வியாழன், 26 ஜூலை, 2018

ஸ்டெர்லைட் விரிவாக்கம் நடக்கவுள்ளது

aathi1956 aathi1956@gmail.com

மார். 15
பெறுநர்: எனக்கு

Marutha Perumal , 2 படங்கள் மற்றும் ஒரு வீடியோவைச் சேர்த்துள்ளார் — All Can Trust மற்றும் 8 பேர் உடன்.
``தூத்துக்குடி # ஸ்டெர்லைட் ஆலை 2-வது # விரிவாக்கம் ’’
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் நச்சுப்புகையை வெளியிடும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்.
"தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் நாசாக்கார ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.
பகலைவிட இரவில் அதிகளவில் புகை வெளிவிடப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.
மண் நிறம் மாறி மலடாகிறது. இந்த தண்ணீரைக் குடித்த ஆடு, மாடுகளும் பல நோய்களுக்கு உள்ளாகி இறந்துள்ளன.
தமிழகத்தில் வாழத்தகுதியற்ற நகரமாக தூத்துக்குடி மாறி உள்ளது என ஒரு சுற்றுச்சூழல் ஆய்வு கூறுகிறது.
இதனால் அதிகப் புற்றுநோயாளிகள் உருவாகி வரும் நகராகவும் தூத்துக்குடி மாறிவிட்டது.
இந்நிலையில், சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது இரண்டாவது ஆலையை நிறுவ உள்ளது.
இந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலை, புதிதாக நிறுவ உள்ள இந்த ஆலை, ஏற்கெனவே உள்ள ஆலையை விட நான்கு மடங்கு பெரியது.
இதனால் பாதிப்புகளும் பெருகும். மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு சிப்காட் விரிவாக்கப் பகுதியில் 2-வது ஆலையை நிறுவ அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆலையையும் மூடிட வேண்டும்."
#  தூத்துக்குடி _மக்கள்_அனைவரும்
# ஒன்று_படுவோம் !
# வென்று_காட்டுவோம்

கார்ப்பரேட் மண்ணழிப்பு தொழிற்சாலை ஆலை மாசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக