திங்கள், 30 ஜூலை, 2018

கர்நாடகா தேர்தல் கமிசன் தேதி அறிவிக்குமுன் பாஜக அறிவிப்பு மால்வியா

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே கர்நாடக தேர்தல் தேதியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக பிரமுகர்
2018-03-27@ 15:29:46
டெல்லி: கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரி அறிவிப்பதற்கு முன்பாகவே பாஜக பிரமுகர் அறிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை இன்று காலை 11 மணிக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ஓம்பிரகாஷ் ராவத் அறிவிப்பார் என தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, காலை 11 மணி முதல் ஓம்பிரகாஷ் ராவத் தேர்தல் விவரங்கள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை அறிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே பா.ஜ.க. இணையதள பிரிவின் தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான தேதி மே 12-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 18ஆம் தேதியும் நடைபெறும் என பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அவர் இந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்றாலும், ஆளும் அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் அது இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக இந்த செயல்பாடு அரங்கேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது கருதப்படுகிறது. வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவால் தென் இந்தியாவில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதனால் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் சூழலில், இந்தத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: கர்நாடக தேர்தல்
பாஜக பிரமுகர் ஓம்பிரகாஷ் ராவத்
அமித் மால்வியா Amit Malviya

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இயந்திரம் மோசடி வாக்குச்சீட்டு தேர்தல்

aathi1956 aathi1956@gmail.com

மார். 27
பெறுநர்: எனக்கு
-------

முன்கூட்டியே கசிந்ததா கர்நாடகா தேர்தல் தேதி?
கர்நாடகா சட்டபேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னரே தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா அறிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 12-ல் நடைபெறும் வாக்குகள் மே 15-ல் எண்ணப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாகவே, பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 12-ல் தேர்தல், மே 18-ல் வாக்கு எண்ணிக்கை எனப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து ட்விட்டராட்டிகள் பலரும் அமித் மால்வியாவிடம் தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்ப சில ஊடகங்கள் இத்தகவலை பிளாஷ் செய்ததாகவும் அதன்படியே தான் ட்வீட் செய்ததாகவும் பதிலளித்தார்.
சர்ச்சை பெரிதாகவே அவரது ட்வீட்டையும் டெலீட் செய்தார்.
இதற்கிடையே, செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒருசில செய்தியாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அமித் மால்வியா ட்வீட் குறித்தும் சில செய்தி சேனல்கள் ஒளிபரப்பிய பிளாஷ் குறித்தும் கேள்வி எழுப்பினர். நீங்கள் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாகவே எப்படி இத்தகவல் கசிந்தது எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், "என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். தேர்தல் தொடர்பான தகவல் கசிவு மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டபூர்வமாகவும் நிர்வாக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக