சனி, 3 ஜூன், 2017

அகத்தியர் கூறும் தமிழ்ச் சிறப்பு தமிழ்மொழி தமிழ்ப்பற்று

aathi tamil aathi1956@gmail.com

24/1/15
பெறுநர்: எனக்கு
தமிழும் அதன் பண்பாடும் புராணக் கதைகள்
மூலமாகவே எவ்வாறு வடபுலத்தாரால் அழிக்கப்பட்டன?
“நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே”
323, இரண்டாம் தந்திரம் - அகத்தியம் – திருமந்திரம்
விண்ணவரெலாம் ஒன்று திரண்டு சிவனிடம் சென்று,
“தீயின் நடுவுள் விளங்கும் ஆண்டவனே!
இவ்வுலகு தென்பாலுயர்ந்து வடபால்
தாழ்ந்து நடுவிழந்து கிடக்கிறது. காத்தருள
வேண்டும்”
என்று வேண்டினாராம்! இதனை ஏற்ற சிவன்,
அகத்தியனை நோக்கி,
“தென்னாடு எந்நாளும் எய்தி நிற்கிறது, அத்தென்பால்
நீ சென்று, அவற்றை ஆய்ந்து கைக்கொண்டு முன்னுவாயாக
(முன்னுதல் – அடைதல்)” என்றருளினாராம்!
அதற்கு அகத்தியன்,
“எம்பெருமானே! ‘தென்னாடே சிவவுலகம்’ ஆதலின்
ஆங்கு வாழ்வார் உண்மையான் உனையுனர்த்துவதும்,
என்றும் உனக்கு மிக உவப்பானதும், இருவழக்கினும்
நின்று நிலவுவதும், இனிமையும், சுருக்கமும்,
தெளிவும், சிறப்பும், இயற்கையும், நயனும்
ஒருங்கமைந்ததும் ஆகிய கன்னிச் செந்தமிழ் மொழியின்
மன்னிய புலமையர் நிறைந்த நாடு என்பர். அவர்களுடன்
அளவளாவி உறவுபூண்டு உறைவதற்கு அருந்தவாத் திறம்
அமைந்த அந்தத் ‘தண்டமிழ்’ மொழியின்
அமைதியினை அடியேற்கு அருளுதல் வேண்டும்”
என்றானாம்! சிவனும் அதற்கமைய அகத்தியன் அந்த
நற்றமிழ் கற்க அருளினாராம்.
இதனையே பரஞ்சோதியார் தனது திருவிளையாடற்
புராணத்தில்,
“விடைகொடு போவான் ஒன்றை வேண்டினான் ஏகும் தேயும்
தொடைபேறு தமிழநா டென்று சொல்லுப அந்த நாட்டின்
இடைபையில் மனித்தரெல்லாம் இன்றமிழ் ஆய்ந்து கேள்வி
உடையவ ரென்ப கேட்டார்க் குத்திரம் உரைத்தல் வேண்டும்
சித்தமா சகல வந்தச் செந்தமிழ் இயல்நூல் தன்னை
அத்தனே அருளிக் செய்தி என்றனன் அனையான் தேற
வைத்தனை முதனூல் தன்னை மற்றது தெளிந்த பின்னும்
நித்தனே அடியேன் என்று நின்னடி காண்பான் என்றான்”
- திருவிளையாடல், கீரனுக்கு – 11, 12
இது பழங்கதைதான், ஆயினும் மிகப் பெரியதோர்
உண்மையினை இது நிலைநாட்டுகிறது. ஈசனின்
திருமணத்திற்காக அனைவரும்
வடக்கே ஒன்று கூடியதால் வடக்கு (நிலம்)
தாழ்ந்து தெற்கு (நிலம்) உயரும், பின்னர்
தனக்கு நிகரான ஒரு குறுமுனியை அங்கனுப்பினால்
ஒருபுற நிலம் தாழ்ந்து மறுபுற நிலம் உயரும்
என்பதல்ல இதன் உண்மைக் கருத்து. கல்வி, கலை, பண்பாடு,
இறை வழிபாடு போன்ற அனைத்திலும் உயர்நிலையில்
இருந்த தென்புலத்திற்கு ஈடாய் அல்லாமல்,
அக்காலகட்டத்தில் வடபுலமோ மிகவும் தாழ்ந்த
நிலையில் இருந்தது. பல கடவுளரை வணங்குதல்,
சாதிமத வேறுபாடு காணல், கொலைபுலை வேள்விகள்
செய்தல், செத்துப் பிழைக்கும்
தெய்வங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்,
வேற்றுமை போற்றுவது போன்ற இன்னபிற தீய
வழக்கங்களால் மிகவும் இழிநிலையில்
இருந்தது என்பதால், ‘தீய பண்பினரே வடபுலத்து நிலம்
பொறுக்கலாற்றாப் பரவினர்’ என்பதே உண்மையாகும்.
இப்படியான இழிநிலையைப் போக்க, தென்புலத்துச்
செந்தமிழிலுள்ள அனைத்து நற்கல்வியையும்,
தமிழகத்தின் உயரிய பண்பாட்டினையும் கற்றுத்
தேர்ந்து, அதனை வடபுலத்தாருக்குக் கொண்டளிக்கப்
பணிக்கப்பட்டவரே இந்தக் குருமுனியான அகத்தியர்.
தென்தமிழ்ப் பண்பாட்டினை வடபால் பரப்பத் தம்முடைக்
கேன்மையராம் திருமூலர், பரஞ்சோதியார் முதலிய
தமிழ்ச் சான்றோரை வேண்டினர். அவர்கள் வடபுலம்
சென்று தமிழ்ப் பண்பாட்டையும், இறைவழிபாட்டினையும்
அங்கு பரப்பினர். அதனாலேயே தமிழாகமங்கள்
வடவெழுத்தால் பொறிக்கப்பட்டன என்பதும்
மறுக்கவியலா உண்மையே. ஆக, தமிழில்
ஏற்கனவே இருந்த ஆகமங்களே, பின்நாளில், இதற்கென
உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்துக்கள் கொண்டும்
அங்கே வேதமாய்ப் படைக்கப்பட்டது என்பதும் உண்மையே.
பின்நாளில், இவ்வாறான நம் தமிழ்ப் பண்பாட்டைக்
கண்டு மலைத்து, இதனை அழித்தாலன்றி,
அதாவது தென்புலத்தினைத் தாழ்த்தினாலன்றி வடபுலம்
மேன்மையுறாது என்றுணர்ந்து, நம்முடைய கலைகள் மற்ற
கல்வி போன்ற அனைத்தையும் தம்முடைய
மொழிக்கு மாற்றிக்கொண்டு, பின்னர் ஏடுகளில்
பொதிந்து வைக்கப்பட்டிருந்த அனைத்தையும்
நம்மிடையே பொய்யையும் புரட்டையும் கூறி நம்
கைகொண்டே அவற்றைத் தீயிட்டு அழிக்கும் செயலையும்
செய்தனர். இவ்வாறே நம் கலை, கல்விச் செல்வம் போன்ற
எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டு வேற்று நாடுகளுக்கும்
கொண்டு செல்லப்பட்டு, அவர்களெல்லாம் மேன்மையடைய,
நாம் மட்டும் இன்னும் இழிநிலையிலேயே, நல்ல
தமிழையும் சீரழித்துக் கிடக்கிறோம்.
அட மடத்தமிழா! உன்னிடம் என்னதான்
இல்லையடா செந்தமிழில்? ஒன்றும்
இல்லையென்று நம்மிடம் பிடுங்கி நமக்கே மாற்றி,
திருப்பியளிக்கப்பட்ட இந்த வழிபாட்டு முறைகள்,
ஆகமங்கள் போன்றவற்றை வைத்துக்கொண்டு இன்னும் ஏன்தான்
வடபுலத்தான் அழைத்ததனைப் போல் நீயும் உன்னை ‘நீச’
மொழியனாயும் ‘சூத்திர’னாயும் நினைத்துக்
கொள்கிறாய் தமிழா?
“செந்தமிழின் மெய்யுணர்வு சேரா வடபுலத்தார்
தந்தமணப் பந்தர்க்கண் தாம் தாழ்ந்தார் – செந்தமிழைக்
கற்றுத் துலையொக்கக் கண்ணுதலோன் போக்குவித்தான்
தேற்ற அகத்தியனைத் தெற்கு.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் எனநவில்வார் – என்றும்
வடவர்பா லில்லை மறையில்லை நூலோர்
கடன்மாந்தர் வேந்தறிவர் இல்.
தென்னா டுடைய சிவனார் அகத்தியரைத்
தென்னாட்டுப் போக்கித் தெளிதமிழியோ – பண்ணுவித்து
மெய்கண்டார் தம்மால் விரித்தார் வடபுலத்தம்
மெய்கண்டார் மீள்வர்தென் பால்”
- அவன் பணித்து இவன்...
nakkheeran balasubramanian

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக