ஞாயிறு, 11 ஜூன், 2017

ம.பொ.சி தமிழ்ப்பற்று தாய்ப்பால் பைத்தியம் பதிலடி

aathi tamil aathi1956@gmail.com

3/10/14
பெறுநர்: எனக்கு
'தமிழ் மீட்புப் போராளி' ம.பொ.சிவஞானம்
நினைவு நாள்
3.10.1995
பரங்கி மொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்!
'செங்கோல்' தொடர் கட்டுரையில், தமிழில் உயர்தரக்
கல்வி போதிப்பதைத் தாய்ப்பாலூட்டிக்
குழந்தையை வளர்ப்பதற்கும், பரங்கி (ஆங்கில)
மொழியில் போதிப்பதைப் புட்டிப்
பாலூட்டி வளர்ப்பதற்கும் ஒப்பிட்டு, தாய்ப்பாலில்
வளர்க்கும் குழந்தை ஆரோக்கியத்துடன்
இருப்பது போல, தாய்மொழியில் கல்வியில்
கற்பித்தால் தான் அறிவு வளரும் என்றும்
கூறியிருந்தேன்.
இந்தக் கருத்து பைத்தியக்காரத்தனமாகப்
படுகிறது பெரியாருக்கு. ஒரு மொழியைத்
'தாய்மொழி' என்று கூறுவதும், மொழியறிவைத்
தாய்ப்பாலோடு ஒப்பிடுவதும் மூடத்தனம் என்றும்
கூறுகிறார் ஈ.வெ.ரா.
ஆங்கிலம் பயின்று பட்டம் பெறாததால் தான் எனக்குத்
தாய்ப்பால் பைத்தியம் பிடித்திருப்பதாக என்பால்
அனுதாபத்தோடு என்னிடமுள்ள 'குறையை' எடுத்துக்
காட்டியுள்ளார் பெரியார்.
இதனை ஒரு பட்டதாரியல்லவா சொல்லி இருக்க
லேண்டும்?
இந்தத் தாய்ப்பால் 'பைத்தியம்' எனக்கு மட்டுமல்ல;
ஆங்கில மொழியில் கவிபுனையும் ஆற்றல் பெற்ற
கவி தாகூருக்கும் உண்டு. பரங்கி மொழியில்
பட்டம் பெற்ற காந்தியாருக்கும் உண்டு.
அவர்களுக்கு மட்டுமா? ஆங்கிலேயருக்கும் கூட
உண்டு. இதனைப் பெரியார் அறியார் போலும்! இல்லை;
என்னைக் கூற வேண்டும் என்பதற்காக அறிந்தும்
அறியாதவர் போல எழுதுகிறார்!
"தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்?
படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?
என்று கேட்கிறார் பெரியார். ஆம்;
தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும்
என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க
வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே,
வீட்டு மொழியாக -நாட்டு மொழியாக இருக்கலாம்"
என்பது தான். இது 'பரங்கிமொழிப் பைத்தியம்'
அல்லாமல் வேறு எதுவோ?
ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும்
நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார்.
ஆங்கிலத்தில் பேசுவதில்லை.
"மொழி என்பது ஒருவர்
கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப்
பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்
படுவது? இதைத் தவிர மொழியில் வேறு என்ன
இருக்கிறது? இதற்காக தாய்மொழி என்பதும்,
தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும்,
முன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும்
எதற்காக? எனக்குப் புரியவில்லை"
என்கிறார் ஈ.லெ.ரா. இதனை வாதத்திற்காக ஒப்புக்
கொள்வதானால், ஆங்கில மொழியில் தான்
அறிவு இருக்கிறது, புதுமை இருக்கிறது,
விஞ்ஞானம் ஒளி விடுகிறது..
என்று சொல்வதெல்லாமும் மூடத்தனம் தானே? ஒருவர்
கருத்தை மற்றவருக்கு அறிவிப்பதற்கு அதிகமாக
மொழியில் ஒன்றும் இல்லை என்றால்,
நமது வீட்டுமொழியான தமிழிலேயே உயர்தரக்
கல்வி கற்பித்து, அந்த இடத்தில் ஆங்கிலத்தைக்
கை விடலாமே? இதனைப் பெரியார் ஏற்பாரா?........
"தமிழின் மூலம் மூட
நம்பிக்கைதானே வளர்க்கப்பட்டது"
என்கிறார். ஆங்கில மொழியும் ஆங்கிலம் பயின்ற
தமிழர்களும் கூட, இந்தக் குற்றச்சாட்டுகள
ுக்கு விலக்கல்லவே. தமிழே பயிலாத தமிழிலுள்ள
புராண இதிகாசங்களைத் தன் கரத்தாலும்
தீண்டியறியாத டாக்டர் ஏ.எல்.முதலியார்
ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவை ஏற்றுக் கொண்டவரா?
நெற்றியில் நாமமிட்டு நாராயணனைப்
பஜனை செய்பவராயிற்றே!
ஆங்கிலம் பயின்று பி.ஏ.பி.எல். பட்டம் பெற்ற
பி.டி.ராசன் பக்திக்குப் புறம்பானவரா? ஐயப்பன்
சிலையைத் தலையில்
சுமந்து கொண்டு அவனி முழுவதும்
பவனி வருபவராயிற்றே!
ஆங்கில மொழி பயின்று பட்டம் பெறாத பெரியார்
ஈ.வெ.ரா.வைப் போல சீர்திருத்தப் புரட்சியாளர்
ஆங்கில மொழி பயின்றவர்களிலே ஒருவரைக் கூட
நான் கண்டதில்லையே.
எஸ்.இராமநாதன், கே.எம்.பாலசுப்பிரமணியம்,
லட்சுமிரதன் பாரதி, சி.என்.அண்ணாத்துரை போன்ற
ஆங்கில மொழிப் பட்டதாரிகளைச் சீர்திருத்தப்
புரட்சிப் படையின் தளபதிகளாக்கினார
ே பெரியார். அவர்களின் இன்றைய
நிலையை ஈ.வெ.ரா.வும் அறிவாரல்லவா?
ஆகவே, பரங்கிமொழிப் படிப்பிற்கும்
பகுத்தறிவு இயக்கத்திற்கும் கொஞ்சம் கூட
சம்பந்தமில்லை என்பதை ஈ.வெ.ரா. உணர வேண்டும்.
பரங்கி மொழியின் காரணமாக அல்லாமல், அதனைக்
கருவியாகக் கொண்டு பயின்ற விஞ்ஞானக்
கலையறிவு காரணமாகக் கற்றவர்களிடையே, மூட
நம்பிக்கைகள் பெருமளவுக்குத்
குறைந்துள்ளது உண்மை தான். ஆனால், அத்தகைய
விஞ்ஞான அறிவைப் பெற்றோர்
உயர்தரக்கல்வி கல்வி கற்றவர்கள் தானே? அவர்கள்
தொகை சில இலட்சத்திற்கு மேல் இல்லையே! நான்
விரும்புவது போல் தமிழைப்
பயிற்சி மொழியாக்கி, அம்மொழியிலே விஞ்ஞானக்
கலை நூல்கள் வெளிவர வாய்ப்பளித்தால்,
கல்லூரியை எட்டிப் பாராத சாதாரண மக்களும்
தங்கள் தாய்மொழியின் வாயிலாக விஞ்ஞான
அறிவு பெற்று மூடநம்பிக்கையில
ிருந்து விடுதலை பெற
வாய்ப்பு கிடைக்குமல்லவா?
இந்த ஒன்றிற்காகவேனும் பெரியார் ஈ.வெ.ரா.
பயிற்றுமொழிப் பிரச்சனையில்
எனக்கு ஆதரவளிக்கலாமே!
ஆங்கில மொழி பயில்வதை நான் எதிர்க்க வில்லை.
வரவேற்கிறேன். ஆனால், அதனை ஒரு மொழியாகப்
பயில வேண்டுமேயன்றி விஞ்ஞான மொழிகளைப்
போதிக்கும் போதனா மொழியாகச்
செய்து விடக்கூடாது என்பதே என் கொள்கை.
( தமிழா? ஆங்கிலமா? எனும் தலைப்பில்
உயர்கல்வியில் தமிழ்ப்
பயிற்றுமொழியை ஆதரித்து தனது 'செங்கோல்'
ஏட்டில் தொடர் கட்டுரை எழுதி வந்தார் ம.பொ.சி.
அதற்கு மறுப்பாக பெரியார்
'விடுதலை' (1.12.1960) ஏட்டில் 'தாய்ப்பால்
பைத்தியம்' என்று தலையங்கம் எழுதினார்.
அதற்கு மீண்டும் பதிலடியாக
ம.பொ.சி 'செங்கோல்' (25.12.1960) ஏட்டில்
எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.)

மபொசி மொழிப்பற்று ஈ.வே.ரா ஈவேரா
search  தமிழைப் பழித்த ஈ.வே.ரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக