சனி, 3 ஜூன், 2017

நடிகை கட்சி நிதி 4லட்சம் மேலவை கலைப்பு எம்ஜிஆர் வெண்ணிற ஆடை நிர்மலா மலையாளி

aathi tamil aathi1956@gmail.com

8/12/14
பெறுநர்: எனக்கு
John Durai Asir Chelliah
“நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான்” ..என எம்.ஜி.ஆர். முடித்து வைத்த
இன்னொரு விஷயம்...சட்டமன்ற மேலவை...!
எம்.ஜி.ஆர். காலம்வரைக்கும் , சட்டசபையில்
மேலவை என்று தனியாக
ஒரு சபை இருந்து வந்தது...
அந்த மேலவைக்கு 1986 - ல் வெண்ணிற
ஆடை நிர்மலாவை உறுப்பினராக நியமனம்
செய்தார் எம்.ஜி.ஆர்...
நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
நினைத்ததை முடித்த நிம்மதியில் இருந்த
எம்.ஜி.ஆரின் இந்த திட்டத்திற்கு எதிர்பாராத
ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது....
வெண்ணிற
ஆடை நிர்மலா ஏற்கனவே முன்பு ஒருமுறை திவாலானவர்.....
இந்திய அரசியலமைப்பின் 102-(1)c
பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற
உறுப்பினராகவோ, மாநில சட்டமன்றங்களின்
உறுப்பினராகவோ ஆக
முடியாது என்று ஒரு வழக்கறிஞர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல
மனு ஒன்றைத் தாக்கல் செய்ய ..திகைத்துப்
போனார் எம்.ஜி.ஆர்...
ஆனாலும் அவரது நினைத்ததை முடிக்கும்
முயற்சியை விட்டு விடவில்லை...
நிர்மலாவின் கடன்களை அடைப்பதற்காக
அ.தி.மு.க கட்சி நிதியிலிருந்து 4,65,000
ரூபாயை கடனாக நிர்மலாவுக்கு அளித்தார்
எம்.ஜி.ஆர்....
உடனே நீதிபதி , நிர்மலாவின்
மேலவை நியமனத்தை ஏற்றுக் கொள்ள....
“நினைத்ததை முடிப்பவன்”
எம்.ஜி.ஆருக்கு நிம்மதி ஏற்பட்டது...
ஆனால் அடுத்த பிரச்சினை ஆளுநர்
குரானா வடிவத்தில் வந்தது...
“திவாலான
ஒருவரது வேட்பு மனு எப்படி ஏற்றுக்
கொள்ளப்பட்டது..?” என்று எம்.ஜி.ஆரிடம்
விளக்கம் கேட்டார் கவர்னர் குரானா...
கவர்னரின் இந்த கண்டனத்தால் கடுப்பாகிப்
போனார் எம்.ஜி.ஆர்.!!!
“மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள்
குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம்
வரவேற்பதோ”..
என்று பொங்கி எழுந்த எம்.ஜி.ஆர். ..தான்
நினைத்த வெண்ணிற ஆடை நிர்மலாவை ஏற்றுக்
கொள்ளாத மேலவை இருந்தால்
என்ன..இல்லாவிட்டால் என்ன..?என
எண்ணி மேலவையை ஒரேயடியாக கலைத்து ,
உத்தரவு ஒன்றை , உடனே போட்டு விட்டார்...
ஆகஸ்ட் 30, 1986 இல் இந்தியக் குடியரசுத்
தலைவரின் ஒப்புதலைப் பெற்று ..... நவம்பர் 1,
1986 இல் இந்தச் சட்டம்
அமலுக்கு வந்து சட்டமன்ற
மேலவை கலைக்கப்பட்டது....
ஆம்...எம்.ஜி.ஆர்.
என்றுமே நினைத்ததை முடிப்பவன்...
மேலவை கதையை அன்றோடு முடித்து வைத்து விட்டார்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக