ஞாயிறு, 4 ஜூன், 2017

பிரபாகரன் பற்றி பாவலேறு கவிதை பெருஞ்சித்திரனார் 1988 கனிச்சாறு நூல் மூன்றாம் தொகுதி

aathi tamil aathi1956@gmail.com

25/11/14
பெறுநர்: எனக்கு
ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே !
நீ எங்கே இருக்கிறாய் ?
`````````````````````````````````
ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே!
தமிழீழத்தின் அடிமையிருள்
போக்க வந்த வீரத்திருச்சுடரே!
தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே!
இந்திய நாய்களின் வேட்டை மானே!
நீஎங்கே இருக்கிறாய்?
உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாய்
உன் ஆர்த்த அரியணை மேனிக்குக்
குறி வைத்திருப்பதாய்ச்
சொல்லிச் சொல்லி
எள்ளி நகையாடுகிறார்களே,
இராசீவின் வஞ்சக வேடர்கள்!
தஞ்சம் கோராத தமிழனே!
அஞ்சாமையின் தொகுப்பே!
நீ,எங்கே இருக்கிறாய்?
கனிவுக்குக் கைகொடுத்து,
கல்போன்ற நின்தோளை நீவீ,-உன்
கழுத்துக்குக் கத்திவைக்கும் எத்தர்கள்,
உன்னைச் சுட்டுப் பொசுக்கக்
குறிவைத்துத் திரிகிரார்களாமே!
மறம் மாண்ட தோற்றமே!
அறம் மாண்ட தமிழினத்தின் ஆற்றல் மறவனே!
விழுப்புண் வேங்கையே!
நீ எங்கே இருக்கிறாய், சொல்!
பேராண்மையனே! வீரப் பெரியோனோ!
ஊறஞ்சா வெல்படைத் தலைவனே!
இந்திய எலிப் பகையை
உயிர்த்தழிக்கும் நாகமே!
உன் உயிர்க்கு விலைபேசிய போதும்,
உள்ளம் நடுங்காத
தமிழினத் தானைத் தலைமகனே!
உன்னை ஓர் இலக்கம்
கொல் படையும் ஊர் ஊராய்,
காடு காடாய்த்
தேடி வருகிறார்களாமே!
அடல் தகையும் ஆற்றலும் சான்ற
படை வேந்தனே!
உன் விளையாட்டுக்கு
முற்றுப் புள்ளி வைக்க,
இந்தியச் சூழ்ச்சிப் படைகள்
கைகளில் கருவி யேந்தி
உலா வருகின்றனவாமே!
நீ,எங்கே இருக்கிறாய் !
சொல் மகனே! சொல்!
கூற்றுடன்று மேல்வரினும்
கூடி எதிர்க்கும் ஆற்றலே!
வேல் கொண்டு எறியுனும்
அழித்தமைக்கா விழித்த கண்ணனே!
இராசீவுக்கு,
உன் செங்குருதி வேண்டுமாம்!
உன் புடைத்து விம்மிய தோள்களும்
உடல் தசைகளும் வேண்டுமாம்!
உடல் புதைபோய், உனை வீழ்த்த
வெறி கொண்டலைகிறது அந்த
வீணப் பிறவி!
எதிரி விரகர்களுக்கு
எரிமலையே! ஏற்றமே!
உன் தோற்றமே
தொள்ளாயிரம் இந்திய வீரர்களை
மலைத்தோடச் செய்யுமென்றால்
உன் நெஞ்சாங்க்குலையைத் தின்ன
நீட்டிய வெட்டெஃகத் தோடு,
அலையோ அலையென்று
அலைகிறார்களாமே, இந்திய
வேட்டை நாய்கள்!
நீ எங்கே உழல்கிறாய்? சொல்?
எந்தக் காடு மேடுகளில்
அல்லாடுகின்றாய் சொல்!
வெட்சிக் கானத்து
வேட்டுவர் ஆட்டும்
கட்சி காணாத
கடமா நல்லேறே!
புறநானூற்றுச் செல்வமே!
தமிழர் வீரப் புதையலே!
கடந்த ஐந்தாண்டு காலமாய்
நூறாயிரம் இந்தியக் கழுதைகள்
மேய்ந்து தின்றும்
நுனிமழுங்கவில்லை,-எம்
தமிழரின் வீரம் - என்று,
பனி உலகுக்குப் பறைசாற்றும்
பழம் பாண்டியத் திருமறமே!
சுழழும் இசை வேண்டி
உயிர் வேண்டா வீரனே!
உயிர் அஞ்சா மறவனே!
உலகில் வேறெந்த வீரனுக்கும்
இல்லாத ஓங்கிய பெருமை
உனக்குண்டு; உன் வீரருக்குண்டு!
உலகின் மூன்றாம் வலிமை வாய்ந்த
இந்தியப் படைக்கே சூளுரைத்தாய், நீ!
முயல் வேட்டை யன்று,நீ
விளையாடுவது!
யானை வேட்டை! ஆம்!
காட்டு யானை வேட்டை!
வீட்டுக்காக வன்று நீ போரிடுவது!
நாட்டுக் காக! தமிழீழ நாட்டுக்காக!
நாற்பத்தைந்து இலக்கம்
தமிழர்க்காக, உன் தோள்கள்
புடைத்து வீறு கொண்டெழுந்தன!
உன்னைச் சுற்றி ஓர் இலக்கம்
எதிரிப் படைப் போர் மறவர்!
நாலு பக்கம் வேடர் சுற்றிட
நடுவில் சிக்கிய மான்போல்,
வேட்டையாடப் படுகிறாய்!
கழகத் தமிழினத்தின்
கவின் தொகுப்பே
நீ எங்கே இருக்கிறாய்?
இலங்கையில் இராவணன் இருந்தாலன்றோ
உனக்குத் துணை வருவான்!
நீ இருப்பதோ, பகைவரின் வீடு!
நீ உழல்வதோ வல்லிருள் காடு!
உனக்குத் துணை உன் பீடு!
உருப்படுமா இந்த நாடு?
பகைவர் கைகளில்
அகப்படாத அருந்தமிழ்ப் பேறே!
அன்னைத் தமிழீழத்தின்
ஒரு தனி மகனே!
ஒப்பற்ற தமிழின வீறே!
முன்னை, கடந்த
ஈராயிரம் ஆண்டு
முதுமை அடிமை விலங்கை
முறித்தகற்ற வந்த சீரே!
முடிந்தடா உன்னோடு
தமிழினத்தின் விடுதலைப் போரே!
அகன்ற வானின்
அல்லல் நிலாவே!
புகன்று விடு! நீ எங்கே
புறப்பட்டுப் போனாய்?
எங்கே இருக்கிறாய்?
ஐந்து கோடித் தமிழர்கள் இங்கே
உனக்காக அன்றாடம்
தவமிருக்கிறோம்!
உயிர் நோம்பு நோற்கிறோம்!
உன்னை நோக்கி
உழலும் உயிரைத் தேக்கி,
உன் கொள்கை முயற்ச்சியை ஊக்கி
உனக்குதவுவோம் பகையைப் போக்கி!
செங்களம் துழாவும்
செங்கதிர்க் கையனே!
எங்களை விடுவிக்க வந்த ஏந்தலே!
எங்கே நீ இருக்கிறாய்!
அங்கே நாங்களும்
உன் உடனே இருக்கிறோம்!
அஞ்சாதே! நீ!
அனைவரும் உன்
உயிரோடு உயிராய்ப்
பின்னிப் பிணைந்திருக்கிறோம்!
ஆற்றல் மறவனே!
அமைந்ததடா விடுதலை ஈழம்!
அழியாமல் விளங்கிற்றடா உன் புகழ்!
நீ வாழ்க!
உன் கொடிவழி வாழ்க!
-- பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1988 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக