ஞாயிறு, 4 ஜூன், 2017

சிங்கள மீனவர் இந்தியாவில் ராஜவாழ்க்கை கைதானாலும் சுகபோகம்

aathi tamil aathi1956@gmail.com

17/11/14
பெறுநர்: எனக்கு
தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க
வருகிறார்களென்று சிங்களப்படைக்குத்
துப்பு சொல்வதே இந்தியக் கடலோரக் காவல்படைதானோ என்ற
ஐயமும் இருக்கிறது. இதற்கு நேர்மாறான
இன்னொரு காட்சியைப் பார்க்கலாம். சிங்கள மீனவர்கள்
சென்னை கடலோரத்தில் மீன்பிடிக்க வருகிறார்கள்.
விசாகப்பட்டினம் கடலோரத்திலும் மீன்பிடிக்க
வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களை இந்தியக் கடலோரக்
காவல்படையினர் தளைப்படுத்துகின்றனர்.
அவ்வாறு தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்கள்
தமிழ்நாட்டில் எப்படி நடத்தப்படுகிறார்கள்
என்பது கவனத்திற்குரியது. சென்னை கடலோரத்தில்
தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்களைக் கடலோரக்
காவல்படையினர் "வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை" போல்
மரியாதையாக நடத்துகிறார்கள். அவர்களை சென்னை மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார்கள்.
அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டுமென்றும் விரைவில்
விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென்றும்
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திற்கு அறிவுறுத்தல் வருகிறது.
அவ்வாறே கண்ணியமாக நடத்தப்பட்டு புழல் சிறையில்
அடைக்கப்பட்ட ஓரிரு நாட்களில் அவர்கள்
விடுவிக்கப்படுகிறார்கள்.
 ஆந்திரப் பிரதேச கடலோரத்தில் தளைப்படுத்தப்படும் சிங்கள
மீனவர்களைக் கூட கடலேரக் காவல்படையினர் சென்னை மாவட்ட
ஆட்சியரிடம்தான் ஒப்படைக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில்
ஒப்படைத்தால் அங்கு ஒரு மீனவருக்கு ஒரு இலட்ச ரூபாய்
வரை தண்டத்தொகை விதிக்கிறார்களாம். அந்தச் சுமையைத்
தவிர்த்து சிங்கள மீனவர்களுக்கு உதவுவதற்காகக் கடலோரக்
காவல்படையினர் ஆந்திரப்பிரதேச எல்லையில்
தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்களையும் தமிழ்நாட்டில்
ஒப்படைக்கிறார்கள். அந்தளவுக்கு இந்திய அரசின் கடலோர
காவல் படையினருக்கும் சிங்கள
மீனவர்களுக்குமிடையே நல்லுறவு நிலவுகிறது.
தமிழகத்திலுள்ள இனத்துரோக அரசு எந்த
அளவுக்கு சிங்களர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்
நடந்து கொள்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
 http://koodal.com/article/tamil/politics.asp?id=779&title=fishermen-protest-against-lankan-navy
search தெலுங்கு கடற்படை தாக்குதல் வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக