சனி, 3 ஜூன், 2017

பிர‌பாக‌ர‌ன் முன்னோர்க‌ள் ம‌லையாளிக‌ள் அல்ல‌.:; அது இந்திய‌ர்க‌ளின் பொய்ப்பிரச்சார‌ம்!

மே 18 - மாவீரர்களுக்கு வீர வணக்கம்

தன்னுயிரை ம‌ட்டும‌ல்லாது த‌ன‌து குடும்ப‌ம் முழுவ‌தையுமே உல‌கில் த‌மிழ‌ர்க‌ளுக்கென‌  த‌னிநாட‌மைய‌ வேண்டும் என்ற‌ ஒரே இல‌ட்சிய‌த்துகாக‌ அர்ப்ப‌ணித்த‌ ஒரு த‌மிழ் மாவீர‌னை ம‌லையாளியாக்குவ‌தை எந்த‌ உண்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌னும் பொறுக்க‌மாட்டான். அத‌னால் இந்த‌ப் ப‌திவை த‌மீழீழ தாய‌க‌த்தின் விடுத‌லைக்காக‌ த‌ன்னுயிரை அர்ப்ப‌ணித்த‌ அனைவ‌ருக்கும் அஞ்சலி செலுத்துவ‌த‌ற்காக‌ப் ப‌திவு செய்கிறேன்.

புலிக‌ளின் த‌லைவ‌ர் வேலுப்பிள்ளை பிர‌பாக‌ர‌ன் த‌ன‌து இலட்சிய‌த்தில் வெற்றிய‌டையாது விட்டாலும் அவ‌ர் ஏற்றி வைத்த‌ த‌மிழீழ‌ம் என்ற‌ தீ ஒவ்வொரு ஈழ‌த்த‌மிழ‌னின்  இத‌ய‌த்திலும் அணையாமல்சுடர் விட்டு எரிந்து கொண்டு தானிருக்கிற‌து. த‌மிழ‌ர்க‌ளின் உட்ப‌கையும், த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியிலேயே வாழ்ந்து த‌மிழ‌ர்க‌ளுக்குக் குழிப‌றிக்கும் ஒட்டுண்ணிக‌ளும் பிர‌பாக‌ர‌ன் த‌ன‌து இல‌ட்சிய‌த்தை அடையாம‌ல் த‌டுத்து விட்ட‌ன‌..

பிர‌பாக‌ர‌ன் பெயரை வைத்து  வ‌யிற்றுப் பிழைப்பு ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள் ஏராளம்

பிர‌பாக‌ர‌னைப் போற்றிப் ப‌ஞ்சம் பிழைத்த‌வ‌ர்கள் ம‌ட்டும‌ல்ல‌ பிர‌பாக‌ர‌னைத் தூற்றியும் ப‌ஞ்சம் பிழைத்தவர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளிடையே ம‌ட்டும‌ல்ல‌, சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மும், இந்திய‌ர்க‌ளிட‌மும் ஏன் முஸ்லீம்கள் ம‌த்தியிலும் உண்டு.  அவ‌ர்க‌ளில் ஒரு  சில‌ர்  உருவாக்கிய‌  க‌தை தான்   பிர‌பாக‌ர‌னின்  முன்னோர்க‌ள்   ம‌லையாளிக‌ள் என்ப‌து. 

அந்த‌ க‌தையை தத்ரூப‌மாக‌ ந‌டித்துக் கொடுத்த‌வ‌ர்க‌ள் த‌மிழெதிரிமலையாளிகளும் இந்திய‌ப் ப‌த்திரிகையாள‌ர்களும்.  த‌மிழீழ விடுத‌லைப் போராட்ட‌க் கால‌த்தில் எந்த‌ள‌வுக்கு இந்திய‌ப் ப‌த்திரிகையாள‌ர்க‌ளும் ப‌ல‌ தமிழெதிரி இந்திய‌ர்க‌ளும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குப் பிர‌ச்சார‌த்துக்கு உத‌வினார்க‌ள் என்ப‌து சொல்லித் தெரிய வேண்டிய‌தில்லை.

காசைக் கொடுத்தால் பெற்ற‌ தாயாக‌ ந‌டிக்க‌ ம‌ட்டும‌ல்ல‌, அப்ப‌டியே பெற்ற‌ தாயாக‌வே மாற‌க் கூடிய‌வ‌ர்க‌ள்  நிறைந்த‌  இந்தியாவில் ந‌ட‌ந்த‌ ஆள் மாறாட்ட‌மும், பொய்ப்பிர‌ச்சார‌ங்க‌ளிலொன்று தான் பிர‌பாக‌ர‌ன் த‌ந்தை கேர‌ளாவைச் சேர்ந்த‌வ‌ர் என்ப‌தும், இந்திய‌ப் ப‌த்திரிகைக‌ளில் வ‌ந்த‌ அந்த‌ச் செய்தியும். அதை சில‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளும் ந‌ம்பிய‌து  தான் விய‌ப்புக்குரிய‌து.
 திருவேங்க‌ட‌ம் வேலுப்பிள்ளை

இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளுக்கு இல‌ங்கையில் நாடு கேட்க‌ உரிமையில்லை, அவ‌ர்க‌ள் சில‌ த‌லைமுறைக‌ளின் முன்னால் வ‌ந்த‌வ‌ர்க‌ள் என ச‌ரித்திர‌த்தை, அத‌ன் ஆதார‌ங்க‌ளைத் திரிப்ப‌து தான் சிங்கள‌ அர‌சின‌தும், புத்த‌ பிக்குக‌ளின‌தும், சிங்க‌ள‌ வ‌ர‌லாற்றாசிரிய‌ர்க‌ளின் ம‌ட்டும‌ல்ல‌ சிங்க‌ள‌ப் ப‌த்திரிகாசிரிய‌ர்க‌ளின‌தும் வேலை. சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் அந்த‌ப் பிர‌ச்சார‌த்தின் நோக்க‌ம்- இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ர்க‌ளின் விடுத‌லை இய‌க்க‌த்தின் த‌லைவ‌ன் கூட‌,அண்மையில், அதாவ‌து ஒரு த‌லைமுறைக்கு முன்னால் இல‌ங்கையில் குடியேறிய‌வ‌ர் தான். அப்ப‌டியானால் இவ‌ர்க‌ள் எப்ப‌டி இல‌ங்கையில் த‌னிநாடு கேட்க‌லாம் அதாவ‌து 'Homeland Claim' ப‌ண்ண‌லாம்  என்று காட்டுவ‌த‌ற்காக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுக்க‌தை தான் இந்திய‌ப் ப‌த்திரிகையொன்றில் வெளியிட‌ப்ப‌ட்டு, ஏனைய‌வ‌ர்க‌ளால் ஆராயாம‌ல் ஒப்பிக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌பாகர‌னின் த‌ந்தை ம‌லையாளி எனப்ப‌டும் பிர‌ச்சார‌க் க‌ட்டுக்க‌தை. இந்த‌க் க‌ருத்தை எதிர்த்து, இல‌ங்கையின் முன்ன‌ணி எழுத்தாள‌ர்க‌ளில் ஒருவ‌ரும், புலி எதிர்ப்பாள‌ர்க‌ளில் ஒருவ‌ருமான‌ D.B.S ஜெய‌ராஜ் கூட பிரபாகரன் மலையாளியல்ல அவர்களின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக ஈழத்தில் வாழ்ந்த ஈழத் தமிழர்கள் என்கிறார்.


வ‌ல்வெட்டித்துறை

புலிக‌ள் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் சொந்த‌ ஊராகிய‌ வ‌ல்வெட்டித்துறை, யாழ்ப்பாண‌க் குடாநாட்டிலுள்ள‌ க‌ரையோர‌ துறைமுக‌ ந‌க‌ர‌ங்க‌ளில் ஒன்று. வ‌ல்வெட்டித்துறை என்ற‌ ஊர்ப்பெயரின் க‌ருத்து - வ‌ல்லை என‌ப்ப‌டும் முள்நிறைந்த‌ ப‌ற்றை, வெட்டை என்றால் இல‌ங்கைத் த‌மிழில் வெளி அல்ல‌து ப‌ர‌ந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பு, அதாவ‌து வ‌ல்லைப்பற்றைக‌ள் கொண்ட‌ வெளியிலுள்ள‌ துறைமுக‌ம் என்ப‌தாகும். உண்மையில் யாழ்ப்பாண‌க்குடாநாட்டில் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ற‌வ‌ர்குல‌ வீர‌த்தின் விளைநில‌மாக‌த் திக‌ழ்ந்த‌து வ‌ல்வெட்டித்துறை. ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அதிலும் குறிப்பாக‌ யாழ்ப்பாண‌த்த‌மிழ‌ர்கள், உல‌கின் எந்த மூலையில், எத்த‌னை த‌லைமுறைக‌ள் வாழ்ந்தாலும், யாழ்ப்பாண‌த்திலுள்ள‌ த‌ம‌து முன்னோர்க‌ளின் ஊர்க‌ளுட‌ன் த‌ம‌து தொட‌ர்பு அறுந்து போவ‌தை விரும்புவ‌தில்லை, அது அவ‌ர்க‌ளின் முக்கிய‌ அடையாள‌ங்க‌ளிலுமொன்றாகும்.
                                                    Funeral of Prabhakaran's Parents
வ‌ல்வெட்டித்துறையில் வாழும் ம‌க்க‌ளில் பெரும்பான்மையின‌ர் க‌ரையார் சாதியைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் முக்கிய‌ தொழில் மீன்பிடித்த‌ல். ச‌மக்கிருத‌ம‌ய‌மாக்க‌லின் (Sanskrirization) விளைவாக, த‌மிழ்நாட்டில் எப்ப‌டி வ‌ன்னிய‌ர்க‌ள் த‌ம்மை ச‌த்திரிய‌ர்க‌ளாக‌ அழைத்து, உய‌ர்ந்த‌வ‌ர்க‌ளாக‌க்  காட்டிக் கொள்ள‌ முனைந்தார்க‌ளோ அது போன்றே வ‌ல்வெட்டித்துறைக் க‌ரையார்க‌ளும் ம‌காபார‌த‌க் க‌தைக‌ளின் அடிப்ப‌டையில் த‌ம்மை ச‌த்திரிய‌ர்க‌ளாக‌ அதாவ‌து குருகுல‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌க் காட்டிக் கொண்ட‌ன‌ர். அது ம‌ட்டும‌ன்றி யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ளுக்கு இணையாக‌ க‌ரையோர‌ப்ப‌குதிக‌ளில் ஆளுமையுள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.
யாழ்ப்பாண‌க் குடாநாட்டின் ப‌ல‌ கிராம‌ங்க‌ளைப் போன்றே
வல்வெட்டித்துறையும் ப‌ல‌ க‌ல்விமான்க‌ளையும் அர‌சாங்க உத்தியோக‌த்த‌ர்க‌ளையும் உருவாக்கிய‌து. அத்துட‌ன் வ‌ர்த்தக‌மும் முக்கிய‌ தொழிலாக‌ விள‌ங்கிய‌து. வ‌ல்வெட்டித்துறையின் ஆதிகோயில‌டியைச் சார்ந்த‌ ம‌க்க‌ளைத் த‌விர‌ மிக‌வும் குறைந்த‌ள‌விலான‌ வ‌ல்வெட்டித்துறை வாசிக‌ள் இன்று மீன்பிடித்த‌லை முக்கிய‌ தொழிலாக‌ச் செய்கின்ற‌ன‌ர்.
வ‌ல்வெட்டித்துறையில் ப‌ல‌ர் இந்தியா - இல‌ங்கைக்குமிடையே க‌ட‌த்த‌ல் தொழிலில் ஈடுப‌ட்டு பெருஞ்செல்வ‌ந்த‌ராகின‌ர். அத‌னால் வ‌ல்வெட்டித்துறை என்ற‌தும் ப‌ல‌ருக்கும் க‌ட‌த்த‌ல் தான் முத‌லில் நினைவுக்கு வ‌ருவ‌துண்டு.


இந்தியாவின் கேர‌ள மாநில‌த்திலுள்ள‌ பெண் ஒருவர், பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ளின் த‌ந்தையார் வேலுப்பிள்ளை கொல்ல‌ம் மாவ‌ட்ட‌த்திலுள்ள‌ க‌ண்ண‌னூரில் பிற‌ந்ததாக‌வும், அவ‌ர் த‌ன‌து  22 வ‌து வ‌ய‌தில் இல‌ங்கைக்குப் போனதாக‌க் கூறிய‌தாக‌  இந்தியாவிலிருந்து வெளிவ‌ரும் த‌மிழ்ச்ச‌ஞ்சிகை ஒன்று குறிப்பிட்ட‌து.  அன்றிலிருந்து தொட‌ங்கிய‌து தான் இந்த‌ திட்ட‌மிட்ட‌ பிர‌ச்சார‌ம் அதாவ‌து பிர‌பாக‌ர‌ன் ஒரு ம‌லையாளி, அவ‌ர‌து குடும்ப‌த்தின் வேர்க‌ள் கேர‌ளாவிலுண்டு ஏனென்றால் அவ‌ர‌து த‌ந்தை கேர‌ளாவைச் சார்ந்த‌ ம‌லையாளி என்ப‌து.

ம‌லையாளிக‌ளின் வ‌ழிவ‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ (அவ‌ர்க‌ள் விரும்பாது விட்டாலும் அவ‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளின் வ‌ழிவ‌ந்த‌வ‌ர்க‌ள் தானே) இருப்ப‌தில் த‌வ‌று ஒன்றுமில்லை.  இல‌ங்கையில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மும், த‌மிழ‌ர்க‌ளிட‌மும் மலையாள‌ பழ‌க்க‌ வ‌ழ‌க்கங்க‌ளின் தாக்கமுண்டு. அது சேர‌நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் மூல‌மாக‌வும் வ‌ந்திருக்க‌லாம் அல்ல‌து பிற்கால‌த்தில், சில‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்பாக  ம‌லையாளிகளின் தொட‌ர்பினாலும் வ‌ந்திருக்க‌லாம். ம‌ல‌பார் க‌ரையிலிருந்தும், கோர‌ம‌ண்ட‌ல் (சோழ‌ம‌ண்ட‌ல‌க‌ரையிலிருந்தும் இல‌ங்கைக்கு குடியேற்ற‌ம் ந‌டைபெற்ற‌து. 

ஆனால் இந்த‌ விட‌ய‌த்தில் உண்மை எதுவென்றால் பிர‌பாக‌ர‌னின் த‌ந்தை வேலுப்பிள்ளை கொல்ல‌ம் மாவ‌ட்டத்திலுள்ள‌ க‌ண்ண‌னூரில் பிற‌க்க‌வில்லைமாறாக‌ ப‌ல‌ த‌லைமுறைக‌ளாக‌ வ‌ல்வெட்டித்துறையைச் சார்ந்த‌, அதுவும் ஒரு புக‌ழ்பெற்ற‌, த‌மிழ்க்குடும்ப‌த்தில்  வ‌ல்வெட்டித்துறை, இல‌ங்கையில் பிறந்தவ‌ர். திருவேங்க‌டம் வேலுப்பிள்ளையின் முன்னோர்க‌ள் பெருஞ்செல்வ‌த்தை வ‌ர்த்த‌க‌த்தாலும், க‌ட‌ல் சார்ந்த‌ தொழில்க‌ளினாலும் திரட்டின‌ர். அது ம‌ட்டும‌ன்றி ப‌ல கொடைக‌ளைச் செய்தும் பெயர் பெற்ற‌ன‌ர்.


வேலுப்பிள்ளையின் ப‌ர‌ம்ப‌ரையின‌ருக்கு பெய‌ர் திருமேனியார் குடும்ப‌ம், அவ‌ர்க‌ள் தான் புக‌ழ்பெற்ற‌ வ‌ல்வெட்டித்துறைச் சிவ‌ன் கோயிலின் ப‌ர‌ம்ப‌ரை த‌ர்ம‌க‌ர்த்தாக்க‌ள். அது பிர‌பாக‌ர‌னின் த‌ந்தை வ‌ழி முன்னோர்க‌ளால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ கோயில். அவ‌ர்க‌ளின் க‌ட்டுப்பாட்டுக்குள் வ‌ல்வெட்டித்துறை சிவ‌ன் கோயில் இருப்ப‌தால் அவ‌ர்க‌ளை'எச‌மான் குடும்ப‌ம்' என‌ ஊர்மக்கள் அழைத்து வ‌ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் த‌ம‌து சொந்த‌ப்ப‌ண‌த்தில் வ‌ல்வெட்டித்துறைச் சிவ‌ன் கோயிலைக் க‌ட்டிய‌தால் இன்றும் அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தின‌ர் தான் ப‌ர‌ம்ப‌ரை த‌ர்ம‌க‌ர்த்தாக்க‌ளாக‌ உள்ள‌ன‌ர்.

திருமேனியார் குடும்ப‌த்தின் முன்னோர்க‌ளில் ஒருவ‌ராகிய‌ ஐய‌ம்பிள்ளை முத‌லில் புகையிலை வ‌ர்த்த‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌வ‌ர்.
யாழ்ப்பாண‌த்து உற்ப‌த்திக‌ளாகிய‌ சாய‌ப்பொருட்க‌ளையும், புகையிலையையும் டச்சுக்கால‌த்திலேயே இந்தியாவுக்கு க‌ட‌ல் மூல‌மாக‌ எடுத்துச் சென்று வியாபார‌த்தைத் தொட‌ங்கினார். அவ‌ர‌து ம‌க‌ன் வேலாயுத‌மும் த‌ந்தையின் தொழிலைத் தொட‌ர்ந்தார். ஆனால் வேலாயுத‌த்தின் ம‌க‌ன் வெங்க‌டாச‌ல‌ம் தான் த‌ன‌து திற‌மையால் குடும்ப‌த்தின் செல்வ‌த்தை ப‌ன்ம‌ட‌ங்கு உய‌ர்த்திய‌வ‌ர். அவ‌ர் ப‌ல‌ Schooner பாய்ம‌ர‌க்க‌ப்ப‌ல் ப‌டகுக‌ளை வாங்கி அத‌ன் மூல‌மாக‌ பொருட்க‌ளை இந்தியா, ப‌ர்மா, ம‌லேசியா போன்ற‌ நாடுக‌ளுக்கு ஏற்றும‌தி செய்தார் அதும‌ட்டும‌ன்றி  வ‌ட‌க்கில் ப‌ல‌ நில‌ங்க‌ளை வாங்கி  விவசாய‌மும் செய்தார்.

வ‌ல்வெட்டித்துறை சிவ‌ன் கோயில்

பிர‌பாக‌ர‌னின் முன்னோர்க‌ளில் ஒருவ‌ராகிய‌ வெங்க‌டாச‌ல‌ம் அவ‌ர்க‌ளுக்குச் சொந்த‌மான‌  ப‌ல‌ நில‌ங்க‌ளில், 90 ஏக்க‌ர் அள‌விலான‌ நில‌ங்க‌ளில் ஒன்று முல்லைத்தீவு மாவ‌ட்ட‌த்திலுள்ள‌ க‌ரைத் துறைப்ப‌ற்றிலுள்ள‌து அங்கு தான் புலிக‌ளுக்கும் சிங்க‌ள‌ இராணுவ‌த்துக்கும் இடையில் க‌டைசி யுத்த‌ம் ந‌டைபெற்ற‌து. 

1822 ம் ஆண்டில், வ‌ல்வெட்டித்துறையில் பெரிய‌த‌ம்பி என்றும் அழைக்க‌ப்ப‌ட்ட‌, பிர‌பாக‌ர‌னின் முன்னோர்க‌ளில் ஒருவ‌ராகிய‌ வெங்க‌டாச‌ல‌த்தின் க‌ன‌வில் அவ‌ர‌து த‌ந்தை வேலாயுத‌ம் தோன்றி சிவ‌னுக்கு ஒரு கோயில் அமைக்குமாறு கேட்டுக் கொண்டாராம். அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தின‌ர் ஏற்க‌ன‌வே வ‌ல்வெட்டித்துறை பிள்ளையார் கோயிலுட‌னும், முத்துமாரிய‌ம்ம‌ன் கோயிலுட‌னும் தொட‌ர்புள்ள‌வ‌ர்க‌ள். முத‌லில் அம்ம‌ன் கோயில் அருகில் 60 ஏக்க‌ர் நில‌த்தை வாங்கினார். அந்த‌ திருப்ப‌ணியின் விளைவாக‌, அவ‌ர் மேலாடையும், கால‌ணியும் அணிவ‌தைத் த‌விர்த்துக் கொண்டார். அதனால் ம‌க்க‌ள் ம‌ரியாதையுட‌ன் அவ‌ரைத் "திருமேனியார்" என‌ அழைக்க‌த் தொட‌ங்கின‌ர்.

பிர‌பாக‌ர‌னின் த‌ந்தையார் வேலுப்பிள்ளை அவ‌ர்க‌ள் வெங்க‌டாச‌ல‌த்தின் நேரடி வாரிசு. அவ‌ர‌து த‌ந்தையின் பெயர் திருவேங்க‌ட‌ம். அவ‌ர‌து பாட்ட‌னார் வேலுப்பிள்ளை வ‌ல்வெட்டித்துறைச் சிவ‌ன் கோயிலைக் க‌ட்டிய‌ வெங்க‌டாச‌ல‌த்தின் ம‌க‌ன். பிர‌பாக‌ர‌னின் த‌ந்தைக்கு அவ‌ர‌து பாட்ட‌னின் நினைவாக‌ வேலுப்பிள்ளை என‌ப் பெயரிட‌ப்ப‌ட்ட‌து.

திருமேனியார் வெங்க‌டாச‌ல‌த்தின் ச‌கோத‌ர‌ன் குழ‌ந்தைவேல்பிள்ளை இந்துஸ்தான் வ‌ங்கியில் 'Shroff ' ஆக‌ ப‌தவி வ‌கித்த‌வ‌ர். வெங்க‌டாச‌ல‌மும் குழ‌ந்தைவேலும் இணைந்து ப‌ல‌ கோயில்க‌ளை கொழும்பு செக்குத் தெருவிலும், கீரிம‌லையிலும், ர‌ங்கூன், ப‌ர்மாவிலும் க‌ட்டின‌ர்.


பிர‌பாக‌ர‌னின் த‌ந்தை வேலுப்பிள்ளை குடும்ப‌த்துக்கு ஒரே ம‌க‌ன். அத‌னால் வ‌ல்வெட்டித்துறைச் சிவ‌ன் கோயிலின் ப‌ர‌ம்ப‌ரை த‌ர்ம‌க‌ர்த்தா ப‌த‌வி அவ‌ரிட‌ம் திணிக்க‌ப்ப‌ட்ட‌து. ஒரு ஆழ்ந்த‌ ப‌க்திமானாகிய‌ வேலுப்பிள்ளை த‌ன‌து க‌ட‌மையைத் த‌வ‌றாம‌ல் செய்து கோயிலைப் ப‌ராம‌ரித்து வ‌ந்தார். ஆனால் 70ம் ஆண்டுக‌ளில் த‌ன‌து த‌ர்ம‌க‌ர்த்தா ப‌த‌வியை அவ‌ர‌து உட‌ன்பிற‌வாச் ச‌கோத‌ர‌ர் சின்ன‌த்துரையிட‌ம் கைய‌ளித்து விட்டு வில‌கிக் கொண்டார். அத‌னால்  சின்ன‌த்துரை வ‌ல்வெட்டித்துறையில் "எச‌மான்" ஆனார்.

ஐம்பெருந்தேர் ‍ வ‌ல்வைச் சிவ‌ன்கோயில்
Ref: http://dbsjeyaraj.com/dbsj/archives/1295
****************************************************************************************************************



"ஆளும் வ‌ள‌ர‌ணும் அறிவும் வ‌ள‌ர‌ணும் அது தாண்டா வ‌ள‌ர்ச்சி"


இன்று மே ப‌தினெட்டாம் நாளைத்  த‌மிழ‌ர்க‌ளைக் கொன்று வெற்றிவாகை சூடிய‌ வெற்றி விழாவாக‌க் கொண்டாடுகின்ற‌ன‌ர் சிங்க‌ள‌வ‌ர்க‌ள். ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு இன்றைய‌ நாள் முள்ளிவாய்க்காலில் த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து முன்னோர்க‌ள் க‌ட்டிக் காத்த‌ நாட்டை, சுத‌ந்திர‌த்தை, த‌மிழ‌ர்க‌ளின் உயிர்க‌ளை சிங்க‌ள‌ பெள‌த்த‌த்தின் கால‌டியில் ப‌லி கொடுத்த‌ நாள்.

இந்த‌ வேளையிலே அதாவ‌து ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் அழிவின் நினைவு நாளுக்குச் ச‌ரியாக‌ ஒரு நாளுக்கு முன்னால் த‌மிழ்ம‌ண‌த்திலுள்ள‌ பெரிசுகளில் ஒன்றுக்கு  மதுரைப்  பாண்டிய‌னுக்கு ஏற்ப‌ட்ட‌து போன்ற‌ பல‌த்த‌ ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட்டிருக்கிற‌து.  பாண்டிய‌னுக்கேற்ப‌ட்ட‌ ச‌ந்தேக‌ம் பெண்க‌ளின் கூந்த‌லைப் ப‌ற்றிய‌து ஆனால் இவ‌ருக்கு ஏற்ப‌ட்ட‌ ச‌ந்தேக‌மோ த‌மிழீழ‌த்தைப் ப‌ற்றிய‌து.

இல‌ங்கையில் ஏன் கேர‌ள ஈழ‌ம் கேட்க‌வில்லை?

இந்த‌க் கேள்வி எந்த‌ 'நாட்டுக்' குசும்போ என‌க்குத் தெரியாது ஆனால் நிச்ச‌ய‌மாக‌ அந்த‌க் கேள்வியில் அடிமுட்டாள் தன‌ம் நிறைய‌வே இருக்கிற‌து. இப்ப‌டியான‌ குசும்பு என்று கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ள் நினைத்துக் கொண்டு கேட்கும் முட்டாள்த‌னமான‌,  கேள்விக‌ளை, த‌மிழ்நாட்டில் வாழுகின்ற‌ ஆனால் த‌மிழில் வ‌லைப்ப‌திவுக‌ளில் எழுதும், த‌மிழ‌ர்க‌ள் ஒன்றுப‌டுவ‌தை விரும்பாத‌, த‌மிழ‌ர‌ல்லாத‌, அதாவ‌து தெலுங்கு, ம‌லையாள‌, க‌ன்ன‌ட‌ எச்ச‌ங்க‌ள் கேட்ப‌தைத் தான் நான் பார்த்திருக்கிறேன், இவ‌ர் எதில் எந்த‌ வ‌கையென்று என‌க்குத் தெரியாது, தெரிந்து கொள்ள‌வும் விரும்ப‌வில்லை.

த‌மிழ்நாட்டைத் த‌மிழ்நாடு என்று அழைப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் த‌மிழ்நாட்டிலுள்ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ள் த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ள் என‌ அடையாள‌ப்ப‌டுத்துவதுட‌ன்,பெரும்பான்மை ம‌க்க‌ள் பேசும் மொழி த‌மிழ். ஆனால் த‌மிழ்நாட்டைத் த‌மிழ‌ர்க‌ள் ஆண்ட‌தை விட‌ அன்னிய‌ர்க‌ள் ஆண்ட‌ கால‌ம் தான் அதிக‌ம் அக்கால‌த்தில் ப‌ல‌ அன்னிய‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் குடியேறியிருப்பார்க‌ள், த‌மிழ‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்திருப்பார்க‌ள் அத‌னால் த‌மிழ்நாட்டை த‌மிழ்நாடு என்று அழைக்க‌க் கூடாது என்று யாராவ‌து சொன்னால் அது நிச்ச‌ய‌மாக‌ அவ‌ர்க‌ளின் அறியாமையை ம‌ட்டும‌ல்ல கோண‌ங்கித் த‌ன‌த்தையும் தான் காட்டுகிற‌து என்ப‌தில் ஐய‌மில்லை.அது போன்ற‌து தான் இல‌ங்கையில் ஏன் கேர‌ள ஈழ‌ம் கேட்க‌வில்லை என்ப‌தும்.

அதிலும் கேர‌ள‌ம் என்ப‌து ஒரு மாநில‌த்தின் பெய‌ர் ஆனால் த‌மிழீழ‌த்திலுள்ள‌ த‌மிழ் என்ப‌து இல‌ங்கையில் குறிப்பிட்ட‌ வ‌ட‌ கிழ‌க்கில் பெரும்பான்மையாக‌ வாழும் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளின் அடையாள‌த்தைக் குறிப்ப‌து என்ப‌து கூட‌ச் சிலருக்குத் தெரிய‌வில்லை என்ப‌து க‌வ‌லைக்குரிய‌து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக