சனி, 3 ஜூன், 2017

1938 சோமசுந்தர பாரதியார் தனித்தமிழ்நாடு ஈவேரா ஏடு வெளியிட்டது

aathi tamil aathi1956@gmail.com

14/12/14
பெறுநர்: எனக்கு
இந்தியாவை நினைத்து நம்
தமிழ்நாட்டை நாமிழக்க வேண்டுமா?
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தால் மட்டும்
போதாது. அது நமக்கே உரியதா?
என்பதை அறிதல் வேண்டும். ஆங்கிலர்
ஆட்சியிலும் இந்தியா இந்திய நாடு தான்
எனில், அது இந்தியருடைய உரிமையற்றதாயிரு
ந்தது. அதுபோல் காங்கிரஸ் ஆட்சியில்
மாகாணங்கள் மாகாண மொழி உடையாருடையன
என்ற அளவோடு அமையுமா?
அல்லது ஒவ்வொரு மொழியுடைய
மாகாணமும் அந்தந்த அரசியல்
மொழியினர்க்கே உரிமையுடையதாகப்
போகிறதா? தமிழகம் தமிழருக்கே உரியதா?
அல்லது படேல், நேரு, போசு, முதலிய
வடநாட்டாரின்
ஆதிக்கத்துக்கு அடங்கி மீட்சியற்று அன்னோர்
ஆட்சிக்கடிமை நாடாகப் போகிறதா?
இந்தியாவை நினைத்து நம் சொந்த
தமிழ்நாட்டை நாமிழந்து ஓம்ப வேண்டுமா?
சாவா மருந்து தேடி நம் தமிழ்ச் சமுதாய
வாழ்வு பேணுக. தமிழும், தமிழகமும்
தலை நின்றோங்கி வீறு பெறுக!
(4.12.1938இல் காரைக்குடியில் இராமநாதபுரம்
மாவட்ட
இரண்டாவது தமிழ்மாநாடு நடைபெற்றது.
அதில் நாவலர் சோமசுந்தர பாரதியார்
தலைமையேற்று உரை நிகழ்த்தியது. இந்த
உரையை பெரியாரின்
குடியரசு ஏடு 18.12.1938இல் வெளியிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக