திங்கள், 23 ஜூலை, 2018

கல் அதிகம் கல்லக நாடு கள்ளர் பகுதி இல்லை கல்லர் திரிப்பு

aathi tamil aathi1956@gmail.com

மார். 13
பெறுநர்: எனக்கு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
புரமலை # கல்நாடு_கல்லகநாடு ...
# கள்ளர் .. விளக்கம்...
9ஆம் நூற்றாண்டு சீவகசிந்தாமனி உழவரை மள்ளர் எனப்பாடுவதால் சங்கபாடலில்
மள்ளர் மள்ள எனும்
# சோழன் தொண்டைமான் இளந்திரையன் பள்ளர் அல்ல, அதாவது இளந்திரையன்
உழவன்(காராளன்_களமர்) என்பது நேரடி பொருள் அல்ல...
அதே போலதான்,
மொழியில் ஒவ்வொரு # உயிர்மெய் மாற்றத்திற்கும் அடிப்படை பொருளே மாறிவிடும்...
# கல்நாடு ,# கல்லகநாடு எனில் கற்கள் நிறைந்த நிலம்,மலை பகுதி என்பதே
நேரடி பொருள்...
மாறாக கள்ளரையோ,கள்ளர் வாழ்ந்த பகுதி என்பதாலோ அப்பெயர் பெற்றது என்பது
கிடையாது... அது தவறு...
கள்ளர்களை கல்லர் என எதும் கல்வெட்டுகள் குறிப்பின் அவை எழுத்துப்பிழை...
அங்கனம் பிழை உள்ளதை மேற்கோள் காட்டி புரமலை #கல்நாடு_கல்லகநாடு என்பதை
கள்ளரால் அப்பெயர் பெற்றது என்பது தவறான மேற்கோள்...

aathi1956 aathi1956@gmail.com

மார். 12
பெறுநர்: எனக்கு


சியாம் சுந்தர் சம்பட்டியார்
புரமலை கல்லகநாடு கள்ளர்கள்
--------------------------------------------------------------
கல்லகநாடு என கல்வெட்டுகளில் குறிக்கபடும் பகுதியானது மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை வட்டங்களின் நிலப்பரப்பினை உள்ளடக்கியதாக இதன் எல்லைகளை கொண்டுள்ளது.இன்றைய பிறமலை கள்ள நாட்டின் பெரும்பான்மை பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதி தென்கல்லகநாடு கல்லநாடு, கல்லகநாடு என கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.
கல்லநாடு கள்ளர் நாட்டை குறிக்குமா?
---------------------------------------------------------------
* கிபி 1488 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ( SII vol 25, no 44)
" மகாபலி வாணாதிராஜா நாயக்கத்தனமாகப் புரமலைக் கல்லகநாட்டில் மேற்படி தொண்டைமண்டலத்து திம்மச்சி நாயக்கர் " என குறிக்கிறது. திம்மச்சி நாயக்கன் என்பவன் அளித்த நிலக்கொடை பற்றி கூறுகிறது.அச்சமயத்தில் இப்பகுதி விஜய நகர அரசர் மேலாண்மையை ஏற்ற வாணாதிராயரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. புரமலை கல்லகநாடு என குறிக்கப்படும் இப்பகுதி இன்றைய பிறமலை கள்ளர் நாட்டு பகுதியாகும். இப்பகுதியில் கள்ளர்களே தன்னரசு நாடுகளை உருவாக்கி வாழ்ந்தனர். இப்பகுதியில் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்விடத்தை குறிக்கவே கல்லகநாடு என குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலவியல் அமைப்பில் இன்றும் 80% க்கும் மேல் வாழ்பவர்கள் கள்ளர்கள் மட்டுமே.
* புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டு 674, இதே காலத்தை சேர்ந்ததாகும். இந்த கல்வெட்டு வாணாதிராய மன்னரை பற்றிய புகழ் மொழிகளை கொண்டுள்ளது. " வாணர் குலத்தவன் , மதுராபுரி காவலன் போன்ற புகழ் மொழிகள் வாணாதிராயர் மதுரையை ஆட்சி செய்ததை குறிப்பிடுகின்றது. இந்த கல்வெட்டில்" வார்கழற் கல்லமலை என வருகிறது. அதாவது வீரமிக்க கழல் அணிந்த பாதம் கொண்ட கல்லர்கள் வாழும் மலை எனவும், கழற் கல்ல அசுரர், அதாவது வீரக்கழல் அணிந்த கல்ல அசுரர்கள் எனவும் குறிப்பிடுகிறது. இதே கால கல்வெட்டு புரமலை கல்லகநாடு என குறிப்பிடுவது மேற்குறிப்பிடப்பட்ட கல்ல மலை மற்றும் கல்ல அசுரர் எனும் கள்ளர்களைத்தான். பாண்டியர் மேலாண்மையை தூக்கி எறிந்த வாணர்கள் பாண்டியர் படைபற்றுகளான புறமலை கள்ள நாடுகளின் மேல் போரிட்டு அடக்கி தன் ஆதிக்கத்தை நிறுவியதை தெரிவிக்கும் கல்வெட்டாக இது இருக்கலாம். வார் கழற் கல்லமலை , கழற் கல்ல அசுரர் போன்றவற்றில் வரும் கல்லர் என்பது மனிதர்களையே குறிக்கிறது. " கழற் திருந்தடிக் கள்வர் கோமான் " என மாமன்னர் புல்லியை அகநானூறு பாடல் 61 குறிப்பிடுகிறது.வாணர் தன்னை மதுராபுரி காவலன் என குறித்திருப்பது மூலம், அவர்கள் மதுரை ஆட்சி செய்ததும், புறமலை கல்லகநாடு என வழங்கப்பட்ட கல்வெட்டுகள் பிறமலை கள்ளர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கள்ள நாட்டையே குறிப்பவையாகும்.
* வார் கழல் அணிந்த கல்லர் மலை என குறிப்பிடுவதால், கல்லகநாடு என்பது கல் பாறைகளை கொண்ட பகுதி என சிலர் வரலாற்றாசிரியர்
களின் யூகம் பொய்யாகிறது.
* கள்ளர்களை கல்லர் எனவும் மறவரை மரவர் எனவும், பறையரை பரயர் எனவும் பல்வேறு கல்வெட்டுகளில் குறித்துள்ளதை காணலாம்.
* கள்ளரை கல்லர் என குறிக்கும் கல்வெட்டுகளில் சில:
" மேற்படி கானவன் சேந்தன் கல்லன் " ( புதுக்கோட்டை கல்வெட்டு 50)
" கொனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கல்லன் ஆதித்தபடாரி " ( SII vol 7 :975)
" பாண்டி நாட்டு முத்தூர் கூற்றத்து கல்லஅம்பலவன் " (IPS 60)
" முருக்குடையான் காணி இந்த கல்லன் " ( IPS 281)
தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட " தென்கல்லகநாடு " எனும் புத்தகத்தில் முனைவர் ஜெயக்குமார், கல்லகநாடு என்பது அங்கு வாழும் கள்ளர்களோடு நேரடி தொடர்பை கொண்டது என விளக்கியுள்ளார்.
பிறமலை நாடு கள்ளர் படைபற்றுகள்
---------------------------------------------------------------
பிறமலை பகுதி கள்ளர் நாடுகள், தன்னரசு நாடுகளாக உருவாவதற்கு முன் சோழ /பாண்டியர்களின் முக்கிய படைபற்றாக இருந்துள்ளது.முடி மன்னர் ஆட்சி முடிவுற்றபின் தன்னரசு நாடுகளாக உருவான கள்ளர் பற்றுகள் திருமலை நாயக்கர் காலம் முதல் வெள்ளையர் காலம் வரை பல போர்களில் ஈடுபட்டு வீரதீரம் காட்டியுள்ளனர். பல வெளிநாட்டு ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுக்களமாக இன்று வரையும் விளங்குவது பிறமலை கள்ள நாட்டு பகுதிகளாகும்.கள்ளர் படைபற்றுகள் பற்றிய ஆனையூர் ஐராவதேசுவரர் கோயில் கல்வெட்டுகளை காண்போம்.
ராசராசசோழன் கால தென்கல்லநாட்டு படைத்தலைவன்:-
கிபி 996 ஆம் ஆண்டு ராசராசன் கால ஆனையூர் நாட்டு ஐராவதேசுவரர் கோயில் கல்வெட்டில் (500/1962-63)
" இராசராசவளநாட்டு தென்கல்லநாட்டு திருக்குருமுள்ளூர் படைத்தலைவன் வேளான் சேந்தன் மற்றும் படைத்தலைவன் அரையன் பல்லவன் " என கள்ளர் படைத்தலைவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இராசராச கால கல்ல நாட்டு படைத்தளபதிகள்:-
கிபி 1150 ஆம் ஆண்டு ஆனையூர் கோயில் கல்வெட்டு (503/1962-63)
"இராசராச மண்டலத்து தென்கல்லக நாட்டு....உலகன் மண்டகத்து எரிய படைத்தலைவன் காடன் ஊரனுக்கு "
தென்கல்ல நாட்டை சேர்ந்த எரிபடை தலைவன் குறிக்கப்படுகிறார்.
சுந்தர சோழ பாண்டிய தேவர் கால பிறமலை கள்ளர் படைத்தலைகள்:-
" ராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டு மிலாட்டுத்(506/1962-63) தென்கல்லக நாட்டு படைத்தலவனான மாறனாசகன் படைத்தலைவன் சேந்தன் சோலை இருநாளிக்கு கொடுத்த பசு எட்டு படைத்தலைவன் அட்டக் கடவால் னாநாழி படைத்தலைவன் சுரனாச்சன் "
'மதுராந்தக வளநாட்டு தென்கல்லக நாட்டு படைத்தலைவன் சோமன் எழுநூற்றுவனும் "(505/1962-63)
கல்லநாட்டு படைத்தலைவர்கள் மாறனாசகன், சேந்தன் சோலை, சுரனாச்சன் முதலியவர்கள் அளித்த கொடை பற்றி குறித்துள்ள கல்வெட்டு.
" மதுரை மண்டலத்தில் உதய வளநாட்டு பிறமலை பற்றில் திடியன் சீமைக்கு உட்பட்ட தங்களாச்சேரி" ( கிபி 1570) ( விஜயவேணுகோபால் மற்றும் வெங்கடராமன் 1996 பக் 68-70)
கல்லநாட்டில் படைத்தலைவர்களை குறித்த கல்வெட்டுகளை கண்டோம், பிற்காலத்தில் பிறமலை கள்ளர் பற்றாகவே குறிக்கப்பட்டுள்ளது.
கிபி 10 ஆம் நூற்றாண்டு முதல் கள்ளர் நாடுகளாக சோழர் பாண்டியர் மன்னர்களின் படைபற்றுகளாக விளங்கிய பிறமலை கள்ளர் நாடுகள் மூவேந்தர் ஆட்சியின் முடிவுக்கு பின் தன்னரசு கள்ள நாடுகளாக அந்நியர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி உள்ளனர்.
கல்வெட்டு ஆதாரங்கள் : தென்கல்லக நாடு ( முனைவர் ஜெயக்குமார்)/
புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்

முக்குலம் சாதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக