ஞாயிறு, 4 ஜூன், 2017

மனைவி மீதான பயம் பற்றி பரத்தை கூறும் குறுந்தொகை பாடல் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

6/11/14
பெறுநர்: எனக்கு
வாய்ச்சொல் வீரன் இவன்.. (குறுந்தொகை:8)
இது காதற் பரத்தையர் ஒருத்தி, தலைவனைக்
குறித்து சொன்னது...
வாய்க்காலுக்கு அருகில் உள்ள மாமரத்திலிருந்து,
விழுந்த முற்றியக் கனியை, நீரில் நீந்திவரும்
வாளை மீன் எளிதில் கவ்விக்கொள்ளும்.. இத்தகைய
ஊரையுடைய தலைவன் இவன். இவன் என்
வீட்டிற்கு வந்தால்.."தான் அப்படி, தான் இப்படி"
என்றெல்லாம் ஓங்கி பேசுவான்.. ஆனால் தன் வீட்டிற்குப்
போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய
அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான்
தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத்
தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும்
நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம்
ஆடுவான்..!! (இவனது வாய்ச்சொல் வீரமெல்லாம்
என்னிடம்தான்!!)
******************************
************
கழனி மாத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
-ஆலங்குடி வங்கனார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக