திங்கள், 23 ஜூலை, 2018

பாவலேறு ராஜீவ் காந்தி யை திட்டி கவிதை தானு பாராட்டி கவி

aathi1956 aathi1956@gmail.com

மார். 10
பெறுநர்: எனக்கு

"தமிழ்த்தேசியப் போராளி" பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்
10.3.1933

இராசீவ் காந்தியை அறம்பாடி கொன்ற நின் புகழ் வாழ்க!

மனிதப் புனிதராகிய எங்கள் இராசீவ்காந்தியை கொன்ற எழுவரை விடுதலை செய்யக் கூடாது என்று பேராயக்கட்சியினர் தொண்டை கிழிய கத்தி வருகின்றனர்.

இராசீவ் காந்தி ஒன்றும் மனிதப்புனிதரல்ல, அவர் ஆட்சிக் காலத்தில் தான் காங்கிரசு கொலை வெறிக் கும்பலால் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இராசீவ் காந்தி அனுப்பிய இந்திய கொலைகார இராணுவப்படையால் நம் தொப்புள் கொடி ஈழச்சொந்தங்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சாணியில் இடி விழுவதால் அது தங்கமாகி விடாது என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல இராசீவ்காந்தி சுக்குநூறாக உடல்சிதறி விழுந்தாலும் மனிதப்புனிதராகி  விடமாட்டார் என்பதும் உண்மையே!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் மனிதநேயமிக்க பெருந்தகையாளர் என்பது அவரது பாடல்களில் மூழ்கித் திளைக்கும் அனைவரும் அறிந்திடுவர். மனிதம் பாடிய அவருக்கே இராசீவ் மூலம் நிகழ்த்திய கொடூரக் கொலைகளைக் கண்டு பொறுக்க இயல வில்லை. பெருஞ்சித்திரனார் கைகள் ஆயுதம் தரித்திருந்தால் பொசுக்கென்று போட்டுருப்பார். எழுதுகோல் மட்டுமே பிடிக்கத் தெரிந்தது  அவரின் கையன்றோ?

நீதியின் செங்கோல் வளைந்த மன்னர்களுக்கு அறம்பாடுவது தமிழ்ப்புலவர்களுக்கு கைவந்த கலை. அதன் வழியில் பாவலரேறு எழுதுகோல் தூக்கினார். அவரின் எழுத்து தோட்டாக்கள் நாற்புறமும் எரிமலையாய் வெடித்தன. என்னே! அதிசயம்? மூன்றே ஆண்டுகளில் இராசீவ் காந்தி உண்மையாகவே உடல் சிதறி செத்தே போனார். 

1988இல் "இட்ட சாவம் முட்டுக" -எனும் தலைப்பில் தென்மொழி ஏட்டில் முப்பத்தாறு வரிகளில் எழுதிய அந்தப்பாடல் பின் வருமாறு:

முண்டையின் மகனே! முண்டையின் மகனே!
கொண்டையில் லாத ஒழுகிய முழக்குழல்
கூர்த்த கலுழன் வெவ்வாய் மூக்கின்
ஆர்த்த செருக்கோ டாண்மையின் தோற்றத்து
நாவலந் தீவின் நாயகி யென்ன
மேவலந் திரிந்த அரசியல் மேனகை-
ஆரியக் கெளடிலி- இந்திரா என்னும்
பூரியை பிதுக்கிய முண்டையின் மகனே!

சிங்களக் கொலைஞன் செயவர்த் தனன்எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித் திடவே
முந்து'இராசீவ்' எனும் முண்டையின் மகனே!

உலகப் பந்தின் உயிர்ச்செறி எம்மினம்
விலகாக் குறியினன் ஆகி, விதிர்ப்புற
யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!

நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் வுலகத்து இருக்குநாள் தோறும்
எந்தமிழ் நல்லினத் தேற்றம் குலைததால்
வெந்தழி யும்நாள் விரைந்துனக் கெய்துக!

இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!

சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!

எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உளக்குலை நொய்ந்தே
இட்ட சாவங்கள் இணைந்து கூடி
முட்டுக நின்னுயிர்! மூளி நீ யாகுக!

தமிழினம் தகைக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!
தணலும்எம் நெஞ்சின் தவிப்பை
மணல், நீர், தீ, வளி, வானம் ஆற் றுகவே!

(தென்மொழி, மார்ச்- ஏப்ரல் 1988.)

மேற்கண்ட பாடலில் உள்ள 'வெந்து அழியும் நின் உடல்' -என்பது இராசீவ்காந்தி குண்டு வெளிப்படுத்திய தணலால் வெந்து மடிவார் என்பதையும்,

'நின்னைச் கடும்புலி வரி எனச் சாவு கவ்வுக'- என்னும் வரிகள் அவரைப் புலிப்படையைச் சார்ந்த ஒரு போராளி சாகச் செய்ததையும்,

'தணலுஎம் நெஞ்சின் வியப்பை மணல், நீர், தீ, வளி வானம் ஆற்றுகவே!'- எனும் இறுதி வரிகள் என் நெஞ்சத் தவிப்பை உணர்ந்து பஞ்சபூதங்கள் சாவுக்கட்டளையை நிறைவேற்றும்படி வேண்டுதலையும் உணர்த்துகிறது.

தற்போது நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் போரில் ஒன்னரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது பாவலரேறு நம்மோடு இல்லை. உயிரோடிருந்திருந்தால் இந்திராவின் மருமகளுக்கும் அறம் பாடியிருப்பார். அந்தப்பாடல் ஒருவேளை இப்படியும் தொடங்கலாம்.

இட்டசாவம் மீண்டும் முட்டுக!
முண்டையின் மருமகளே!...  முண்டையின் மருமகளே!...

tamilthesiyan.wordpress.com
கதிர் நிலவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக