ஞாயிறு, 4 ஜூன், 2017

தமிழ் இனப்பற்று உள்ள இசுலாமியர் பட்டியல்

aathi tamil aathi1956@gmail.com

26/11/14
பெறுநர்: எனக்கு
தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்க
வாக்கெடுப்பை நடத்திய காயிதே மில்லத்,
ஈழத்திற்கான முதல் தீக்குளிப்பு அப்துல் ரவூப்,
கன்னியாகுமரி மீட்பில் மலையாளியிடம்
குண்டுபட்டு இறந்த பீர் முகமது,
ஈழப்போரில் முதல் களப்பலி ஜுன்த்தீன்,
புலித்தளபதி இம்ரான்,
தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவான முதல்
கூட்டத்தை சீரணியரங்கில் நடத்திய பழனி பாபா,
புலிகளுக்காக கூட்டம் நடத்தில் பொடாவில் கைதான
'தமிழ் முழக்கம் சாகுல் அமீது',
பூலித்தேவன் நடுகல் நட்டி சிறப்பித்த மிடேமியா,
இசைத் தமிழ் தொகுப்பாளர் மம்மது,
பிரபாகரனின் மெய்காப்பாளரும்
குமரப்பா புலேந்திரனுடன்
நஞ்சு கடித்து உயிர்துறந்தவருமான அப்துல்லா,
இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர்கள்
அமைப்பு நடத்திவரும் உமர்கயான்,
தமிழ் இலக்கியத்திலேயே மிகவும் கடினமானதான
'ஓவியமாக வரையப்படும் கவிதைகள்' பலவற்றை இயற்றிய
பி.வி.அப்துல் கபூர் சாஹீப் சாகிபூ மற்றும் இஸ்மாயீல்
வலியுல்லா,
தமிழ்ச் சங்கக் கூட்டங்களில் சதிராட்டம்(பரதந
ாட்டியம்) ஆடும் ஜாகீர் உசேன்
 முல்லைப் பெரியாறு அணையை மலையாளியிடமிருந
்து காக்க வாழ்வையே அர்ப்பணித்துள்ள கே.எம்.அப்பாஸ்.
பூலித்தேவனுடன் இணைந்து போரிட்ட மாபூஸ்கான்.
800 ஆண்டு பழமையான கடல் மணி நியூசிலாந்தில்
கண்டறியப்பட்டதே அதன் மேற்புறத்தில்
முகம்மது வக்குசு என்ற தமிழ்
எழுத்து காணப்படுகிறது.
ஆங்கிலேயரை எதிர்த்த மருதுபாண்டியர்
தளபதி இச்சப்பட்டி சேக் உசேன்.
குலசேகர பாண்டியன் அரசில் ஜமாலுதீன் மரைக்காயர்,
தைக்குத்தீன் மரைக்காயர் போன்ற தளபதிகள்.
இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதல் பள்ளிவாசல்
கட்டிய சேரமான்.
ஆஸ்கார் மேடையில் தமிழ் பேசிய ரகுமான்.
அரேபியில் படித்துவந்த குரானை தமிழில் பெயர்த்த
தாவூது ஷா.
ஔவை நாடக மறுமலர்ச்சி ஏற்படுத்திய இன்குலாப்.
சொல்லிக்கொண்டே போகவா?

சீதக்காதி, உமறுப்புலவர், பீர் முகமது அப்பா,
கவிக்கோ அப்துல் ரகுமான், இன்குலாப், ஜே.எம்.சாலி,
செய்குதம்பிப் பாவலர் என
இன்னும் இன்னும் இன்னும் இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக