ஞாயிறு, 4 ஜூன், 2017

குமரி மீட்பு துப்பாக்கி சூடு 1956 இறந்தவர்கள் மலையாளி பட்டம் தாணுப்பிள்ளை கொடுஞ்யல்கள்

aathi tamil aathi1956@gmail.com

1/11/14
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
1956, நவம்.1 மொழிவழித் தமிழகம் பிறந்த நாள்
கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான
தெற்கெல்லைப் போர் ஈகியருக்கு வீர வணக்கம்!
திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில்
வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப்
பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்
கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல்
நேசமணி தலைமையில் போராடி வந்தனர். 1954இல்
பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம்
தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார்.
(படத்தில் உள்ளவர் பட்டம் தாணுப்பிள்ளை)
தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள்
தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள்
மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார்.
அதுமட்டுமின்றி, மலையாள
குடியேற்றத்தை அதிகரித்து தமிழர்
தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார். இதனைக்
கண்டித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல்
கொடுக்க மார்சல் நேசமணி மூணாறு வந்த
போது கைது செய்து சிறையிலடைத்தார்.
அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின்
போராட்டம் தீவிரமடைந்தது.
பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக
நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில்
குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர்
விடுதலை நாளாக (Deliverance Day)
கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள்
விடுத்தார். அன்று முழுகடையடைப்பு பேரணி,
பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும்
போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல்
துறை தமிழர்களை நர வேட்டையாடியது.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு தந்த
விவரப்படி ஒன்பது தமிழர்கள் பலியாகினர். பெயர்
வருமாறு: 1.எம்.முத்துசாமி நாயகம், 2.என்.குமரன்
நாடார், 3.ஏ.பீர்முகம்மது, 4.ஏ.அருளப்பன் நாடார்,
5.ஏ.பொன்னையன் நாடார், 6.என்.செல்லப்பா பிள்ளை,
7.எஸ்.இராமையன் நாடார், 8.ஸ்ரீ பப்பு பணிக்கர்,
9.எம்.பாலையன் நாடார்.
இது குறித்து ம.பொ.சிவஞானம் அவர்கள்
தனது "செங்கோல்" (1954 செப்டம்பர்) ஏட்டில், "பட்டம்
பழிவாங்குகிறாரா?" எனும் தலைப்பில்
கட்டுரையெழுதினார். இது மலையாள
இனவெறியை அம்பலப்படுத்தும் மிகச்சிறப்பான
கட்டுரையாகும். இதன் சுருக்கம் பின்வருமாறு:
" ஆகஸ்ட் 11ந்தேதி, தமிழருக்கு வெட்கத்தையும்
வேதனையையும் அளித்த நாளாகும். அன்று,
திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகளில் மனித
வேட்டை நடத்தியிருக்கின்றனர் மலையாளப் போலீசார்.
தாய்த்தமிழகத்தோடு சேர விரும்பிய
ஒரே பாவத்திற்காகப் பத்துத் தமிழர்கள் சுட்டுக்
கொல்லப்பட்டிருக்கின்றனர்!
இது போன்ற கொடுமை கொலை பாதகச் சம்பவம்,
தமிழினத்தாரின் வாழ்வில், தமிழகத்தின் வரலாற்றில்
இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை.
நாற்பத்தைந்து லட்சம் மலையாளிகளைக்
கொண்டது திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யம். அதன்
அண்டையிலுள்ள சென்னை ராஜ்யமோ மூன்று கோடித்
தமிழர்களைக் கொண்டது. இருந்தும்
சென்னை ராஜ்யத்தோடு கலாச்சாரத் தொடர்புள்ள
மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறது
அண்டையிலுள்ள சுண்டைக்காய் ராஜ்யம்.
எவ்வளவு துணிச்சல்!..
ஆகஸ்டு 11ந்தேதி பத்துப்பேரை சுட்டுக்கொன்ற
பின்னரும் மலையாளப் போலீசாருக்கு ரத்த வெறி அடங்க
வில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், கல்குளம்,
விளவங்கோடு தாலுக்காக்களில் தமிழ்மக்கள்
சித்திரவதை செய்யப்படுகின்றனர். கண்ணகி மரபில்
வந்த தமிழ்ப்பெண்ணரசிகள் மாணபங்கப்படுத்தப்
படுகின்றனர். தமிழ் இளம் காளையர்கள் அங்கங்கள்
பழுதாகும்படி அடிக்கப்படுகின்றனர்...
ஹிட்லர் ஜெர்மனியில் அவனால் வெறுக்கப்பட்ட
யூதர்களைக் கூட போலீசார் இவ்வளவு மோசமாகக்
கொடுமைப் படுத்தவில்லை. ஆம், ஹிட்லரையும்
மிஞ்சி விட்டார் இட்டார் இடதுசாரிக்கட்சியின்
முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை.
துப்பாக்கிப் பிரயோகத்தால் மாண்டவர்களின்
பிரேதங்களை உறவினர்களிடம் கொடுக்க
மறுத்து 'புனிச்சமூடு' என்ற இடத்தில் பெட்ரோல்
ஊற்றிக் கொளுத்திச் சாம்லாக்கினராம் போலீசார்.
மற்றும் பட்டம் தாணுவின் கொடுங்கோலாட்சியில்
குடியிருக்க அஞ்சி, நூற்றுக்கணக்கான குடும்பங்கள்
இரவோடு இரவாக திருநெல்வேலிக்க
ு ஓடி வந்து விட்டனவாம்.
இதெல்லாம் உண்மையென்றால், பாஞ்சாலப் படுகொலையின்
போது கூட இத்தகைய கோரச்சம்பவங்கள் நிகழ்ந்ததில்லைய
ென்று கூறலாம். ஜெனரல் டயரையும் மிஞ்சி விட்டார்
பட்டம்...
திருவிதாங்கூர்த் தமிழரின் பிரதேச உரிமைக்
கோரிக்கை ஜனநாயகப்படி நேர்மையானது.
ஆகவே நியாயத்தை ஒட்டியது. தமிழர்களை சுட்டுக்
கொல்வதால் தமிழ்ப்பகுதிகளை ஜீரணித்து விடலாம்
என்று பட்டம் தாணுப்பிள்ளை கருதுவராயின்
அது பலிக்கப் போவதில்லை. தென் திருவிதாங்கூர்
முழுவதையுமே சுடுகாடாக்கி விட்டாலும்
அந்தப்பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட மலையாளிகள்
அடைய முடியாது. இது திண்ணம்.
கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் போலீசார்
செய்துள்ள கொடுமைகள் பற்றி பற்றிப் பகிரங்க
விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்குழுவை
மத்திய அரசினரே நியமிக்க வேண்டும்.
திருவிதாங்கூர்த் தமிழ்ப்பகுதிகளை தாய்த்
தமிழகத்தோடு சேர்ப்பதற்குச் சாதகமாக மாகாண
புனரமைப்புக் கமிஷன் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க
வேண்டும்.
மேற்சொன்ன இரண்டு கோரிக்கைகளும் உடனடியாக
நிறைவேற்றப்படாவிடில், தமிழகத்தில்
மலையாளிகளை வெறுக்கும் உணர்ச்சி பரவுவதை தடுக்க
முடியாது. இது இனவெறியல்ல இனவெறிக்கு எதிர்
நடவடிக்கை! அந்நிலை ஏற்படாமலிருப்பது பட்டம்
தாணுப்பிள்ளையின் கையிலிருக்கிறது..."
1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த
போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை.
கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள்
தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள்
அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள்
மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன்
காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக்
கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். பட்டம்
தாணுப்பிள்ளை வழியில் முன்பு அச்சுதானந்தனும்,
இப்போது உம்மன் சாண்டியும் ஆட்சி நடத்துவதால்
இன்று தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்கும்
நிலை கேள்விக்குறியாகி விட்டது. இழந்த
பகுதிகளை மீட்டெடுப்பது ஒன்றே தமிழர்களை இனி வாழ
வைக்கும்!
 
search குருதியில் நனைந்த குமரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக