ஞாயிறு, 4 ஜூன், 2017

சென்னை மீனவர் மீது சிங்கள மீனவர் தாக்குதல் விரட்டிப் பிடித்த தமிழ் மீனவர்கள் காசிமேடு

aathi tamil aathi1956@gmail.com

17/11/14
பெறுநர்: எனக்கு
தாக்குதல் நடத்திய 10 இலங்கை மீனவர்கள்-துரத்திப்
பிடித்த சென்னை மீனவர்கள்
Published: Saturday, April 12, 2008, 12:06
[IST]
சென்னை: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்
கொண்டிருந்த சென்னை காசிமேடு மீனவர்களைத்
தாக்கி விட்டுத் தப்ப முயன்ற இலங்கை மீனவர்கள்
பத்து பேரை காசி மேடு மீனவர்கள்
படகுகளில்துரத்திச்
சென்று பிடித்து சென்னை போலீஸாரிடம்
ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார்
கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை,
நாகை பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின்
கையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில்,
சென்னை மீனவர்கள், தங்களைத் தாக்கிய
இலங்கை மீனவர்களை துரத்திப்
பிடித்து சென்னைக்கு கொண்டு வந்த சம்பவம்
நடந்துள்ளது.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள், 30 விசைப்
படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய
கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக்
கொண்டிருந்தபோது அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட
விசைப் படகுகளில் இலங்கை மீனவர்கள் அங்கு வந்தனர்.
தமிழக மீனவர்களைத் தாக்கி அவர்கள் வைத்திருந்த மீன்
பிடி வலை, வயர்லஸ்
கருவி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர்.
மீனவர்களையும் கடுமையாக தாக்கினர்.
இந்த செய்தியை சில மீனவர்கள்தாங்கள் வைத்திருந்த
வயர்லஸ் கருவி மூலம் கடலில் ஆங்காங்கு மீன்
பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களுக்குத்
தெரிவித்தனர்.
இதையடுத்து மின்னல் வேகத்தில் மீனவர்கள்
அங்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்ததும்
இலங்கை மீனவர்கள் தப்பி ஓடினர். ஆனால்
சென்னை மீனவர்கள் மீனவர்களை விரட்டிச் சென்றனர்.
இதில் இரு படகுகள் மட்டும் சிக்கிக் கொண்டன.
அவற்றை தமிழக மீனவர்கள் மடக்கி படகுகளையும்,
அதில் இருந்த 10 மீனவர்களையும் பிடித்து தமிழகம்
நோக்கி விரைந்தனர். கரைக்கு வந்ததும்
மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல்
கொடுத்தனர். போலீஸாரும்,
கியூ பிரிவு போலீஸாரும், ஐபி அதிகாரிகளும்
விரைந்து வந்தனர்.
இலங்கை மீனவர்களின் தாக்குதலில் காயமடைந்த
தமிழக மீனவர்கள் அருண், அலெக்ஸ், கமல், ராஜன்,
அல்போன்ஸ், விஜய், திருப்பதி, யோகராஜ் உள்ளிட்டோர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை அமைச்சர்
கே.பி.பி.சாமி பார்த்து ஆறுதல் கூறினார்.
பிடிபட்ட இலங்கை படகுகளில்
வெடிகுண்டு உள்ளிட்ட ஏதேனும்
இருக்கிறதா என்று அதிகாரிகள் தீவிர
சோதனையிட்டனர். பின்னர் 2 படகுகளையும்
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட இலங்கை மீனவர்களிடம் மாவட்ட ஆட்சித்
தலைவர் ஜெயா உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் இதுதொடர்பான அறிக்ைக
மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களவர் தெலுங்கர் கூட்டு கடல்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக