செவ்வாய், 17 ஜூலை, 2018

சாகர்மாலா கன்னியாகுமரி துறைமுகம் சட்டம் மாற்றி எழுதி வருகிறது

aathi1956 aathi1956@gmail.com

மார். 3
பெறுநர்: எனக்கு
வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக்
# சாகர்மாலா கடலோர ஒழுங்குமுறை சட்டம்
Sagarmala Coastal Zone Management Plan (CRMP)
கன்னியாகுமரியில் பன்னாட்டு பெட்டகமாற்று துறைமுகம் கொண்டுவருவதற்கு ஏதுவாக கவனவமாக கடற்கரை சார்ந்த சட்டதிட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றது. ஏற்கெனவே "முக்கிய துறைமுகங்கள் பொறுப்பு நிறுவனச் சட்டம் - 1963" என்னும் சட்டத்தை மாற்றி "பிரதான துறைமுகங்கள் அதிகாரசபை மசோதா, 2016" என்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து "இனயம் துறைமுகம்" புத்தகத்தில் விரிவாக உள்ளது.
விழிஞ்சம் பன்னாட்டு துறைமுகத்திற்கு சாதகமாக கடலோர ஒழுங்குமுறை சட்டத்தில் (CRZ) திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, தமிழக கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான வரைவு தமிழக சூழியல்துறை வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது
. 45 நாட்களுக்குள் (மார்ச் 4, 2018) இந்த வரைவில் தவறுகள் மற்றும் அறிவுரைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவேண்டும். அதனடிப்படையில் இந்த வரைவு சட்டமாக மாற்றப்படும்.
நடைமுறையிலிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர வரைபடத்தையும், புதிய வரைபடத்தையும் ஒப்பிடும்போது, இந்த புதிய வரைவு கடற்கரையை திட்டமிட்டு அழிப்பதற்கு கொண்டுவரப்படுவதாகவே தோன்றுகின்றது. முக்கியமான விடுபடல்கள்:
1. CRZ படிநிலைகள் தெளிவாக இல்லை. கடற்கரையில் புதிய கட்டுமான திட்டங்களை CRZ படிநிலைகளே தீர்மானிக்கின்றது.
2. பாதுகாக்கப்பட்ட (protected zone) கடற்கரைகள் புதிய வரைவில் தெளிவில்லை.
3. ஆமைகள் குஞ்சுபொரிக்கும் இடங்கள் விடுபட்டுள்ளது.
4. நடைமுறையிலிருக்கும் வரைபடத்தில் தூத்தூர் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதிகள் கனிம மணற்பகுதியாக குறிப்பிடப்பட்ட
ுள்ளது. புதிய வரைவில் கனிமமணல் குறித்து எதுவுமில்லை.
கடற்கரை அமைப்புகளும், தனிமனிதர்களும் இந்த புதிய வரைவை மிகக் கவனமாக அலசி ஆராயவேண்டியுள்ளது. அல்லது, காடுகளும் மலைகளும் ஆதிவாசி மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு பெருமுதலாளிகளில் கைகளுக்குச் சென்றதுபோல், கடற்கரைகள் மீனவர்களின் கைகளிலிருந்து திட்டமிட்டு பிடுங்கப்பட்டு பெருமுதலாளிகளின் கைகளுக்குச்செல்லும். அடுத்து வரும் 45 நாட்களும் மீனவர்களின் வாழ்வியலின் மிக முக்கியமான நாட்கள். இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு வரைபடங்களும் நடைமுறையிலிருப்பது.
#சாகர்மாலா
Tamil Research Institute
தமிழர் ஆய்வு கூடம்
https://www.facebook.com/TeamTamilRI
http://www.youtube.com/c/TamilRI
வியாழன், 08:24 PM க்கு

கார்ப்பரேட்
மண்ணழிப்பு

குமரி இனயம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக