செவ்வாய், 17 ஜூலை, 2018

அங்கயற்கண்ணி 8 மணிநேரம் நீந்தி 6300 டன் போர் கப்பல் மூழ்கடிப்பு

aathi1956 aathi1956@gmail.com

மார். 4
பெறுநர்: எனக்கு


சே.திருநா பாரதி த.வா.க
# புலிகள்
# விடுதலைப்_போராட
்ட_வரலாறுகளின்_மணிமகுடம் !
6300 டன் எடையைக் கொள்ளக்கூடியதும், 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும், நவீன ராடர் வசதிகளை கொண்டதும், கடலில் மிதக்கும், நடமாடும் இலங்கை கடற்படை தலைமையகக் கப்பலை ஒரு தனிமனிதனால் வீழ்த்த முடியுமென்று இலங்கை கடற்படை கனவிலும் நினைக்கவில்லை... அவர்கள் நினைக்கத் தவறியதிலும் தவறில்லை...
ஆனால் விடுதலை வேட்கைக்கொண்டு இலக்கை விட யாதொன்றையுமே பெரிதாக எண்ணாத ஒரு மனித உயிரால் எதையும் வீழ்த்த முடியுமென்பது அவர்களுக்கு தெரியவில்லை... சம்பளத்திற்கு ஆயுதமேந்திய அரச கூலிப்படையைச் சேர்ந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை...
உடலில் வெடிப்பொருட்களை சுமந்துக்கொண்டு, 35 கி.மீ கடலில் ராடர்கள் கண்ணில் படாமல் 8 மணி நேரம் 27 நிமிடங்கள் நீந்திச் சென்று ஒரு மனித உயிர் அந்தக் கப்பலை தன் உயிரை திரியாக்கி வெடித்துச் சிதறடித்து மூழ்கச் செய்தது... ஆம் யாரும் யோசிக்காத அந்த துணிகர தியாக வீரச்செயல் தமிழ்மகள் கரும்புலி # அங்கயற்கண்ணி அவர்களால் நிகழ்த்தப்பட்டது... இலங்கை அரசு வெளிப்படையாகவும், உலக ஏகாதிபத்திய அரசுகள் உள்ளுக்குள்ளும் அதிர்ந்தன...
இஸ்ரேலிய உளவுத்துறை மொசாட்டின் பெருமைகளை படித்தும் சிலாகித்தும் பேசியும் வியந்து வரும் நம் பிள்ளைகள் ஒருமுறை புலிகளின் வீரத்தீர தியாகங்களை அறிந்தால் மொசாட்டை அலட்சியமாக பார்ப்பார்கள்...
"நான் நல்லூர் திருவிழா நடக்க நேரந்தான் சாகவேணும்... அப்பத்தான் திருவிழாவில் கச்சான் வித்து வந்த காசு அம்மாட்ட இருக்கும்... என்ர நினைவுநாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும்"
அங்கயற்கண்ணியின் இந்த கருத்தொன்றே போதும் புலிகள் எப்படிப்பட்டவர்களென்று உணரவும், நாம் உணர்வுக்கொள்ளவும்...
புலிகளின் வரலாற்றை அறியாது தமிழினம் விடுதலை வேட்கைக் கொள்ளாது!

புலிகள் கரும்புலி மாவீரர் பெண் பெண்கள் பெண்ணுரிமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக