முதல் இந்திய விடுதலைப் போர் எது?
1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போரே "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று வடநாட்டரால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் மதங்களின் சாயலோடு வெளிப்பட்ட போர்.
ஆனால் இந்தப் போருக்கு 57 ஆண்டுகளுக்கு முன்னர் சாதி, மத பேதங்களைக் கடந்து, உழைக்கும் மக்களை பெரும் திரளாக அணிதிரட்டி வெள்ளையர் படைக்கு எதிராக போரிட்டவர்கள் மருது பாண்டியர்கள் ஆவார். தூந்தாஜி வாக் (கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக் (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), ஆகியோரோடு இணைந்து "ஜம்புத்தீவு -தென்பகுதி- கூட்டமைப்பை" உருவாக்கி வெள்ளையருக்கு அதிக உயிர் சேதத்தை உருவாக்கிய மன்னர்கள் மருதிருவர் என்று ஜேம்ஸ் வெல்ஷ் என்பவன் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளான்.
சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. "ஜம்புத்தீவு புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது. இதைப் படித்து ஆத்திரமுற்ற வெள்ளையர் அரசு சின்னமருது உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் 500 பேரை கைது செய்து திருப்பத்தூரில் தூக்கிலேற்றியது. 1800- களில் இதுபோன்றதொரு வரலாற்றுப் பதிவு வடநாட்டில் கிடையவே கிடையாது.
வீரஞ்செறிந்த மருதிருவர் நடத்திய தமிழர் போராட்டத்தை தில்லியரசு திட்டமிட்டு மூடி மறைத்து விட்டது. இந்திய தேசியக்கட்சித் தலைமைகள் வடநாட்டார் கையில் இருப்பதால் 1857- ஆம் ஆண்டுப் புரட்சியை வெட்கமின்றி "முதல்ப் புரட்சி" யென்று முன்மொழிகின்றன. திராவிடக்கட்சிகளும், சாதிய இயக்கங்களும் இந்திய தேசியம் வாந்தியெடுத்ததையே இப்போதும் வாங்கி விழுங்குகின்றன. 1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியைக் கூட "தென்னிந்திய புரட்சி" என்று சொல்லும் பாரதமாதா பஜனைகள் 1857ஆம் ஆண்டுப் புரட்சியை "வட இந்தியப் புரட்சி" என்று சொல்வது தானே பொருத்தமானது. உலகின் முதன் மொழி தமிழ். உலகின் முதல் மாந்தன் தமிழன். உலகின் முதல் கண்டம் தெற்கே உருவான குமரிக்கண்டம் என்பார் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர். அவர் வழியில் திருத்தப் பட்ட வரலாற்றை தமிழர்களே! திருத்தியெழுதுவோம்! ||மருதுபாண்டியர் தூக்கிலிட்ட நாள்|| *24.10.1801
நன்றி : கதிர் நிலவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக