்தை, பல ஆயிரம்
ஆண்டு உருமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட
உறவுச்சொல்லே பொதுச்சொல்லாகிவிட்டது.
சேர நாடு பற்றி பேசுவதால் ஒரு சின்ன
இடைச்செருகல். நாம் பயன்படுத்தும் சோழ, பாண்டிய,
சேர நாடுகள் என்ற வார்த்தைகள் உண்மையில்
வேறு மூலச்சொல்லொடு தொடர்பு கொண்டவை.
பாண்டிய நாடு உண்மையில் பண்டைய நாடு. கடல்
கடந்து வந்தவர்கள் முதலில் குடியேறிய பகுதி.
ஆகவே பண்டைய நாடு, மருவி பாண்டிய
நாடாகிவிட்டது.
சோழ நாடு என்பதும் உண்மையில் சோதிய நாடு.
சோதியான சூரியன் முதலில் உதிக்கும்
பகுதி என்பதால் (Japan - Nippon போல)
சோழர் கொடியும் முதலில் சூரியக் கொடியாக,
சூரியனைக்குறிக்கும் காளை மாட்டு கொடியாகத்தான்
இருந்தது. அதனால்தான் சிவக் கோயில்களில் எல்லாம்
மத்தியிலும் சுற்றிலும் இருப்பது காளை.
இது தமிழர்களின் வானவியல் அறிவின் அடிப்படையில்
Taurus (தார்க்குச்சி என்பது வண்டி காளைக்கான
குச்சி. இதைப்பற்றி பின்னர் விளக்கமாக
கூறுகிறேன்)என்ற நட்சத்திரக்கூட்டத்துக்கருகில் உள்ள
சிவந்த நட்சத்திரம் தான் இது.
இன்றும் கூட சோழ மண்டல கடற்கரை கொண்டிருக்கும்
ஆந்திராவின் கொடியில் இருப்பது சூரியன்தான்.
சோழ மண்டலக்கடற்கரை ஆங்கிலேயர்களின் வாயில்
Coromandel கடற்கரை ஆகி (நம்மையெல்லாம் mental
ஆக்கிவிட்டான் ) இன்னும் அதையே பயன்படுத்திக்கொ
ண்டிருக்கிறோம் Coromandel Express, Coromandel
Cement என்று. ஆங்கிலேயனை விட்டாலும் நாம ஆங்கில
அடிமைத்தனத்தை விட மாட்டேங்குறோம்.
கொஞ்சம் திசை மாறிப் போனதற்கு மன்னிக்கவும். மீண்டும்
வருவோம்
8. Madonna, donna-மாது
மாது என்பது பெரிய பெண்ணைக்குறிக்கும்.
மாது மதோன்னா என்று ஆகி முதல் எழுத்து மறைய
வெறும் தோன்னா donna என்பதோடு நின்று விட்டது.
9. Gente-சனம்
10. Vita-வித்து, விதை வித்யாலயா. உயிருக்கான
தொடக்கம், வித்து, வித்யாலயா- தொடக்க அறிவு ஆலயம்.
வேதங்கள்-தொடக்கம் பற்றி பேசும் நூல், உயிர்களின்
விதை அறிவின் விதை அனைத்தின் துவக்கம்.
11. Filio-பாலகன்
12. Cognato-கொழுந்தன், நாத்தனார் நாற்று,
உடன்பிறப்பு.
ஒரே செடியில் முதற் கொழுந்திற்கு அடுத்து,
இரண்டாவது கொழுந்து வருவது போல கணவனோடு உடன்
பிறந்த சகோதரக்கொழுந்து, கொழுந்தன் ஆகிறது.
இத்தாலியில் cognato அ cognata. Cog-nato உடன்
பிறந்தவர்.
13. Zio-சீயா- மாமா
எங்கள் ஊரில் (மதுரைக்கருகில்)
மாமாவை சீயா என்றுதான் அழைப்பார்கள். என்
அப்பா அவரது மாமாவை அவ்வாறு தான் அழைப்பார்.
இப்பதான் எல்லா உறவு வார்த்தைகளும்
மறைந்துகொண்டே போகிறதே. எல்லாம் ஆண்ட்டி அங்க்கிள்
தான். நம்ம நடிகர் விக்ரமுக்கான அடைமொழி பெயர்கூட
சீயான் கூட மாமா என்ற அர்த்தம் தான் தரும்.
14. Nepoti- நெபொத்தி- பேரன், பேத்தி
பேரன் என்றால் தாத்தாவின் பெயரை ஏற்பவன், பெயரன்
என்றே பொருள். கிராமங்களில் இன்னும் இந்த
நடைமுறை இருப்பது நம்மில் பலருக்கு தெரியும்.
அதே போல பெண் குழந்தை என்றால் பாட்டி பெயர் அ
தாத்தாவின் பெண்பால் பெயரினை வைப்பது வழக்கம்.
இத்தாலியிலும் இதே நடைமுறை. nepoti- Ne - Poti
நாமம் பெயர்த்தி நெபொத்தி nepoti.
15. Nato-நாதி, பிறப்பு
16. Natale- நத்தார், கிறிஸ்துமஸ்
நாதி அற்றவன் அ அநாதை என்றால் பெற்றோர் அற்றவன்,
யாருமற்றவன், பிறப்புக்கான காரணங்கள் தெரியாதவன்
என்பது நமக்கு தெரியும். இறைவனும் கூட
அநாதியானவன் என்று அழைக்கபடுகிறார்.
அதாவது பிறப்பு, இறப்பு அற்றவர். நாதி-
பிறப்பு Nato, Native, Nativity. நாதி, நத்தார்
பெருவிழா, Natale.
___________
உடல் உறுப்புகளுக்கான வார்த்தைகளில்
3. உடல் உறுப்புகள்: இத்தாலியும் தமிழும்
1. Naso (நாசோ) - நாசி, மூக்கு
2. Gola (கோலா) - கழுத்து
3. Dente(தென்தே)-தந்தம், பல். யானையின்
பல்லை மட்டும் தந்தம் என்கிறோம். இத்தாலியர்கள் இந்த
யானையின் பல்லை பொதுவான
பெயராக்கி பல்லுக்கு பயன்படுத்துகின்றனர்.
4. Tosse (தோசே)-சலதோசம். இத்தாலியர்கள்
இருமலுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
5. Vegliare (வேழியாரே )- விழித்தல்
6. Capo (காப்போ) - தலைவன் என்ற அர்த்தத்தில்
பயன்படுத்துகின்றனர். கபாலம், தலை. தலைமையான பல
அர்த்தங்களுக்கு இவ்வார்த்தை பயன்படுகிறது. நாமும்
தலையை அடிப்படையாக வைத்தே முதன்மையை சொல்கிறோம்
இல்லையா. தலை-வர், தலை-ச்சன்பிள்ளை, தலை-நகரம்,
தலை-மை தபால் நிலையம் என்று. கேப்டன் (Captain)
என்ற ஆங்கில வார்த்தையும் கூட இப்படித்தான்.
ஆங்கிலத்திற்கு போனால் எக்கச்சக்க வார்த்தை வரும்.
இப்போ வேணாம். இத்தாலிக்கே வருவோம்.
Capo-linea(காப்போ-லீனையா) - இதன் பொருள்
பேருந்து நிலையம். அதாவது எல்லா வழித்தடங்களுக்க
ும் தலையாக இருக்கும் நிலையம்.
Capo-d'anno (காப்போதான்னோ) - வருடத்தின் தலைநாள்.
வருடத்தின் முதல் நாள். வருடபிறப்பு
capo-cuoco (காப்போகுவோகோ) -
தலைமை சமையல்காரர், headcook
Capo-luogo (காப்போலுவோகோ) - தலைமையிடம்
ஒரு சின்ன இடைச்செருகல்: புத்த மதத் தலைவர் தலாய்
லாமா என்பதற்கு பொருள் தலைமை குரு, தலைமை ஆசான்
என்பதே. தலை-லாமா
7. Capelli (கப்பெல்லி) - capo - pelli கபால முடி.
பீலி என்றால் தமிழில் முடி என்று பொருள்.
( பீலி பீலிபெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம் சால
மிகுத்து பெயின் ) இதன் பொருள்: எடை குறைந்த மயில்
இறகே ஆனாலும் அதன் எண்ணிக்கை அதிகம் எனில்
வண்டி குடை சாயும்.
8. Occhio (ஓக்கியோ)-கண், அக்கம் என்றால் கண்
என்பது பொருள். சந்தேகம் உள்ளவர்கள் தேடிப்பார்க்கலா
ம். http://ta.wiktionary.org/wiki/ (அக்கம் பக்கம்
பாரடா சின்ன ராசா - சிப்பிக்குள்
முத்து படப்பாடல்.)
9. Sangue (சாங்குவெ)-செங்குருதி, இரத்தம்
10. Cuor (குஓர்) - இருதயம், குருதி,
செங்குருதி அனுப்பும் இடம்
11. Muorire, Morto (மொறீரே, மோர்த்தோ )- மரித்தல்,
மரித்தவர், அமரர்
12. Nascere (நாசெறே) Nato -நாதி, பிறப்பு
13. Mano (மானோ)-மணிக்கட்டு, கை
14. Collana-கழுத்துநகை, நாம் கொல்லன்
என்று நகை செய்பவரை அழைக்கிறோம். கொல்லனா என்றால்
இத்தாலியில் கழுத்து நகை.
15. Voce (ஓச்சே)- ஓசை
16. Pedonale (பெதோநாலே) - பாதசாரி ஆங்கிலத்தில்
pedal, pedestrian எல்லாம் அடிப்படையில்
பாதத்திலிருந்தே.
17. Unghia (உன்கியா)- உகிர் உதிர்த்தல் நகம்
18. Calcio- கால்பந்து விளையாட்டு .
காலை பயன்படுத்தும் பல விசயங்களுக்கு கால்
என்றே சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக
calpestare (கால்பெஸ்தாரே)- கால்பதித்தல்
calzone (கால்சொனே) - கால் சட்டை, trouser.
calza (கால்சா) - சாக்ஸ், காலுறை, கால்மேசு
calcagno (கால்காங்னொ ) - கணுக்கால்
calzalaio (கால்சலையொ) - பெரிய ஷூ, பெரிய பாதணி
______
விலங்கு, பறவை, தாவரப் பெயர்களில்
4. விலங்கு, பறவை, தாவரம்
1. Animalia (அனிமாலி)- விலங்குகள்
தமிழில் ஆத்மா ஆன்மா என்பதன் மூலச்சொல் அகத்துமம்.
மனிதன்
தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி,
ஆராய்ந்து முடிவெடுப்பவன்.
ஆதலால் ஆறாம்
அறிவை பயன்படுத்தி சீர்தூக்கி மெய்ப்பொருள்
காண்பவன் அகத்துமம், ஆன்மா உள்ளவன். இவை இல்லாதவை
அகத்துமம் இல்லாதவை, ஆன்மா இல்லாதவை எனப்படும்.
ஆன்மா இல்லாத, ஆன்மா - இலி, அனிமாலி (விலங்குகள்).
பிராணிகள் என்பதற்கும் தமிழ் நல்ல
வரையறை கொண்டுள்ளது.
பிராண வாயு சுவாசிக்கும் அத்தனையும் பிராணிகள்.
அதனால்தான்
கல்லையும், மரத்தையும் பிராணிகள்
என்று சொல்வதில்லை.
கல் சுவாசிப்பதில்லை. மரம் கார்பண்டைஆக்சைட
ை சுவாசிக்கிறது
நமக்கு தெரியும். இந்த கல் அ மரம்
போன்று இருப்பவர்கள் அப்பிராணிகள்.
2. Toro (தோரோ) Taurus - தார், காளை
வானியலில் உள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில்
ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம்.
இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த
தமிழ்ப்பெயர். நம்மூரில் காளை மாட்டுக்கு,
மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும்
குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார்
என்றால் தமிழில் காளை என்றே பொருள். வட இந்திய
நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம்
தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம்
'மண்ணில் வந்த நட்சத்திரம்'. இந்த தாரே என்பது இந்த
நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது.
கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும்
மாமரியே என்று பாடுவார்கள். இந்த
தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக
அணிந்தவளே என்று தான் அர்த்தம்.
3. Gatto (காத்தோ)- பூனை, கொத்தி. கொத்தி என்றால்
குருடு என்பது பொருள். பூனைக்கு பகலில் கண்
சரியாகத் தெரியாது. ஆகவே தமிழர்கள் அதற்கு வைத்த
பெயர் கொத்தி.
4. Gallo (கால்லொ)-கோழி இப்பெயர்
அப்படியே வருகிறது.
5. Pollo (போல்லோ)-புல்லம், பறவை, கோழி
6. Agnello (அங்க்னெல்லொ)- ஆடு,
ஆநிரை என்பது ஆட்டைக்குறிக்கும். தமிழ் செய்யுளில்
படித்திருப்போம்.
7. Mandria (மந்த்ரியா)- மந்தை
8. Mucca (மூக்கா)- பசு மாடு. நாம்
பசுமாட்டை கோ (மாதா) என்று அழைப்போம். இந்த கோ,
மூ-கோ, மூ-கா, மூக்கா ஆகிவிட்டது.
9. Mangiare (மஞ்சாரெ) - சாப்பிடுதல், உண்ணுதல்,
மேய்தல்
10. Vitello - இளங்கன்று இதைப் பற்றி இரண்டாம்
கட்டுரையில் எழுதி உள்ளேன்,
எவ்வாறு இத்தாலி என்றே வார்த்தையே இதிலிருந்து வந்தது என்று.
11. Erba (எர்பா)- அருகு, அருகம்புல் என்ற ஒரு புல்
வார்த்தையையே இவர்கள் அனைத்து வகை புல்,
கீரைகளுக்கு பொது பெயராகப் பயன்படுத்துகிறார்கள்.
12. Serpente (செர்பெந்தெ ) - சர்ப்பம்
அப்படியே உள்ளது.
13. Cavalio (கவாலியோ) - குதிரை, காவல் குதிரை.
இந்தப்பெயர்
அப்படியே பிரெஞ்சு மொழிக்கு செல்லும்போது செவாலியே என
மாறுகிறது. நம்மூர் நடிகர் திலகத்துக்கு பட்டம்
கொடுத்தாங்கல்ல அதே செவாலியே பெயர்தான். பொருள்
குதிரை வீரன் என்பதே.
14. Ali (ஆலி), Uccello (உசெல்லொ) -
ஆலி என்றால் சிறகு என்று பொருள்.
உசெல்லொ என்றால் பறவை என்று பொருள்.
நம்மூரில் ஆலாய் பறக்கிறான் என்று சொல்வோம் இல்லையா.
ரெக்கை கட்டிக்கிட்டு பறக்கிறான் என்பதே.
15. Snaka - நாகம். விளக்கம் தேவைப்படாது.
16. Uva (உவா)-என்றால் திராட்சை, uovo (ஓவோ)-
என்றால் முட்டை
என்று பொருள். நம் தமிழில் உவாமதி என்றால்
முழு மதி.
உருவத்தில் கோளமாக, முழு வட்டமாக இருக்கக்கூடிய
இவை இரண்டும்
அதே பெயரில் வருவது பொருத்தமே.
17. Zinzero (ஜிஞ்செரொ) - இஞ்சி
18 . Riso (ரீசோ) - அரிசி. இவை இரண்டிற்கும் விளக்கம்
தேவைப்படாது.
19 . Zucchero (சூக்கெரொ)- சர்க்கரை
20 . Albero (ஆல்பெரோ) - மரம்.
நம்மூரில் அகல விரிந்திருக்கும் மரம் ஆல மரம். இந்த
ஒரு மரத்தின்
பெயரையே மரத்திற்கெல்லாம் பொதுப்பெயராக
ஆல்பெரொ என்று
அழைக்கிறார்கள். இது மட்டுமில்லை ஆலமரம் பல
பறவைகளுக்கும், மனிதர்க்கும் தங்கி ஓய்வெடுக்கும்
வகையில் இருப்பதைப்போல, பலரும் தங்கும்
விடுதியை (lodge) albergo (ஆல்பெர்கொ)
என்றே அழைப்பது தமிழ்
இங்கே எந்தளவு ஊடுருவி உள்ளது என்பதையும் ஆராய
தூண்டுகிறது.
____________
எண்கள், காலம், கணக்கீடுகளில்
5. கணிதம், எண்கள், காலம்
நம்ம தமிழ் நாட்காட்டியைப் பார்த்தால், (எங்கே கல்யாண
பஞ்சாங்கம் பார்க்கத்தான் அதனைப் பயன்படுத்துகிறோம்)
குறிப்பாக தின நாட்காட்டியில்
கீழ்க்கண்டவாறு கிழமைகளைப் போட்டிருப்பார்கள்.
பிரதமை, துதியை... என்று. இவை எல்லாம்
வடமொழியோ என சந்தேகம் படும்படியாக வார்த்தைகள்
இருக்கும். நிச்சயம் இல்லை. சுத்தமான தமிழ்
வார்த்தைகள். அவற்றில் சரியாக 14 நாட்களுக்குக்
கிழமைகள் போட்டிருப்பார்கள் 1 லிருந்து 14 வரை,
அடுத்த நாள் பௌர்ணமி. திரும்ப அந்த 1 லிருந்து 14
கிழமைகள். அடுத்த நாள் அமாவாசை.
வேறு ஒன்றும் இல்லை. நிலவின்
வளர்பிறைக்கு 1லிருந்து 14 வரை, தேய்பிறைக்கு 1
லிருந்து 14 வரை. காரணம் நிலா,
மதி யை வைத்தே நாட்கள் கணக்கிடப்பட்டதால் மாதம்
என்றே பெயர் பெற்றதை நாம் அறிவோம்.
அந்த கிழமை பெயர்கள் அப்படியே இத்தாலியில்.
இந்த கிழமைகளில் 4 என்ற எண்ணைத்தவிர பிற எண்கள்
அப்படியே வருவதைப்பார்க்கலாம்.
1. Primo (பிரிமோ)- பிரதமை
2. Due (துவெ)- துதியை
3. Tre (த்ரே)-திருதியை
4. Quattro (குவாத்ரோ)- சதுர்த்தி
5. Cinque (சின்க்வெ)-பஞ்சமி
6. Sei, sesto (சேய்)-சஷ்டி
7. Sette (செத்தே)- சப்தமி
8. Otto (ஒத்தோ)-அட்டமி
09. Nove (நோவே)-நவமி
10. Dieci (தியெச்சி )- தசம் (இலத்தீனில் தெச்சம்).
கணக்கில் தசமபின்னம்.1/10
11. Undici (உந்திச்சி)-ஏகாதசி
12. Dodici (தோதிச்சி)-துவாதசி
13. Tredici (திரேதிச்சி)-திரயோதசி
14. Quattordici (குவதோர்திச்சி )-சதுர்த்தசி
இவைகளில் 4, 14 இந்த இரண்டு கிழமைகளில் 4 ஏன்
இப்படி வருகிறது என்று இரண்டு, மூணு நாள்
யோசித்து பார்த்தேன். தேடியபொழுது அருமையான
விளக்கம் கிடைத்தது.
இத்தாலி நாட்டுக்காரரே உதவி செஞ்சார். அவர்
கொன்ஸ்தன்சோ ஜோசப் பெஸ்கி என்ற நம்ம வீரமாமுனிவர்.
இவர் இத்தாலி மிலான் நகரத்துக்கருகில்
காஸ்திலியோனே (Castiglione) என்ற நகரத்தில்
பிறந்தவர். இந்த நகரை காஸ்திகிலியோன் என்று நாம்
தவறாக எழுதுவது இங்கு வந்ததும் தான் தெரிந்தது.
இவர் தான் தமிழ் மீது கொண்ட பற்றால், கற்று,
தேர்ந்து தமிழில் முதல் முறையாக அகராதியைத்
தொகுத்தவர். ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும்
'Thesaurus' போல. சதுர் அகராதி. சதுர் என்றால்
நான்கு. சதுரம் என்றால் நான்கு பக்கமும் சம
தூரத்தில் இருக்கும் வடிவம். சதூரம் - சதுரம்.
நான்கு அகராதி. இதில் 1. சொல் அகராதி (சொல்லும்
பொருளும்) 2. பெயர் அகராதி (ஒரு சொல் பல பொருள்)
3. தொகை அகராதி (கலைச்சொற்கள்) 4.
தொடை அகராதி (எதுகை மோனை) என சதுர
அகராதியை 1732 ல் எழுதி முடித்தார். இப்ப நம்ம
விசயத்திற்கு வருவோம். இந்த நான்கு என்ற சதுர்,
ஹிந்தியில் சார் (ஏக், தோ, தீன், சார்) ஆகி சதுர்-
சதூர்-chadhoor - cha என்பதை இத்தாலியர்கள் க
என்றுதான் உச்சரிப்பார்கள், ஆக சதுர்-சதூர்-கதூர்-
ஆகியிருக்கிறது. இது அப்படியே ஆங்கிலத்தில்
'quarter நான்கில் ஒரு பாகம்' என்றாகி விட்டது.
இந்த வகையில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வாகன
ஓட்டிக்கு சாரதி என்று தமிழில் பெயர்.
பார்த்தசாரதி என்ற பெயர் நமக்கு அறிமுகமான பெயர்.
பார் என்ற உலகுக்கெல்லாம் ஒளி தரும்
சூரியனுக்கு தான் அப்பெயர். கதிர்கள் என்ற
குதிரைகள் பூட்டிய தேர் சூரியன். இதில்
சாரதி என்பது சதுர அ சார் எனும் நான்கு சக்கரங்கள்
கொண்ட தேருக்கு அதிபதி என்றே சாரதி பொருள்
படுகிறது. இந்த சார்- சதுர்-கதூர்-கார் என்பதும்
நான்கு சக்கரங்கள் பூட்டிய வாகனம். German
மொழியில் car ஐ (வாகனம்) வாகன்
என்றே அழைக்கிறார்கள். Volkswagen (f) வோல்க்ஸ்வாகன்
அ மக்கள் வாகனம். நான்கு கரங்கள் கொண்ட
இணைப்போடு இருப்பதால் (நான்கு)சதுர்-கரம், சக்கரம்
என்று தமிழன் தான் முதன் முதலில்
சக்கரத்தையே கண்டுபிடித்திருக்கிறான்.
5. Car-ta (கார்த்தா) - சதுர்த்தாள், நான்கு பக்கங்கள்
கொண்ட தாள்.
6. Car-cere (கார்செரெ)- சிறை, நான்குபுற சிறை.
நான்குக்கான விளக்கம் கொஞ்சம் அதிகம்தான்.
பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி.
16. Cento (சென்தோ)-சதம்
17. Novena (நொவெனா)- நவநாள்
18. Ora, Hour (ஓரா)- ஓரை, ஓரை என்றால்
நட்சத்திரக்கூட்டம் என்று தமிழில் பொருள்.
நமது பால்வெளி ( Milky way ) என்ற பேரண்டத்தில்
ஒருபகுதியான நமது சூரியக்குடும்பம் இருக்கும்
நட்சத்திரக்கூட்டத்திற்குப்பெயர் ஓரியன் (Orion)
இதைக்கொண்டே horoscope, hour எல்லாம் உருவானது.
19. Dies,(தீயஸ்) day, date - திதி, தேதி
20. Mese, (மேசெ)Month-மாதம், மதி
21. Anno (ஆன்னோ) - ஆண்டு
22. GiorNALE (ஜோர்நாளே)-நாள்
24. Settimana (செத்திமானா)- சத்தமானம்
என்பது தமிழ் வார்த்தைதான். சத்தமானம் என்றால் 7 நாள்
வரிசை என்று பொருள். 'சப்த ஸ்வரம்' ன்னு சொல்றோம்ல.
அதுவும் 7 சரம், வரிசையைக்குறிக்கிறது. ச, ரி, க,
ம, ப, த, நி.
25. Mattina (மத்தீனா)- மத்தியானம் மத்தி அயனம்.
சூரியனின் பயணத்தில், அயணத்தில், மத்தியில் உள்ள
நிலை மத்தியானம். இது தமிழ். விடியல் முதல்
மத்தியானம் வரை உள்ள
காலப்பகுதியை மத்தீனா என்பது இத்தாலி.
26. Sera (சேரா) - பொழுது சேரும் நேரம், சூரியன்
சாயுங்காலம்.
27. Destra (தெஸ்த்ரா)- தெற்கு, தெக்கணம். (Deccan
Plateau-தக்கான பீடபூமி, தெற்கு பூமி)
சூரியனுக்கு முன்பாக நின்று கிழக்கு பார்த்து,
இரு கைகளையும் விரித்தால்
இடது கை வடக்குப்புறமும்,
வலது கை தெற்கு புறமும் இருக்கும்.
திசை என்பதற்கு திரை என்றும்
வார்த்தை உண்டு என்பது நமக்குத் தெரியும்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. இப்ப இந்த தென்
திறம் என்பதுதான் தெஸ்திரம், இத்தாலியில் destra
என்றாகி உள்ளது. வலது கை பகுதி வட புறத்திலுள்ள
சனி மூலை, சனி திசை, சனி திரம் ஆக sinistra
(அடுத்த வார்த்தை) ஆகியிருக்கிறது.
28. Sinistra (சினிஸ்திறா)- சனி, ஈசான மூலை. சனி-
திரம்
29. Tele (தெலெ)- தொலைவு, telephone, television
எல்லாம் இதன் பொருளில் தான்.
30. Geo- ஜெகம், செகம், சனித்தல், பிறப்பித்தல்,
உயிர் உருவாகக்கூடிய ஒரே கிரகம் இந்த
பூமி என்பதால்.
31. Prima vera(பிறிமா வேரா)- வசந்த காலம், மழை,
குளிர் காலம் முடிந்து இலை துளிர்க்கும் காலம்.
தமிழில் இது வசந்த காலம் என்றாலும் சரியான
வார்த்தை பசந்த காலம் என்கிறார் தமிழறிஞர்
இராம.கி. எங்கும் பசுமை இருப்பதால் இப்பெயர்.
prima vera- என்றால் பிரதம வருகை, துளிர்களின்
முதல் வருகை தான் prima vera.
32. Secoli (சேக்கோழி)-ஊழி, பன்நெடுங்காலம், பல
காலம்
33. Metere(மேதெரே)-மாத்திரை, செய்யுளில் நேர்
நேர் புளிமா என்று வெண்பா பற்றி தமிழ்
வகுப்புகளில் படித்திருப்போம்.
அப்போ அளவுகளுக்கு மாத்திரை என்று சொல்லக்கேட்டுரு
ப்போம். அதேதான். அந்த மாத்திரைதான், metere,
ஆங்கிலத்தில் meter.
34. Calendario (காலெந்தாறியோ )- கால அந்தம்-ஆதி.
காலத்தின் தொடக்க முடிவு.
35. Zodiaco (சோதியாகோ)-ஜாதகம், சோதியம்,
சோதி (ஜோதி) யாக இருக்கும்
பலகோடி நட்சத்திரங்களைப்பற்றிய துறை. நாம்தான்
ஜாதகம். ஜோசியம் என்று சொல்லிகொண்டிருக்கிறோம்.
36. Cena (சேனா)- சேனம், சேனம் என்றால் உணவு.
போசனப்பிரியன்-சாப்பாட்டுராமன், இராபோசனம்,
இராவுணவு.
37. Colazione (கொலாட்சியோனே)- காலை சேனம்,
காலை உணவு.
38. Pranzo (பிரான்சோ)- மதிய உணவு.
இந்த விளக்கம் எனது தனிப்பட்ட கருத்து.
மாற்று விளக்கம் இருந்தால் தெரியப்படுத்தலாம்.
பொதுவாக தமிழர்கள் தொடக்க காலத்தில் விவசாயிகள்.
மதிய உணவு சமைக்க நேரம் இருக்காது.
ஆகவே முந்தைய நாள் சோறை தண்ணி ஊற்றி பழைய
சாதமாக சாப்பிடுவார்கள். அந்த
பழஞ்சோறு பிழஞ்சோறு, பிரான்சோறு, பிரான்சோ என
ஆகியிருக்கலாம்.
39. Orientale (ஒரியென்தாலே)-Occidentale
(ஒக்சிதேந்தாலே)
இந்த oriental என்ற வார்த்தை கிழக்கத்திய என்ற
பொருளில் பயன்படுத்துகிறோம். சரிதான். சூரியன்
உதிக்கும் பகுதியில் உள்ள நிலங்கள். உதியந்தல்.
இது ஏறக்குறைய ஜப்பான் முதல் துருக்கி வரை உள்ள
பகுதியைக்குறிக்கும். occidental என்றால்
மேற்கத்திய என்று அர்த்தப்படுத்துகிறோம்.
அது சரியல்ல. உண்மையில் சூரியன் உச்சியில்
இருக்கும் பகுதி என்றே பொருள்படும். உச்சிதன்தல்.
அதாவது, ஐரோப்பா, ஆப்பிரிக்கா முழுவதையும்
குறிக்கும். அப்ப சூரியன் மறையும் பகுதியில் உள்ள
நாடுகளை எப்படி அழைப்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக