ஞாயிறு, 4 ஜூன், 2017

ம.பொ.சி போராடி மீட்ட 639 கிராமங்கள் காமராசர் துரோகம் மண்மீட்பு 1957

aathi tamil aathi1956@gmail.com

1/11/14
பெறுநர்: எனக்கு
1956, நவம்பர் 1. மொழி வழித் தமிழ்நாடு பிறந்த
நாள்
"வடக்கெல்லைக் காவலன்"
ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு வீர வணக்கம்!
தமிழ்நாட்டின்
வடக்கெல்லை வேங்கடமலை என்று மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெரும் பாடல்கள்
தெரிவிக்கின்றன.
திருப்பதி கோயிலுள்ள 38இல் 25
தமிழ் கல்வெட்டுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
1911இல் பிரித்தானியர் நிர்வாக வசதிக்காக வட
ஆற்காடு மாவட்டத்திலிருந்து சித்தூரை தனியாகப்
பிரித்தெடுத்தனர். இருமொழிப்பகுதிகளாக இருந்த
சித்தூர் தெலுங்கரின் ஆதிக்கத்தால் மெல்ல மெல்ல
தெலுங்குப்பகுதிகளாக மாற்றப்பட்டன.

1912இல் தெலுங்கர்களால் தொடங்கப்பட்ட
'விசாலா ஆந்திரா' கோரிக்கை
 1953இல் நீறுபூத்த
நெருப்பாகியது. 'மதராஸ் மனதே'
என்று பொட்டி சிறிராமுலு உண்ணாநிலைப் போர்
நடத்தி மடிந்தார். அவரின் மரணம்
தெலுங்கர்களை விழிக்க வைத்தது. பிரதமர்
நேருவையோ குலைநடுங்க வைத்தது. உடனே ஆந்திரம்
"இன்று முதல் தனிமாநிலமாக இயங்கும்"
என்று நேரு அறிவித்தார்.
இதனை தமிழ்ப்பகுதிகளில் இயக்கம் நடத்திக்
கொண்டிருந்த காங்கிரசு பேரியக்கமும், திராவிட
இயக்கமும் விரல் சூப்பி வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தன.
ஒரே ஒரு குரல் மட்டும் புதிய தமிழகம் படைத்திட
தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்தது. அதன் பெயர்
ம.பொ.சிவஞானம்.

அவர் தான் மொழிவழி மாகாண கிளர்ச்சி வேண்டி 1946
முதலே 'தமிழ்முரசு' ஏட்டில் எழுதி வந்தார்.

காங்கிரசில் இருந்து போராடி தோற்ற நிலையில்
'தமிழரசு கழகம்' எனும் அமைப்பை கட்சிக்குள்
நிறுவினார். 15.8.1947இல் இந்தியா ஆங்கில
ஏகாதிபத்தியத்தி
யத்திடமிருந்து விடுதலை பெற்றதும், " போர் முடிய
வில்லை, போர் முனை தான் மாறுகிறது"
என்று முரசறைந்தார்.

மறுநாள் 16.8.1947இல்
திருப்பதி நோக்கி பனிரெண்டு தோழர்களோடு புறப்பட்டார்.
அவருக்கு சிறந்த தமிழறிஞராகிய மங்கலங்கிழார்
துணை நின்றார். வடக்கெல்லைப் போராட்டப் போராளிகள்
திருவாலங்காடு, கனகம்மா சத்திரம்,
திருத்தணி போன்ற ஊர்களில் 'வேங்கடம்
வரை தமிழருக்கே உரிமை' என்பதைப் பொதுக்கூட்டம்
மூலம் மக்களிடம் எடுத்துரைத்தனர். தெலுங்கர்களின்
கடும் எதிர்ப்பிற்கிடையில்,
திருப்பதிக்கே சென்று வேங்கடத்தை மீட்டெடுப்போம்
என்று உரத்த குரலில் முழங்கினர்.
தெலுங்கரின் 'மதராஸ் மனதே'
முழக்கத்திற்கு பதிலடியாக, "தலையை கொடுத்தேனும்
தலைநகர் காப்போம்" என்று முழங்கவும் ம.பொ.சி. தயங்க
வில்லை. அவரின் போராட்டத்திற்கு அன்றைய முதல்வர்
இராசாசி துணை நின்றார். சென்னை தமிழர் வசமானது.

அதற்கு ஈடாக வடவேங்கடம்,
திருத்தணிகை பறிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தமிழர்கள் சத்தியாகிரகம்,
பொதுவேலை நிறுத்தம், இரயில் மறியல்
என்று தொடர்ந்து வடக்கெல்லையில் போராட்டம் நடத்தினர்.

18.5.1953இல் புத்தூரில் நடந்த எல்லைப்பாதுகாப்
பு கூட்டத்தில் தெலுங்கர்கள்
புகுந்து கற்களை வீசினர்.
அதில் கலந்து கொண்ட
ம.பொ.சி. அவர்கள் நல்ல வேளையாக உயிர் தப்பினார்.

அதன் பிறகு 3.7.1953 இல் திருத்தணிகையில்
போராட்டம் நடத்திய ம.பொ.சி. கைது செய்யப்பட்டார்.
இராசாசி அரசு ஆறுவார காலம் சிறைத்
தண்டனை வழங்கியது.
போராட்டம் தீவிரமடைவதை கண்ட நேரு அரசு சித்தூர்
மாவட்டம் தகராறுக்குரிய பிரதேசம் என ஒப்புக்
கொண்டது.
 எல்லை ஆணையம் அமைக்கப்படும்
என்று அறிவித்தது.
ஓராண்டாகியும் ஆணையம்
அமைக்கப்படாததால் ம.பொ.சி. இதனைக்
கண்டித்து
 
3.7.1954இல் சித்தூர் தினம்
கொண்டாடமாறு அழைப்பு விடுத்தார்.

அப்போதைய முதல்வர் காமராசர் அவர்கள்
காங்கிரசுகாரர்கள் யாரும் இதில் பங்கேற்கக்
கூடாது என்று உத்தரவிட்டார்.
கட்சியின்
தடையை மீறி தமிழரசு கழகம் சார்பில் சென்னையில்
பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் இரண்டு இலட்சம்
மக்கள் திரண்டனர்.
தமிழரசு கழகத்திற்கு செல்வாக்கு பெருகி வருவதைக்
கண்டு காமராசர் அஞ்சத் தொடங்கினார்.
தமிழரசு கழகத்தை முடக்குவதற்கு காமராசர்
திட்டமிட்டு வந்த நிலையில் ம.பொ.சி. 8.8.1954இல்
காங்கிரசை விட்டு வெளியேறினார்.
எல்லை ஆணையம் தேவையில்லை என்று தமிழக முதல்வர்
காமராசரும், ஆந்திர முதல்வர் கோபால் ரெட்டியும்
அறிவித்த போது ம.பொ.சி. வெகுண்டெழுந்தார்.

மூன்றாண்டுகள் கடந்த நிலையில், 28.9.1956இல்
சட்டமன்றம் முன்பு மறியல் நடத்தி ஒரு வாரம்
சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்நாடு முழுவதும் ரயில் நிறுத்தம், கறுப்புக்
கொடி போராட்டங்கள் தீவிரமடைந்தன. வடக்கெல்லைப்
போரில் தமிழரசு கழகத் தோழர்கள் பழனி மாணிக்கம்,
திருவாலங்காடு கோவிந்தசாமி ஆகியோர் வீர
மரணமடைந்தனர்.
பெரும் போராட்டத்திற்குப்
பிறகே நேரு அரசு பணிந்தது.
 படாஸ்கர் தலைமையில்
எல்லை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. அது சித்தூர்
மாவட்டத்தில் உள்ள தமிழர்
பகுதிகளை கண்டறிந்து 1957இல் தீர்ப்பு வழங்கியது.

அதன்படி 1.
திருத்தணி வட்டத்தில் 290 கிராமங்கள்,
சித்தூரில் 29 கிராமங்கள்,
 புத்தூரில் 320 கிராமங்களும்,
 
 417 சதுர மைல் நிலப்பரப்பும்
தமிழகத்திற்கு கிடைத்தன.
2,39,502 மக்களும்
தமிழகத்திற்குள் வந்தனர்.
வள்ளிமலை,
திருவாலங்காடு, திருத்தணி, ஓசூர் பகுதிகள்
நமக்கு கிடைத்தன. சித்தூர் நகரம், புத்தூர், நகரி,
புதுப்பேட்டை, ஏகாம்பரக்குப்பம் பகுதிகள் நாம்
இழந்தவைகளாயின.

தெற்கெல்லையில் தேவிகுளம்,
பீர்மேடு பகுதிகளை மலையாளிகளிடம் இருந்து மீட்க
ம.பொ.சி. விரும்பினார்.
பொது வேலை நிறுத்தத்தை தமிழகம் முழுவதும்
நடத்தினார். பலனில்லாமல் போனது.
1954இல்
இராசாசிக்குப் பின் பொறுப்பேற்ற தமிழக முதல்வர்
காமராசர் நேருவிற்கு காவடி தூக்கியும்,
பெரியாருக்கு உற்ற துணையாகவும்
இருந்து கொண்டு ம.பொ.சி. நடத்திய அத்தனைப்
போராட்டங்களையும் உதாசீனப்படுத்தினார்.

ஒருவேளை காங்கிரசிற்கு ம.பொ.சி. தலைமைப்
பொறுப்பு ஏற்றிருந்தால் தாயக மீட்புப் போராட்டம்
மிகப்பெரிய பாய்ச்சல் கண்டிருக்கும். 1956இல்
காமராசரின் தன்னலப்போக்கும், திராவிட இயக்கத்தின்
மொழிவழி அடையாள மறுப்பும் மிகப்பெரிய
கேட்டை தமிழர் நிலத்தில் உருவாக்கி விட்டன. கடந்த
கால வரலாற்றிலிருந்து பாடம் பெறுவோம்! தமிழ்த்
தேசியத்தை உயர்த்திப் பிடிப்போம்!
 
மண்மீட்பு 1956
visit
vaettoli.wordpess.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக