|
19/12/14
| |||
|
கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு நாள் 19.12.1994
பெரியாருக்கும் கி.ஆ.பெ.வி.க்கும்
நடந்தது தனிநபர் மோதலா?
1937ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்புப்போரில்
வெளிப்பட்ட இரண்டு முழக்கங்கள் 1)
மொழிவழி மாகாணம், 2)தமிழ்நாடு தமிழருக்கே.
இதற்குக் காரணம் 1920களின் தொடக்கத்தில் தீவிரமாக
தெலுங்கர்கள் தனி மாநிலம் கேட்டனர்.
நீதிக்கட்சி தலைவரும் தெலுங்கருமாகிய
பொப்பிலி அரசர் 1931இல் இலண்டன்
வட்டமேசை மாநாட்டில் தனி ஆந்திர மாநில
கோரிக்கையை முன் வைத்துப் பேசினார். கன்னடரான
பி.சிவராவ் கன்னடமொழி பேசுகின்ற பகுதிகளைத்
தனிக் கர்நாடக மாநிலமாக உருவாக்க குரல்
எழுப்பி வந்தார். இத்தகு சூழலில் தான்
இந்தி எதிர்ப்புப் போரின் மூலம் தமிழர்களிடமும்
மேற்கண்ட இரண்டு கோரிக்கைகள் வலுவடைந்து வந்தன.
இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த
பெரியாரோ நீதிக்கட்சிக்கு தலைவரானவுடன்
'தமிழ்நாடு தமிழருக்கே'
முழக்கத்தை கை கழுவினார்.
'திராவிடநாடு திராவிடருக்கே'
என்று திசை மாற்றிப் பேசினார். இவருக்கு முன்னால்
இருந்த நீதிக்கட்சி தலைவர்
பொப்பிலி அரசரிடமிருந்த தெலுங்கு தேசிய
உணர்ச்சியைப் போல் பெரியாருக்கு தமிழ்த் தேசிய
உணர்ச்சி ஏற்படவில்லை.
நீதிக்கட்சிக்குள் இருந்த சில தெலுங்கர்களின்
முடிவுக்கு பெரியார் அடிபணிந்தார்.
இதற்கு நீதிக்கட்சி பொதுச்செயலாளர்
கி.ஆ.பெ.விசுவநாதம் கடும்
எதிர்ப்பு தெரிவித்தார். அது மட்டுமின்றி,
பெரியாரின் சர்வாதிகாரப்
போக்கை கண்டித்து தனது பொதுச் செயலாளர்
பதவியை விட்டு விலகவும் செய்தார். பெரியாரின்
தளபதி அண்ணாதுரையோ கி.ஆ.பெ.விசுவநாதம்
அவர்களை அமைதிப்படுத்த விரும்பினார்.
அதன்படி அவருக்கு கடிதமொன்றை தீட்டினார்.
அது வருமாறு: "15.1.1942இல் சென்னையில் ஜஸ்டிஸ்
இளைஞர் சங்க மாநாடு நடைபெற உள்ளதால்
அம்மாநாட்டிற்கு தாங்கள் தலைமை வகிக்க வேண்டும்.
திராவிடநாட்டுப் பிரிவினை பற்றி திருவாரூரில்
தீர்மானம் நிறைவேறி இருப்பதால் அதனை தாங்கள்
எதிர்ப்பது முறையாகாது. திராவிட நாட்டுப்
பிரிவினை என்பது என்பது தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண்
அல்ல."
கி.ஆ.பெ.விசுவநாதம் கருத்துக்கு மதிப்பளிக்கத்
தயாராக இல்லாத பெரியாரும், அண்ணாவும் அடுத்த
கட்டமாக நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம்
என்று பெயர் மாற்றவும் முடிவு செய்தனர்.
அப்போது செளந்தர பாண்டியனாருக்கு
அண்ணா ஒரு கடிதம் தீட்டினார். அதில் வரக்கூடிய
சேலம் (1944) மாநாட்டிற்கு கி.ஆ.பெ.விசுவநாதம்
அவர்களை வர வழைக்க வேண்டும். அதற்கு தாங்கள் நேரில்
சென்று அவரை சந்தித்து உண்மை நிலைமைகளை விளக்கி கூறும்படியும்
கேட்டுக் கொண்டார். அக்கடிதத்தில்
அண்ணாதுரை திராவிடம் குறித்து கி.ஆ.பெ.வி.யின்
முரண்பட்ட கருத்தையும் தெரிவித்திருந்தார்.
அது வருமாறு: "தமிழ்நாடு தனி நாடாதல் வேண்டும்,
திராவிட நாடு அல்ல என்று கூறுவார். K.A.P. தவிர
மற்றவர்கள் திராவிட நாடு என்ற குறிக்கோளோ,
வரலாறு, இனப் பண்பு, முதலியவற்றுக்கு
ஏற்றது என்பதையும் திராவிட நாடு என்னும்
திராவிட கூட்டாட்சி என்பதையும் ஏற்றுக்
கொண்டார்கள்."
அந்த சேலம் மாநாட்டிலே கி.ஆ.பெ.வி.யின் தமிழ்த்
தேசியக் கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. பெரியாரின்
விருப்பத்திற்கிணங்க அண்ணாதுரை தீர்மானம் என்ற
பெயரில் நீதிக்கட்சியின் பெயர் திராவிடர்கழகமாக
மாற்றம் பெற்றது.
அதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்து கி.ஆ.பெ.வி.
வெளியேறினார். பின்னர் தமிழர் கழகம் எனும்
அமைப்பை கி.ஆ.பெ.வி. தோற்றுவித்து செயல்பட்டார்.
அப்போது (1949) பெரியாரை விட்டு அண்ணாதுரையும்
விலகி திராவிட முன்னேற்றக்கழகம்
இயக்கத்தை நடத்தி வந்தார். கி.ஆ.பெ.வி.யிடம்
அணணாவின் தி.மு.கழகம் குறித்து கேள்வி எழுப்பப்
பட்டது. கி.ஆ.பெ.வி. சொன்ன பதில் இது தான்:
"கழகத்தை நடத்துவோர் வெற்றிப் பாதையில்
விரைந்து செல்ல விரும்பினால், 'திராவிட' என்ற சொல்
மாறி 'தமிழர்' என்ற சொல் அமைந்து 'தமிழர்
முன்னேற்றக் கழகம்' என அது திகழ வேண்டும்" என்றார்.
பெரியாருக்கும் கி.ஆ.பெ.விக்கும் நடந்தது தனிநபர்
முரண்பாடு தவிர, கொள்கை முரண்பாடு அல்ல
என்று பச்சைப் பொய்யை பெரியாரியவாதிகள்
தற்போது எழுதி வருகின்றனர். பெரியாரிடம்
தனிப்பட்ட முரண்பாடு கொண்டிருந்தால் கி.ஆ.பெ.வி.
அண்ணாவோடு தி.மு.க.வில் இணைந்து பணியாற்றியிருக்
க முடியும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் அண்ணாவின்
திராவிடத்தையும் எதிர்த்து நின்று அவர் தமிழ்த்
தேசியக் கொள்கையில் உறுதி குலையாமல்
இருந்துள்ளார். இதன் மூலம் பெரியாருக்கும்
கி.ஆ.பெ.வி.க்கும்
நிகழ்ந்தது கொள்கை முரண்பாடு தான்
என்பதை அண்ணாவின் இரு கடிதங்களும், அண்ணாவின்
இயக்கம் குறித்து கி.ஆ.பெ.வி.யின் பதிலும்
இதனை திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக