சனி, 3 ஜூன், 2017

ஈவேரா மணியம்மை திருமணம் பற்றி அண்ணாதுரை

aathi tamil aathi1956@gmail.com

30/11/14
பெறுநர்: எனக்கு
ஈ.வெ.ரா – மணியம்மை விவாகத்தைப் ‘பொருந்தாத் திருமணம்’
என்று அண்ணாதுரை விவரித்தார்.
“காமப்பித்து கொண்டு அலையும் ஆண்கள் வயோதிகப்
பருவத்திலே, வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும்
என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம்
காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மான
ரோஷத்தில் அக்கறை உள்ள வாலிபர்கள் அந்தத் திருமணம்
நடைபெற இடம் தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளில்
முழக்கம் இட்டவர் ஈ.வெ.ரா.” என்று சுட்டிக் காட்டிய
அண்ணாதுரை, “இப்படிப்பட்ட அறிவுரையைப் புகட்டியவர்,
தமது 72-ஆம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத்
திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக்
காணிக்கையாகத் தருவது தவிர, வேறென்ன
நிலைமை இருக்கும்!” என்று கேட்டார்.
சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, 72-க்கும் 26-
க்கும் திருமணம்
நடத்துகிறார்களே என்று கேலி பேசுவதைக் கேட்டு,
நெஞ்சு வெடிப்பதாகவும் அண்ணாதுரை குறிப்பிட்டார்.
“முத்தம் இடவந்த குழந்தையின் மூக்கைக் கடித்து எறியும்
தாயை நாங்கள் கண்டதில்லை. தந்தையே! நாங்கள் செய்த
தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள்
செய்து எங்கள் தன்மானத்தை அறுத்து எறிவது ஏன்? என்ன
குற்றம் இழைத்தோம்? ஏன், என்றும் அழியாத அவமானத்தைத்
தேடித் தருகிறீர்?” என்று அடுக் கடுக்கான
கேள்விகளை ஈ.வெ.ரா.வை நோக்கி அண்ணாதுரை எழுப்பினார்.
“எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம்
உரைத்தாலும், 72-26 – இதை மறுக்க முடியாதே!
இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே”
என்று அண்ணாதுரை சுட்டிக் காட்டினார்.

மேலும் பல
 http://134804.activeboard.com/t44595205/topic-44595205/?sort=newestFirst&page=1&w_r=1408876313
 
கல்யாணம் மூத்திரசட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக