|
13/12/14
| |||
|
நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள்
14.12.1959
திராவிடன் என்று சொல்லாதே...!
"ஆதியில் ஆரியர் தமிழர் பகை ஏற்பட்டதற்கு முக்கிய
காரணம் தமிழின் தொன்மையையும் சிறப்பையும்
பாராட்டாமல் சமஸ்கிருதம் தேவமொழி என்று கூறித்
தமிழ்நாட்டில் அதைக் கொண்டு வந்து புகுத்தினார்கள்.
அப்பொழுதே தமிழர்கள் அதை வன்மையாக எதிர்த்தார்கள்.
பெரியார் எதைச் செய்தாலும் அதற்கு நான் என்றும்
உடன்படுவதில்லை. என் மனச்சான்று எதைச்
சொல்லுகிறதோ அதைத் தான் நான் ஏற்றுக் கொள்வேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
என்றொரு வாசகம் உண்டு. இப்படி இருக்கக்
கூடாது என்று எண்ணி சிலர்
தென்னாட்டு சிவனை வடநாட்டில்
வாழ்வோனே போற்றி என்று எழுதி வைத்தார்கள்.
இந்நாளில் பலர் திராவிடர்
என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழன்
என்று சொல்ல உங்கள் வாய் ஏன் கூசுகிறது? தமிழ்,
தமிழன் என்று சொல்ல வெட்கப்படுபவன் தமிழனாயிருக்க
முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் ரத்தம்
ஓடும்? இனியாவது தமிழ், தமிழர் என்று சொல்லுங்கள்.
தமிழருக்கு தமிழரே பகைவர். கவர்னர்
ஜெனரலாயிருந்த இராச கோபாலாச்சாரியார் தலைகீழ்
நின்று இந்தியை கட்டாயமாக்கினார். பெரும்
போராட்டத்திற்குப் பின்னர் அது எடுக்கப்பட்டது.
அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் என்னுடைய
வேலையை இராஜினாமா செய்து விட்டு இந்தியை உங்களுடன்
கூடி எதிர்த்தேன்.
நாம் வெறும் மாநாடு கூட்டுவதால் தமிழ்
வளர்ந்து விடாது. உண்மையிலேயே நம் தாய்மொழியாகிய
தமிழை வளர்க்க நீங்கள் விரும்பினால் உங்கள்
வாழ்க்கையில் நாள் தோறும் எழுத்திலும் சொல்லிலும்
நீங்கள் தமிழை நன்கு பயன்படுத்த வேண்டும்.
சிவன் தான் எங்களுக்கும் கடவுள். சிவம் என்றால்
நேர்மை, நிறைவு என்று பொருள்.
சிவநெறி என்பது பழைய தமிழ்ச்சொல். உபய வேதாந்த
சைவ சித்தாந்த மகா சமாஜம். இதில் எது தமிழ்
என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.
தமிழை அகத்தியன் வளர்த்தான் என்று கூறுவது முழுப்
பொய். தமிழைப் படித்ததால் அகத்தியன்
பெருமை பெற்றான். கம்பன் கூட அகத்தியனைப் பற்றிக்
கூறும் போது, "என்றுமுள தென்றமிழ்
இயம்பி இசை கொண்டான்" என்று கூறியுள்ளார்.
அகத்தியன் கடவுள் அல்லன். நம்மைப் போல ஒரு மனிதன்.
அகத்தியனைப் பற்றிப் புராணங்கள் கட்டுக் கதைகள்
பரப்பின.
பழைமையெல்லாம் கெட்டதன்று. தமிழ் வளர வேண்டுமானால்
முதலில் அறிவு வளர வேண்டும். தமிழர் எல்லோரும்
ஒரே இனம் தான். தமிழினத்தில் சாதியே இல்லை.
சாதி என்ற பெயரே தமிழில் இல்லை.
திருக்குறளிலே சாதி என்ற ஒரு சொல்லைக் கூட நீங்கள்
காண முடியாது. சாதிச் சனி இடைக் காலத்தில் தான்
வந்தது.
சர்க்காரைத் தாக்கி நான்
உண்மை பேசுகிறேனே என்று என்னை அரசியலார்
சிறையில் தள்ளினாலும் தள்ளலாம். அதற்கு நான் அஞ்சப்
போவதில்லை"
(நூல்: மறுமலர்ச்சி பக்கம் 54 -63)
கோவை மாநகரில் 1950ஆம் ஆண்டு மே திங்கள் 27, 28
ஆகிய திகதியில் தி.மு.க. சார்பில் முத்தமிழ்
மாநாடு நடத்தப்பட்டது. அதில்
மாநாட்டு திறப்புரையாக நாவலர் சோம சுந்தரம்
பேசியதே மேற் கண்ட உரையாகும். பெரியாரின் சீடர்
அண்ணாவை மேடையில் வைத்துக்
கொண்டே திராவிடத்தை மறுத்து நாவலர் பேசிய
போது அண்ணாவோ பதறிப் போனார்.
ஒரு படி மேலாக தூய நெறி தமிழ்க்காவலர் அண்ணல்
தங்கோ அவர்கள் "திராவிடம் என்ற சொல்லைக்
கேட்டாலே காதிலே நாராசம் ஊற்றியது போல்
இருக்கிறது" என்றும், "முத்தமிழ்
மாநாட்டிலே மூவேந்தர் சின்னமான புலி, வில், கயல்
பொறித்த தமிழ்க் கொடியை காண ஏன் ஏற்ற வில்லை?
என்றும் சினம் கொண்டு பேசினார்.
குலை நடுங்கிப் போய் அண்ணாவோ பதில் அளிக்கையில்,
திராவிடம் பற்றி என்னிடம் நேரில் தெரிவித்திருக்க
லாம். நம்மிடையே வேற்றுமை வரக்
கூடாது என்று மழுப்பலாக பேசி முடித்தார்.
நாவலர் சோம சுந்தர பாரதியார், அண்ணல் தங்கோ,
கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர்
திராவிடத்தை கைவிடும் படி விடுத்த
கோரிக்கையை 63 ஆண்டுகளாக கிடப்பில் திராவிட
இயக்கங்கள் போட்டுள்ளன.
ஆந்திரத் தெலுங்கர்கள், கேரள மலையாளிகள்
ஆகியோருக்குக் கீழே தமிழர்களை இரண்டாம் தரக்
குடிகளாக மாற்றுவதற்கு இருபதாம் நூற்றாண்டில்
திராவிட இயக்கத்தார் கையாண்ட சொல்லே திராவிடம்!
இன்றைக்கும் அண்டைய கன்னட, ஆந்திர, மலையாள தேசிய
இனங்களால் தமிழ்த்தேசிய இனம் தன்னுடைய ஆற்றுநீர்
உரிமையை மிக அதிகமாகவே இழந்து வருகிறது.
இதனை உணராது திராவிட இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்
என்கிற கூக்குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கிறது.
அண்டைய இனங்களை சேர்த்துக் குறிக்கும் 'திராவிடப்'
பெயரை சுமப்பதை இழிவாகக் கருதி முன்வர
வில்லையென்றால் ஒட்டுமொத்தமாக திராவிட
இயக்கங்களை இழிவாகக் கருதி தமிழர்கள்
புறக்கணிக்கும் காலம் வரும்
என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்
கொள்கிறோம்! —
kathir nilavan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக