வியாழன், 26 ஜூலை, 2018

காவல்துறை யில் 4 பேர் தற்கொலை முயற்சி அடுத்தடுத்து

aathi1956 aathi1956@gmail.com

மார். 22
பெறுநர்: எனக்கு
புதன், 21 மா 2018
முந்தையது அடுத்தது மின்னம்பலம்
காவலர்கள் தீக்குளிக்க முயற்சி!
சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தேனியை சேர்ந்த காவலர்கள் 2 பேர் இன்று (மார்ச் 21) தீக்குளிக்க முயன்றனர்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 2 ஆயுதப்படை காவலர்களான கணேஷ், ரகு ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர். அவர்களை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். தேனியில் காவல் உயரதிகாரிகள் சாதி ரீதியாகப் பணி ஒதுக்கீடு செய்வதாகவும், ஒருதவறும் செய்யாத நிலையில் ராமநாதபுரத்துக்கு இடம் மாற்றம் செய்துள்ளதாகவும் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேபோல், மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் சபீராபானு இன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். பணிக்கு வந்த தலைமைக் காவலர் சபீராபானு திடீரென மயக்கமடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, கொசு மருந்தை குடித்த நிலையிலேயே அவர் பணிக்கு வந்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. தற்கொலை முயற்சி குறித்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்ச் 4ஆம் தேதி, மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் அருண்ராஜ்(26) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காவலர்கள் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவது காவல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக