ஞாயிறு, 4 ஜூன், 2017

இந்திய கடற்படை தமிழக மீனவனை தாக்கியுள்ளது

aathi tamil aathi1956@gmail.com

17/11/14
பெறுநர்: எனக்கு
காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய
கடற்படை தாக்குதல்… மீனவர்கள் அதிர்ச்சி
Posted by: Mayura Akilan
Published: Friday, August 2, 2013, 16:09 [IST]
காரைக்கால்: காரைக்கால் மீனவர்களை இன்று இந்திய
கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலை சேர்ந்த 45 மீனவர்கள் இன்று காலை 11
விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
திருமலைராயன்பட்டினம் அருகே மீனவர்கள்
மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த
இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத்
தாக்கியதாக தெரிகிறது.
மேலும், துப்பாக்கி காட்டியும் மிரட்டி உள்ளனர்.
அதோடு, மீனவர்களின் வலையை இந்திய கடலோர
காவல் படையினர் அறுத்து எறிந்துள்ளனர். இதனால்,
அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக
கரைக்கு திரும்பியுள்ளனர்.
இதுநாள் வரை இலங்கை கடற்படையினர்தான் தாக்குதல்
நடத்தி வந்தனர் இந்த நிலையில் இந்திய
கடற்படையினர் நம்நாட்டு மீனவர்கள் மீனவர்கள்
மீதே தாக்குதல் நடத்தி விரட்டியுள்ளனர். இந்திய
கடலோர காவல் படையினரின் இந்த செயல் மீனவர்கள்
மத்தியில் கடும்
கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹிந்திய கடற்படை மீனவரைத் தாக்கியதாமே

என்னடாப்பா புதுசா அதிர்ச்சி?

ஏற்கனவே நடந்ததுதானே

இது 2013 ல நடந்தது
http://m.oneindia.in/tamil/news/2013/08/02/tamilnadu-indian-navy-attacks-karaikal-fisher-180421.html

இது நேத்து நடந்தது

நமது மீனவர்களை நமது கடற்படையினரே தாக்கிய கொடூரம் : எங்கு சென்றாலும் அடிப்பதாக மீனவர்கள் புலம்பல் (தினகரன்)
m.dinakaran.com/Detail.asp?Nid=291295

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக