செவ்வாய், 17 ஜூலை, 2018

திரிபுரா 10% இருந்த வங்காளி வந்தேறி இப்போது 90% பாஜக ஆட்சி

aathi1956 aathi1956@gmail.com

மார். 6
பெறுநர்: எனக்கு

Mathi Vanan
திரிபுரா- தமிழ்நாடு..
திரிபுரா என்பது மண்ணின் மைந்தர்களான திரிபுரிகள் மற்றும் வந்தேறி வங்காளிகள் என இரு மக்கள் உண்டு. வந்தேறிகள் திரிபுராவின் எல்லை நிலங்களில் (சிவப்பு) இருப்பர். திரிபுரிகள் பழங்குடிகள் உள்பகுதி நிலங்களில் (வெள்ளை) இருப்பர்.
நூறு ஆண்டுகளுக்கு முன் திரிபுரி பழங்குடிகள் 90 சதமும், வந்தேறிகள் 10 சதமும் மக்கள் தொகையில் இருந்தனர்.
திரிபுரி அரசர்கள் செய்த பெருந்தவறு வந்தேறி வங்காளிகளை அருகில் வைத்துக் கொண்டது.
பிரிட்டிசுகாரன் வெளியேறிய இந்தியாவுடன் 1949ல் இணைந்தது திரிபுரி பழங்குடிகள் செய்த இன்னொரு பெருந்தவறு.
திரிபுராவின் அருகில் இருந்த பங்களாதேசிலிருந்து திரிபுராவுக்குள், வங்காளி இந்துக்கள் இந்திய அரசின் உதவியோடு, ஏற்கனவே இருந்த வந்தேறி வங்காளிகள் உதவியோடு புற்றீசலாக ஊடுருவியதில்,
நூறாண்டுகளுக்கு முன் 90 சதம் திரிபுரி பழங்குடி, 10 சதம் வந்தேறி வங்காளி என்ற விகிதம், இன்று 30 சதம் திரிபுரி பழங்குடி, 70 சதம் வந்தேறி வங்காளிகள் என தலைகீழாய் மாறி சொந்த மண்ணிலேயே திரிபுரி பழங்குடி சிறுபான்மை ஆனது.
கல்வி, வேலைவாய்ப்பு வங்காளிகள் மயமானது.
வந்தேறி வங்காளிகள் 40 தொகுதிகளும், திரிபுரி பழங்குடி கையில் 20 தொகுதிகளுமாக மாறியது. என்றும் திரிபுராவை ஆளும் சக்தி வந்தேறி வங்காளிகளே ஆனது.
திரிபுராவின் ஆட்சிமொழி வங்காளி ஆனது. திரிபுரிகள் மொழி அழிந்து போனது.
தமிழ்நாடு உணர வேண்டியது..
இந்தியம் வங்காளிகளை கொண்டு திரிபுரி பழங்குடிகளை சிறுபான்மை ஆக்கியது போல்,
உ.பி, ம.பி, ராஜஸ்தானி, பீகாரிகளை தமிழ்நாட்டில் குடியேற்றி தமிழர்களையும் சிறுபான்மை ஆக்கும். தேர்தலிலும் தமிழர்களை செல்லாக்காசாக்கும்.
வட இந்தியனை தமிழ்நாட்டில் முதலமைச்சராக்கும்..
இந்தியை ஆட்சி மொழியாக்கும். தமிழை வெளியே தள்ளும்.
இது விரைவில் நடக்கும். அதற்கு திரிபுராவே சாட்சி..

குடியேற்றம் வங்காளியர் பெங்காலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக