செவ்வாய், 17 ஜூலை, 2018

கருணாஸ் தேவர் கிடையாது இரண்டாவது சம்பவம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 7
பெறுநர்: எனக்கு

Posted Date : 14:17 (23/04/2016) Last updated : 16:20 (23/04/2016)
'பிரபலம் என்பதால் பிரச்னை கிளப்புகிறார்கள்...!' - கார்டன் சென்ற புகாருக்கு கருணாஸ் விளக்கம்
அறிவிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்களை மாற்ற வலியுறுத்தி, பல மாவட்டங்களில் திமுக, அதிமுக இரண்டு கட்சியினரும் தங்கள் தலைமையை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இதில் வித்தியாசமான காரணத்தை கூறி, திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் நடிகர் கருணாஸை மாற்ற வேண்டுமென்று ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கருணாஸ்க்கு எதிராக தென் மாவட்டம் முழுவதும் கச்சை கட்டி வருவது தமிழ்நாடு தேவர் கூட்டமைப்பு. கடந்த வாரம் மதுரை கோரிப்பாளையத்தில், தேவர் சிலை அருகே போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்ற இந்த அமைப்பினர்,  தங்கள் கோரிக்கையை ஜெயலலிதாவுக்கும் புகாராக அனுப்பிவிட்டு,  நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.

போராட்டம் நடத்திய தமிழ்நாடு தேவர் பேரவையினரை சந்தித்து, "எதற்காக கருணாஸை மாற்ற சொல்கிறீர்கள்?" என்றோம்.

"கருணாஸ் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கால் அல்லது அதிமுக விசுவாசியாக, தன் பணபலத்தால் சீட் வாங்கியிருந்தால் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் சீட் பெற்றிருப்பது தனது சமூகத்தை அடையாளப்படுத்தி. அதில் பெரிய மோசடி செய்திருக்கிறார். அவர் தன் உண்மையான சாதியை மறைத்து, தமிழகத்தில் கணிசமாக வாழும் தேவர் சாதியின் பிரதிநிதியாக சீட் பெற்றுள்ளார். உண்மையில் எங்கள் சமூகத்துக்கும் அவருக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. இது பெரிய மோசடி. சினிமாவில் நடிக்க வந்த சில நாட்களில் எங்கள் சமூகத்தின் பெயரை பயன்படுத்தி, அமைப்பு ஒன்றை துவக்கும்போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.

அதன்பின்தான் அவரைப் பற்றி தெரியாமல் அந்த அமைப்பில் சேர்ந்த பலர் உடனே விலகினார்கள். தன்னுடைய பண பலத்தை வைத்து, எங்கள் சமூகத்தின் பெயரை பயன்படுத்தி போஸ்டர் அரசியல் செய்து, தனக்கு ஒரு பாதுகாப்பு தேடிகொண்டிருந்தார். இதற்கு மேல் தன்னால் ஏமாற்ற முடியாது என்றுதான் அதிமுகவில் சேர்ந்தார். அங்காவது, தான் என்ன சாதி என்ற உண்மையை சொல்லியிருக்கலாம். அதை அப்படியே மெயின்டைன் செய்து திருவாடானை தொகுதியை பெற்றுள்ளார்.



இதனால் அத்தொகுதியில் போட்டியிடவிருந்த உண்மையான அதிமுகக்காரின் வாய்ப்பு பறிபோயுள்ளது. அந்த பகுதி தேவர் சமூக மக்கள், கருணாஸை தங்கள் சமூகத்து ஆள் என்று ஏமாறும் நிலை உள்ளது. அதனால் சாதி அடையாளத்தில் மோசடி செய்துள்ள கருணாஸ்க்கு பதிலாக, திருவாடானை தொகுதிக்கு வேறு ஆளை மாற்ற வேண்டும் என்று போராடி வருகிறோம்" என்றனர்.

தங்களது கோரிக்கையை ஜெயலலிதா ஏற்க மறுத்தால் அதிமுகவுக்கு எதிராக தேர்தல் வேலை செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  இதனிடையே கருணாஸ்க்கு சீட் வாங்கி கொடுத்தது ரித்தீஷ் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

இது விவகாரம் குறித்து திருவாடானை தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் கருணாஸிடம் கேட்டோம்.

"நாலு வருஷத்துக்கு முன்னாடி இதேமாதிரி ஒரு கும்பல் என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியது. என்னடா இது வம்பாருக்குன்னு, நான் யாரு, என்ன சாதிங்கிறதை ஆதாரத்துடன் அவர்களிடம் காண்பித்தேன். அப்போது தலையாட்டிவிட்டு சென்றவர்கள், இப்போது அதே பிரச்னையை மறுபடியும் கிளப்புகின்றனர்.



எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக