செவ்வாய், 17 ஜூலை, 2018

கச்சத்தீவு சிங்களமயம் ஆனது சிங்களர் சிங்களவர் மீனவர்

aathi1956 aathi1956@gmail.com

மார். 6
பெறுநர்: எனக்கு

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
இலங்கை
கச்சத்தீவு திருவிழாவில் தமிழர்கள் கம்மி, சிங்களர்களே ஆதிக்கம்!
Published:February 23 2018, 18:25 [IST] கச்சத்தீவு : கச்சத்தீவில் நடைபெற்று வரும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் சிங்களர்களே அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இலங்கையைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள் என்று சொல்லப்படுகிறது.
கச்சத்தீவு இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு இடையில் உள்ளது. 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு 1976 ஒப்பந்தப்படி இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை, புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் மட்டுமே உள்ளது.
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்களை உலர்த்திக்கொள்ளவும்,அந்தோணியார் கோவிலில் வழிபாட்டிற்கு செல்லவும் உரிமை இருந்தது. ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சத்தீவு அருகே சென்றாலே எல்லை தாண்டி வருவதாக மீனவர்களை தாக்குவதும், அவர்களின் படகுகளை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்புடன் தமிழக மக்களை அரசு அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கு அழைத்து சென்று வருகிறது.
தமிழக பக்தர்கள் எத்தனை பேர்?
இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கச்சத்தீவு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 1532 ஆண் பக்தர்களும், 336 பெண் பக்தர்களும், ஆண் குழந்தைகள் 29 மற்றும் பெண் குழந்தைகள் 23 பேர் என 1920 பக்தர்கள் கச்சத்தீவு சென்றுள்ளனர். கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரத்தால் ஆன 40 அடி உயரமுள்ள கொடி மரத்தை தமிழக பக்தர்களால் கொண்டு செல்லப்பட்டது.
கொடியேற்றத்துடன் தொடக்கம்
இதனை தொடர்ந்து 40 உயரமுடைய கொடிமரத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞாணபிரகாஷம் கொடி ஏற்றினார். இதில் தலைமன்னார், நெடுந்தீவு, யாழ்ப்பாணம், காலி மாவட்ட பக்தர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து இன்றிரவு சிலுவை பாதை, தேர்பவனி, மற்றும் சிறப்பு திருபலிகள் நடைபெற உள்ளன. மேலும் நாளை காலை தேர்பவணி நடைபெற்று அதன் பின் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.
சிங்களர்களே ஆதிக்கம்
2103 பக்தர்கள் தங்களின் பெயர்களை பதிவேற்றம் செய்திருந்த நிலையில் இந்தியாவில் இருந்து 1920 பக்தர்கள் மட்டுமே கச்சத்தீவு சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் பக்தர்கள் என 6500பக்தர்கள் கச்சத்தீவிற்கு வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள் என்றே தெரிகிறது.
திருப்பலியிலும் சிங்கள மொழி
இலங்கை - இந்திய தமிழ் பக்தர்களால் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு இந்த வருடம் சிங்கள பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. இதே போன்று இதுவரை இல்லாத நடைமுறையாக இந்த ஆண்டு சிங்கள மொழியில் திருப்பலி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் புறக்கணிப்பை இலங்கை அரசு கச்சத்தீவு திருவிழாவிலும் புகுத்துவதைத் தான் இந்த ஆண்டு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவானது உணர்த்துகிறது.

Search ஹிந்தியா ஆதரவுடன் கச்சத்தீவில் சிங்கள ராணுவம் வேட்டொலி


மண்மீட்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக