|
11/12/14
| |||
|
ஐந்து சங்கங்கள் நடத்தும் பாண்டியர் பரம்பரை
"வரண்டியவேல்" - இது தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூரில் இருந்து 16 கிலோ மீட்டர்
தூரத்தில் ஆத்தூர் - குரும்பூர்
இடையே பார்த்தாலே பசியைப்போக்கும் பசும் வயல்
சூழ்ந்த பகுதியில் உள்ள எழில் கொஞ்சும் கிராமம்
ஆகும். இந்த கிராமத்தில் சுமார் 250 வீடுகள்
இருக்கின்றன. இங்கு 10 மெம்பர் இந்து நாடார்
மக்களே வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 3
சகோதரர்களின் வாரிசுகளே அனைவரும் இரத்த
சொந்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள். சிறிய
கிராமமாக இருந்தாலும் மூர்த்தி சிறிதானாலும்
கீர்த்தி பெரிது என்பதற்கிணங்க இந்த கிராமம்
விவசாயம் மதிப்பாக இருந்த போது மிகவும்
செழிப்பாக விளங்கியது.
சகோதரர்கள் 3 பேர் ஜமீன்தாரர்களாக அதாவது நில
உடைமைக்காரர்களாக வாழ்ந்து வந்தார்கள். அந்த
பகுதியில் கொற்கைத்தமிழில் இதை நிலைமைக்காரர்கள்
என்பார்கள். இப்போது அவர்களின் வாரிசுகள் 10 மெம்பர்
இந்து நாடார்களாக அந்த
நிலங்களை கூறுபோட்டு சுமார் 250
குடும்பத்தினராக வாழ்கிறார்கள். நாடு முழுவதும்
விவசாயத்துக்கு மதிப்பு குறைந்து வியாபாரம்
செழிக்க தொடங்கியது. என்றாலும் சுமார் 1980
வரையிலும் வரண்டியவேல் கிராம மக்கள்
விவசாயத்தையே நம்பி இருந்தனர்.
அதன்பிறகு இனி விவசாயத்தை நம்பி பலன்
இல்லை என்று உணர்ந்த பிறகே அவர்கள் சென்னை, கோவை,
போன்ற நகர்ப்பகுதிகளுக்கு இடம்மாறி சென்றனர்.
சிறிய ஊராக இருந்தாலும், அவர்கள் தாங்கள்
பாண்டியர்கள் பரம்பரை என்பதை நிரூபிக்கும் விதமாக
பல சங்கங்கள் அமைத்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொ
ண்டனர். விவசாயப்பணிகளை முறைப்படுத்த விவசாய
ஒப்படி சங்கம் சுமார் 100 ஆண்டுகளாக
செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுமார்
75 வருடங்களாக ஊரில் உள்ள
இளைஞர்களை வழிநடத்தவும், பட்டிமன்றம் போன்ற
நிகழ்ச்சிகள் நடத்தி தமிழை வளர்ப்பதற்காகவும்
முத்தமிழ்ச்சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அனைத்து வீட்டு இளைஞர்களிடமும்
சந்தா வசூலித்து அதனைப்பயன்படுத்தி தமிழ்
வளர்க்க75 வருடங்களாக முத்தமிழ்ச்சங்க
த்தை நடத்தி வரும் இவர்கள் தற்போது வணிக
நோக்கத்துக்காக சென்னையில் குடியிருப்பதால்
சென்னைவாழ் வரண்டியவேல் நாடார்கள் நல சங்கம்
ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த சங்கம்
கடந்த டிசம்பர் மாதம்
வெள்ளிவிழா கண்டு இருக்கிறது.
இது தவிர ஊரில் உள்ள இளைஞர்கள் மார்கழி மாதம்
தோறும் அதிகாலை 4 மணிக்கே தங்கள் குலதெய்வமான
முத்தாரம்மன் கோவில்
முன்பு கூடி அங்கு இருந்து பஜனை பாடிச்சென்று ஊர்
சுற்றி வருவது வழக்கம். இதற்காக "
திருநீற்று தொண்டர் குழாம்" என்ற பெயரில்
ஒரு சங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த சங்கம்
சுமார் 35 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த
சங்கத்துக்கு திருஞான சம்பந்தர் திருநீற்று தொண்டர்
குழாம் என்ற அழகிய
சைவப்பெயரை தெய்வத்திரு காசித்துரை நாடார் என்ற
சர்க்கரை நாடார் சூட்டினார். அது மட்டுமல்லாமல்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய
சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் கந்த
சஷ்டி திருவிழாவில் விரதம் இருக்கும் அன்பர்கள்
வரண்டியவேல்
சஷ்டி விரதக்குழு ஒன்றை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
இதுவும் சுமார் 30 வருடங்களாக செயல்படுகிறது.
இப்படி சின்னஞ்சிறு கிராமமாக இருந்தாலும், 5
சங்கங்களை அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வருளம்
இந்த கிராமமக்கள் தாங்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
கொற்கைப்பாண்டியர்களின் வழி வந்தவர்கள்
என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
அருகில் உள்ள படங்களில் 1941-ம் ஆண்டில் வரண்டியவேல்
10 மெம்பர்கள

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக