ஞாயிறு, 4 ஜூன், 2017

முல்லைப்பெரியாறு மீட்க நேசமணி விவாதம் கண்ணன் தேவன் ஒப்பந்தம் சான்று 1956 தேவிகுளம் பீர்மேடு


aathi tamil aathi1956@gmail.com

1/11/14
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
1956, நவம்.1. மொழி வழித் தமிழ்நாடு பிறந்த நாள்
"தெற்கெல்லைக் காவலன்" மார்சல்
நேசமணி அவர்களுக்கு வீர வணக்கம்!
ஆந்திரம் தனிமாநில பிரிவினைக்கு பிறகு
பிரதமர் நேரு அவர்கள் 22.12.1953 இல்
பசல்அலி (பீகாரி) என்பவரை தலைவராகக் கொண்ட
எல்லை புனரமைப்புக்குழுவை நியமித்தார்.
இக்குழுவின் உறுப்பினர்களாக கே.என்.குன்சுரு,
கே.எம்.பணிக்கர் ஆகியோர் இருந்தனர்.
இதில் கே.எம்.பணிக்கர் ஒரு மலையாளி மட்டுமல்ல,
இனவெறியரும் கூட. வரலாற்றுத் துறையிலும்
ஈடுபாடு கொண்டவர் அவர். பணிக்கர் எழுதிய 'கேரள
வரலாறு' நூலில் (History of kerala)
திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டர்
நாயர்களை வீழ்த்துவதற்காக -தென் திருவிதாங்கூர்
தமிழர்கள் மற்றும் திருநெல்வேலி மறவர்கள் படை -
கீழ்ப் பிறவிகளான தமிழர்கள் உதவியை நாடினார்
என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை 'கீழான
பிறவிகள்' என்று சித்தரித்த பணிக்கர்
தமிழர்களுக்கு எப்படி நீதி வழங்குவார்? அவரின்
விருப்பமே இறுதியில் வென்றது.

10.10.1955இல் வெளியிடப்பட்ட பசல்
அலி பரிந்துரையில் தமிழர்கள் பெரும்பான்மையாக
வாழும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்
கேரளவோடு இணைக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டது. பசல்அலியின் மலையாள ஆதரவுப்
போக்கை உடனே கண்டித்துப் பேசியவர்கள் இரண்டு பேர்.
ஒருவர் ம.பொ.சிவஞானம். மற்றொருவர் நேசமணி.
செய்தியாளரிடம் நேசமணி பேசியது வருமாறு: "
பெரியார் அணையிலிருந்து தண்ணீர் பெறுவதில்
சென்னைக்கும் திரு.கொச்சிக்கும் மாறுபாடான
கருத்து நெடு நாட்களாக உண்டு.
மேற்படி அணையிலிருந்து வரும் நீர் முழுமையாகச்
சென்னை மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு, நெல்
சாகுபடிக்கு பயன் படுகிறது. அந்த நீர் அராபியக்
கடலில் விழுந்தாலும் பரவாயில்லை.
சென்னை மாகாணத்திற்குப் பயன்படக்
கூடாது என்று மலையாளிகள்
ஒருமித்து கருதுகின்றனர் " (The hindu
17.10.1955).

நேசமணி உடனடியாக சென்னைக்குச்
சென்று காமராசரை சந்தித்து தேவிகுளம்,
பீர்மேடு பகுதிகளை மீட்கும்படி வேண்டியும்
பலனில்லாமல் போனது. தன்னை சந்தித்துப் பேசிய
மற்றொரு தெற்கெல்லை போர் வீரர்
பி.எஸ்.மணி என்பவரிடம் "
குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவிற்குள் தான்
இருக்கிறது" என்று
காமராசர் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.
காமராசருக்கு 'பச்சைத் தமிழன்' பட்டம் கொடுத்த
தந்தை பெரியாரும் கூட,
கேரளவிற்கே பச்சை கொடி காட்டினார்.
பசல்அலி அறிக்கை வெளியிடப்பட்ட போது, பெரியார்
திருச்சியில் இருந்து செய்தியாளர்களுக்கு அளித்த
பேட்டி வருமாறு: " தேவிகுளம்,
பீர்மேடு பகுதிகளுக்கு தொழிலுக்காகத் தமிழர்கள்
அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச்
சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும்
சரி ஏற்றுக் கொண்டேன்" (தினத்தந்தி 11.10.1955)
தி.மு.க. இயக்கம் கண்ட அறிஞர் அண்ணாவும் உள்ளூர்
அளவே தான்ஆதரவு தந்தார்.
தமிழகத் தலைவர்கள் ஆதரவு தராத நிலையில்
நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய
மார்சல் நேசமணி அவர்கள் மனம்
கொதித்து நாடாளுமன்றத்தில் வீர முழக்கமிட்டார்.
1955 ஆம் ஆண்டு டிசம்பர் 14,15,16 ஆகிய
மூன்று நாட்கள் ஆற்றிய
எழுச்சியுரை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட
வேண்டிய ஒன்றாகும். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்
தமிழருக்கே சொந்தம் என்பதை ஆதாரத்தோடு விளக்கும்
அந்த உரையின் முக்கியப்பகுதிகள் பின்வருமாறு:

 "தேவிகுளம் பீர்மேடு பகுதி கி.பி.1889
வரை திருவிதாங்கூர் நாட்டைச் சேர்ந்த பகுதியல்ல.
திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தில் திரு.நடராஜ
பிள்ளை தனது அறிக்கையில் பூஞ்சார் ராஜா பாண்டிய
மரபினர் எனக் குறிப்பிள்ளார். (அப்போது மீனச்சல்
கொடுக்காப்பள்ளி என்ற மலையாளி பூஞ்சார்
ராஜா திருவிதாங்கூர்காரர் என்றான்.)
இக்கூற்று அரசுக் குறிப்பேட்டின் படியானதாகும்.
ஆனால் திரு-கொச்சியின் வரலாற்று ஆசிரியர்கள்
பூஞ்சார் மன்னன் பாண்டிய மரபினன் என்றும், அவன்
'மீனாட்சி சுந்தரம்' என்றே ஒப்பமிடுவதாகவும்
குறிப்பிட்டுள்ளனர்.
பூஞ்சார் மன்னரின் பற்றுச் சீட்டுகள் அனைத்திலும்
'மதுரை மீனாட்சி துணை' என்ற
முத்திரை காணப்படுகிறது. பாண்டிய மன்னரின் கீழ்
மதுரை நாயக்கர் ஆண்ட காலத்தில் அவர்களுடைய
ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே தேவிகுளம்,
பீர்மேடு இருந்து வந்துள்ளது.
1889 வரை திருவிதாங்கூரின்
பகுதியே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகும். கண்ணன்
தேவன் மலை விளைபொருள் உற்பத்திக் கம்பெனியாரின்
முன்னோடிகள் முதலில் 1879இல் பூஞ்சார் இராஜாவுடன்
தான் உடன்படிக்கை செய்தனர்.
1889இல் பெரியாறு நீர்த்
தேக்கத் திட்டத்தினைச் செயல்படுத்திய போது இந்திய
அரசின் செயலாளர் திருவிதாங்கூர் மன்னருடன்
ஒப்பந்தம் மேற்கொண்டார்.
அது திருவிதாங்கூர்
மன்னருக்குச் சாதகமாக அமைந்தது.
 அதனால் இந்த மாற்றம் 1879 முதல் 1889 வரையிலான இடைப்பட்ட
காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது.
அக்கால கட்டத்தில் பூஞ்சார் இராஜாவிடமிருந்த
ு குத்தகை அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர்
ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இவ்வாறிருக்க, 1935ம் ஆண்டு வரை தேவிகுளம்
பீர்மேடு பகுதிகளுக்குத் திருவிதாங்கூரில
ிருந்து சென்று சேர பாதையே இல்லை.
இவ்விவரம் 1951இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின்
வழியாக தேவாரம், குமுளி, போடி நாயக்கனூர், கம்பம்
மற்றும் சிறுமலைக் கணவாய் வழியாகத் தான்
தேவிகுளம் பீர்மேட்டிற்குச் செல்ல முடியும்.
இக்கணவாய்கள் வழியாகத் தான் வாணிகம் ஓங்கியது.
ஆணைக்குழுவானது அப்பகுதியின் மக்கள்
'குடியேறிவர்கள்' என்றும், 'வந்து சென்று போகக்
கூடியவர்கள்' என்றும் ஆதாரமற்ற வகையில் தகவல்
கூறப்பட்டுள்ளது.

தேவி குளத்திற்குச் சென்று தேயிலை காடுகளைக்
கேளுங்கள். தமிழ்மக்கள்
நெற்றி வியர்வை சிந்தி தமிழர்களின் குருதியால்
வளர்க்கப்பட்டவை என்றும், தமிழ் முன்னோர்களின்
எலும்பும், அவர்களின் சாம்பலும், தேயிலைச்
செடிகளுக்கு உரமாயின என்றும், தமிழ் இளவல்களின்
பிஞ்சுக்கரங்களால் நட்டு வளர்க்கப்பட்டவை அவை என்றும்
வரலாறு கூறும் அச்செடிகள். அச்செடிகளும் அவ்வூர்
மக்களும் கூறுவர் இது தமிழ்நாடு தான் என்று!"
 
மண்மீட்பு அணை மலையாளி கேரளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக