ஞாயிறு, 4 ஜூன், 2017

கரு வளர்ச்சி பற்றி சித்தர் தமிழ் அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

15/11/14
பெறுநர்: எனக்கு
ஒதுக்குவதும் மறுப்பதுமா வளர்ச்சி?
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறிவியல் வசதி இல்லாத அந்தக்
காலத்தில், 'செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்’ என
23 மி.மீ. அளவிலான கர்ப்பப்பையையும்
'பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ்
சிரசு முறுப்பாகும்’ என்று, ஐந்தாம் மாதம் காது,
மூக்கு உதடும், ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும்
என, கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும்
கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், பரராச
சேகரத்திலும், யூகி சிந்தாமணியிலும் சொன்னவர்கள்
நம் சித்தர்கள்.
1700-களில் வெறும் கால்நடையாகவும் குதிரையிலும்
உலகின் பல பகுதிகளுக்கும் சென்று ஏராளமான
தாவரங்களைப் பதிவுசெய்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த
'நவீனத் தாவரவியலின் தந்தை’ கார்ல்
லின்னேயஸுக்கு வரலாறு கொடுத்த மரியாதையை, நம்
தமிழ் சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்.
இயற்கையைப் பார்த்து மற்ற மரபுகள்
பயந்து கொண்டிருந்தபோதே,
அதனை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் ஒரு நீண்ட
அறிவியல் தேடல் நம்மிடையே இருந்தது. அந்த
அறிவியலை அப்படியே ஒதுக்குவதும்
மறுப்பதுமா வளர்ச்சி?
-மருத்துவர் கு.சிவராமன்
ஆனந்த விகடன், ஆறாம் திணையில் இருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக