செவ்வாய், 17 ஜூலை, 2018

கச்சத்தீவு சிங்களவர் ஆதரவு கட்டுரை மண்மீட்பு

aathi1956 aathi1956@gmail.com

மார். 5
பெறுநர்: எனக்கு

Last updated : 14:43 (21/06/2016)
எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டதா..?' - அதிர்ச்சி கிளப்பும் ஆட்சியரின் ஆவணம்


சட்டமன்றத்தில் பெருத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கச்சத்தீவு. ' அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வழக்குத் தொடர்ந்தேன். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்?' எனக் கொந்தளித்தார் முதல்வர் ஜெயலலிதா.

' மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்காக கச்சத்தீவை மீட்பேன்' என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் தி.மு.க - அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதம் எழுந்தது. தி.மு.க உறுப்பினர் பொன்முடியின் கேள்விகளுக்கு அதிரடியாக  பதில் அளித்தார் முதல்வர்.

அவர் பேசும்போது, " கச்சத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1974-ம் ஆண்டிலும், 1976-ம் ஆண்டிலும் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து போராட்டம் நடத்தினாரா? மத்திய அரசு மூலமாக நான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேனே தவிர, ஒரு படையைத் திரட்டிக் கொண்டு, கச்சத் தீவை மீட்பேன் என்று பேசவில்லை.

அன்றைய தி.மு.க. முதல்வர் ஏன் மவுனம் சாதித்தார்? ஏன் அதைக் கொடுக்க அனுமதித்தார்? உச்ச நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுத்தது நான். 2008-ம் ஆண்டு,  மத்திய அரசை அணுகி எந்தப் பயனுமில்லை என்று தெரிந்த பிறகு, நான் தனிப்பட்ட முறையில்,  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது இங்கே முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. இன்று மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். அதை எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது" எனக் கொந்தளித்திருந்தார்.




Advertisement


AN EXCLUSIVE GIFT FROM VIKATAN FOR YOU!
MAGAZINE EXCLUSIVES
FOR FREE

Handpicked exclusives from 12 magazines for you to enjoy!

Read >

12 விகடன் இதழ்களிலிருந்து
இலவசமாக

நீங்கள் நேசித்து வாசிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் !
வாசிக்க >





Advertisement


தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டுகாலமாக கச்சத்தீவு என்ற பெயர் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு அரசியலாக்கப்படுகிறது. அதன்பிறகு அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.

" உண்மையில், 1170-ம் ஆண்டில் இலங்கை மன்னன் நிசங்க மல்லனால் ராமேஸ்வரம், ராமநாதசுவாமிக்கு சாசனமாக ஒப்படைக்கப்பட்டதுதான் கச்சத்தீவு. அந்தக் காலகட்டங்களில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நெடுந்தீவில் இருந்து பாலும், கச்சத்தீவில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளது. அப்படிப் பார்த்தால் ராமநாதசுவாமிக்குச் சொந்தமான கச்சத்தீவு என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தவறு" என்றும் சொல்கின்றனர் ராமேஸ்வரம் கோவிலின் நிர்வாகிகள் சிலர்.

" கச்சத்தீவைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்குமே எந்தத் தகுதியுமில்லை. அவர்களின் அரசியலுக்கு கச்சத்தீவு இரையாகிக் கொண்டிருக்கிறது. 1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ' நமது மீனவர்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை' என்ற ஆவணம், இப்போதும் மீன்வளத்துறை வசம் உள்ளது. இதைப் பற்றி இப்போதைய அரசுக்குத் தெரியுமா?" என அதிர வைக்கிறார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன்.

தொடந்து அவர், "  'இலங்கை அதிபரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்படும்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது' என்கிறார் முதல்வர். உண்மைதான். ஆனால், இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது 1983-ம் ஆண்டு (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83). அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்.ஜி.ஆர். இலங்கை அதிபருடன் பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரைபடத்தையே மாற்றி அமைக்கப்பட்டது எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில்தான். இதுபற்றி அன்றைக்கு சட்டசபையில் யாராவது பேசினார்களா? ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சமூகத்து மக்கள் மீன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக