|
5/11/14
| |||
|
ஆதி சங்கர்
குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக
முத்துராமலிங்கம் மட்டுமே போராடினார்
என்பது மோசடியான பொய் !
இச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுமைக்கும்
பல்வேறு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள்.
எதிர்த்திருக்கிறார்கள். அதில் முத்துராமலிங்கத்
தேவரும் ஒருவர். சரியாக வரலாற்றைப் புரட்டிப்
பார்த்தால் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்கள்
பட்டியலில் கடைசியாக இடம்பெற வேண்டிய பெயர்
தேவரின் பெயர் என்ற உண்மையை அறியலாம்.
தமிழ்நாட்டில் செய்யூர் ஆதி திராவிடர் பேரவை,
வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள்
போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில்
இருந்து விடுவித்தன.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத
ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட
கள்ளர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில்
இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911-
லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப்
பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப்
பகுதி ஈச நாட்டுக் கள்ளர்களை மீட்டிருக்கிறார்.
இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத்
தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
அப்போது அவருக்கு வயது 3.
1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள
பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்
சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ்
அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம்
நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய
துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17
கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப் பரம்பரைச்
சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக
முக்கியப் போராட்டம் இதுதான். இந்தப்
போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும்
எந்தத் தொடர்பும் கிடையாது.
அவருக்கு அப்போது வயது 12.
மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக்
கொண்டு இருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக