வியாழன், 26 ஜூலை, 2018

நாட்டுநாய் பாதுகாப்போம்


aathi1956 aathi1956@gmail.com

மார். 16
பெறுநர்: எனக்கு
Padmanaban
நாட்டு நாய்களை பாதுகாப்போம்
****************-*--*--**************
புகைப்படத்தில் நம் நாட்டு நாயான கன்னியுடன் என் மகள் விதுசா
#########################
‘‘நம்மூர் இட்லியை பீட்ஸாவும் காரசட்னியை சில்லி சாஸும் காலி செய்தது. அத்தோடு நிற்கவில்லை. ஃபேஷனுக்காக நம் மக்கள் வெளிநாட்டு நாய் வெரைட்டிகளை வளர்க்க ஆரம்பித்த பிறகு, நம் சொந்த மண்ணில் உருவான வலிமையான நாய் இனங்களும் மார்க்கெட் இழந்துவிட்டன. அப்படிப்பட்ட இனங்கள் அழிந்துவிடாமல் தடுக்கத்தான் தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத் துறையின் இந்தத் தனிப்பிரிவு இயங்குகிறது’’ என்கிறார் டாக்டர் இளஞ்சேரன். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழக அரசின் விலங்கியல் பாலிகிளினிக்கின் முதன்மை மருத்துவர் இவர். தமிழக அரசின் நாய் இனப்பெருக்கத்துக்கான ஒரே பிரிவு இங்குதான் இயங்குகிறது.
போர்வீரனுக்கு இணையான வலிமை கொண்டது ராஜபாளையம் நாய். தன் எஜமானனைக் காப்பாற்ற எதையும் செய்யும். ஒரு வேட்டையின்போது நான்கு ராஜபாளையம் நாய்கள் இணைந்து ஒரு புலியையே வீழ்த்தி தங்கள் எஜமானனைக் காப்பாற்றிய வரலாறு உண்டு. இப்போது இந்திய ராணுவம் காஷ்மீர் எல்லையில் காவல் புரிய இந்த நாய்களையும் பயன்படுத்துகிறது.
சிப்பிப்பாறை படு புத்திசாலி. இதன் வேகத்துக்கு இணையான நாய் கிடையாது. காற்றில் பறப்பது போல அழகாக ஓடிவரும். ஞாபகசக்தியும் அதிகம். தன் எஜமானனையும் ஞாபகம் வைத்திருக்கும்; எதிரிகளையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். கோம்பை காவலுக்கு உகந்தது. அந்தக் காலத்தில் பண்ணையில் இருக்கும் ஆடு, மாடுகளை காட்டு விலங்குகள் வேட்டையாடாமல் தடுக்க இதைத்தான் நம்பினார்கள் தமிழர்கள். தனியான பண்ணை வீடுகளின் பாதுகாப்புக்கு ஒரு கோம்பை போதும்!
‘‘நேட்டிவ் டாக்ஸ் எனப்படும் நம் உள்ளூர் நாய்களில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி போன்ற இனங்கள் மிகப் பிரபலம். ஆனால், 70, 80களிலேயே இந்த உள்ளூர் இன நாய்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. இவை காலம் காலமாக வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தவை. வேட்டைக்குத் தடை வந்ததும், இவற்றை வளர்ப்பதும் குறைந்துபோனது. இந்தக் காலங்களில்தான் வெளிநாட்டு வகை நாய்கள் இங்கு செல்வாக்கு பெற்றன. இதனால் உள்ளூர் நாய் வகைகளில் சில காணாமலே போயின. இதில் முதலில் காணாமல் போனவை மலையேறியும் அலங்கும். இந்த காலகட்டத்தில்தான்... அதாவது 1980-1981களில் உள்ளூர் நாய்களை இனப்பெருக்கம் செய்வதற்கான இந்தப் பிரிவு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட
து’’ என்கிறார் இளஞ்சேரன்.
லாப நோக்கம் இன்றி இயங்கும் இந்தப் பிரிவு, உள்ளூர் நாய்களோடு, சில வெளிநாட்டு இனங்களையும் இனப்பெருக்கம் செய்கிறதாம். ஆனால், இவர்கள் உருவாக்குவது ஒன்றை ஒன்று கலக்காத ப்யூர் பிரீட் நாய்களைத்தான். இவற்றை குறைந்த விலைக்கு விற்கவும் செய்கிறார்கள்.
‘‘லாப நோக்கம் இல்லாதிருந்தாலும், மக்களிடம் வரவேற்பு இல்லாத வகைகளை நாங்கள் அதிகம் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை. ஆரம்பத்தில் காணாமல் போய்விடுமோ என்று பயந்த கன்னி, கோம்பை போன்ற நாய்களை இனப்பெருக்கம் செய்து வந்தோம். ஆனால், அந்த அற்புதமான நாய் வகைகளைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் ராஜபாளையம் அல்லது சிப்பிப்பாறையைத்தான். அதனால்தான் இன்றும் இந்த இரு இனங்கள் மட்டுமே அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. கூடவே சில வெளிநாட்டு நாய்களையும் விற்கிறோம்.
இனப்பெருக்கத்தில் ப்யூர் பிரீட், க்ராஸ் பிரீட் என இருவகை உண்டு. ஒரு இனத்தை அந்த இன நாய்களோடு மட்டுமே இனப்பெருக்கம் செய்வதுதான் தூய இனப்பெருக்கம்... அதாவது, ப்யூர் பிரீட். வேறு வேறு இனங்களைக் கலந்து இனப்பெருக்கம் செய்வது க்ராஸ் பிரீட் என்பார்கள். இப்படி உருவாகிறவை கலப்பின நாய்கள்.
உள்ளூர் நாய் இனம் அழியாமல் காப்பதற்காக செய்யப்படும் இனப்பெருக்கம் என்பதால், நாங்கள் கலப்பின நாய்களை உருவாக்குவதில்லை. இன்று நம் உள்ளூர் நாய்கள் பல இல்லாமல் போனதற்கு க்ராஸ் இனப்பெருக்கமும் ஒரு காரணம். உதாரணமாக, இங்குள்ள ராஜபாளையம் போன்ற நாய்களை வெளிநாடுகளுக்குக் கொண்டுபோய், மற்ற இனங்களுடன் இனப்பெருக்கத்துக்கு விட்டுவிடுகிறார்கள். இதனால் நம் உள்ளூர் நாயே புதிய வெளிநாட்டு இனமாக இங்கு வந்து நுழைகிறது’’ என்கிற இளஞ்சேரன், பொதுவாகவே நம் ஊர் நாய்கள்தான் வளர்க்கச் சிறந்தவை என்கிறார்.
‘‘உள்நாட்டு நாய்கள் நோய்களைத் தாங்கும் சக்தி படைத்தவை. காரணம், நம்ம ஊர் க்ளைமேட் அவற்றுக்குப் பழக்கமானது. இதனால் இந்த நாய்கள் உடல் சக்தியிலும், ஆக்ரோஷத்திலும் கூட ஒரு படி மேலே இருக்கும். ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்றவை வேட்டை நாய்கள். அவை காவலுக்கு சிறந்தவை. சில பயந்தாங்கொள்ளி வெளிநாட்டு நாய்கள் போல இவை இருப்பதில்லை. பிஸ்கெட் போட்டால் வாலை ஆட்டும் பழக்கமே இவற்றிடம் இல்லை. இவற்றுக்குத் தெரிந்தது எல்லாம் அந்நியன் ஒருவன் வீட்டுக்குள் புகுந்தால், அவன் குரல்வளையைக் கடித்துக் குதறுவதுதான்’’ என்கிற இளஞ்சேரன், இவர்களிடம் ஒரு நாய்க்குட்டியை வாங்க வேண்டுமென்றால் புக்கிங் செய்து குறைந்த பட்சம் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும் என்ற அதிர்ச்சித் தகவலையும் தருகிறார்.
‘‘இது ஒன்றும் மெஷின் வைத்து முட்டையில் குஞ்சு பொரிப்பது போலில்லை. பொதுவாக பெண் நாய்கள் எல்லாமே ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் இனப்பெருக்கத்து
க்குத் தயார் நிலையில் இருக்கும். மற்ற நேரங்களில் அவை ஆண் நாய்களை அண்ட விடாது. இந்த இனப்பெருக்க நேரத்தை எங்கள் டாக்டர் குழுவினர், உதவியாளர்கள் கண்டுகொண்டு, அந்தப் பெண் நாய்களை ஆண் நாய்களுடன் சேர்ப்பார்கள். அப்போது அவற்றுக்கு தனி கவனிப்பும் மற்ற ஆண் நாய்களிடமிருந்து பாதுகாப்பும் தரப்படும்.
இப்படிப் பார்த்துப் பார்த்து குட்டிகள் உருவாக்கப்படுவதால், நேரம் எடுக்கும். இப்போது நாய்களுக்கான டிமாண்ட் அதிகமாகியிருக்கிறது. அதனால் ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற வெரைட்டிகளில் பல ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. நாய்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அப்படி தனியாரிடம் ஏமாந்துவிடாமல் தப்பிக்க எங்களிடம் புக்கிங் செய்து காத்திருக்கவும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ப்யூர் வெரைட்டி என்பதால், காத்திருப்பவர்களும் சந்தோஷமாகத்தான் வாங்கிச் செல்கிறார்கள். குட்டியை ஓரளவு தேறியதும்தான் வளர்க்க முடியும். எனவே, விற்பனை செய்யும்போது குறைந்தது ஒரு மாத குட்டிகளைத்தான் கொடுக்கிறோம்’’ என்கிறார் இளஞ்சேரன்.
நம் பாரம்பரியத்தில் காப்பாற்றப்பட வேண்டியவை இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ!

கோம்பை சிப்பிப்பாறை சிப்பிபாறை கன்னி கண்ணி நாய் விலங்கு அலங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக