சனி, 3 ஜூன், 2017

ஹரப்பா சிந்து ஆங்கிலேயரால் சிதைப்பு தமிழ் சுவடுகள் அழிப்பு

aathi tamil aathi1956@gmail.com

10/12/14
பெறுநர்: எனக்கு
பிரிட்டிஷ் இந்திய தொடர்வண்டிப்
பாதைக்கு அடிக்கல்லாகிப்போன தமிழர் நாகரீகச்
சுவடுகள்!
---------------------------------------------
--------------------------
கக்கர் ஹக்ரா வழியாக தில்லியிலிருந்த
ு சிந்து பிரதேசத்துக்கு ஒரு 'புதிய பாதையை'
அமைப்பதற்காக மேஜர் மெக்கீஸன் 1844ல்
அரசாங்கத்துக்கு
சிபாரிசு செய்ததை ஏற்கெனவே பார்த்தோம்.
எனினும், ஐந்து ஆண்டுகளுக்குப்
பிறகு பிரிட்டிஷார்
பஞ்சாபை இணைத்துக்கொண்ட பிறகு இந்தப்
பாதைக்குத் தேவையில்லாமல் போயிற்று:
அப்போது செய்யவேண்டியிருந்ததெல்லாம்
பஞ்சாபுடனும் அதன் வழியாகவும்
தொடர்புகளைப் பலப்படுத்துவதுதான்.
அதை மிகச் சரியாகவே பிரிட்டிஷார் செய்ய
ஆரம்பித்தனர். அவர்கள் அறிமுகப்படுத்திய
தந்தி,
ரயில்வே முதலியவை இந்தியாவுக்கு 'முன்னேற்றத்தை'
கொண்டுவந்ததாக எப்போதும்
சொல்லப்படுவது வழக்கம். நடைமுறையில்
அவை இந்தப் பெரிய
நிலப்பகுதியை பிரிட்டனின்
'மாட்சிமை பொருந்திய ஆட்சி'யின்
கட்டுப்பாடுக்குள் வைத்திருக்கச்
செய்தாகவேண்டிய முதலும் முடிவுமான
கருவிகளாகவே இருந்தன. இதன்
பொருட்டு 1850களின் பிற்பகுதியில் பஞ்சாப்
வழியாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக, லாகூருக்கும் முல்தானுக்கும்
இடையில் ராவி நதிக்குத் தெற்கே சிந்துப்
பகுதியின் வழியாக ஒரு ரயில்தடம்
போடப்பட்டது. ஆனால், ரயில்
பாதையை அமைக்க பலமான அஸ்திவாரம்
வேண்டுமே, பஞ்சாப் போன்ற வண்டல் மண்
நிறைந்த இடங்களில் இப்படிப்பட்ட அஸ்திவாரக்
கற்களை எங்கே தேடுவது? சூறையாடத்
தோதாக ஒரு பழைய சிதிலமடைந்த நகரமும்
டன் கணக்கில் அதி அற்புதமான செங்கற்களும்
கைக்கெட்டும் தூரத்தில் இருந்தால்
உங்களுக்கு அதிர்ஷ்டம்தான்.
மிகச் சரியாக அதுதான் நடக்கவும் செய்தது.
பஞ்சாபின் ஸஹிவால் மாவட்டத்தில்
இன்று ராவி நதி ஓடிக்கொண்டிருக்கும்
இடத்துக்குப் பன்னிரண்டு கிலோமீட்டர் தெற்காக
ராவியின் பழைய படுகை இருந்தது. அதன்
கரையில் ஹரப்பா என்ற கிராமத்தில் காணப்பட்ட
பெரிய குன்றுகள்தான் இந்த
ரயில்பாதை அமைக்கும் பணிக்குக்
கை கொடுத்தன. 'ஹரப்பா' என்ற இந்தப் பெயர்
உலகப் புகழ்
பெறப்போகிறது என்பது அப்போது யாருக்கும்
தெரிந்திருக்கவில்லை. அதிலும் அன்றைய
மேற்கு மண்டல ரயில்வே பொறியாளர்களுக்க
ு அங்கு இருந்த செங்கற்களை,
வண்டி வண்டியாக வெட்டி எடுக்க வேண்டிய
குவாரியாகப் பார்க்கும் கண்கள்
மட்டுமே இருந்தன. இந்தச்
செங்கற்களை எடுத்துக்கொண்டுச்
செல்வதற்கென்றே தனியாக ஒரு சிறிய
ரயில்பாதையும் அமைக்கப்பட்டது.
முன்பு மாட்டு வண்டிகளில் எடுத்துச்
செல்லப்பட்ட செங்கற்கள் இப்போது ரயில்
வண்டியில் பெயர்த்தெடுத்துக்
கொண்டு செல்லப்பட்டன. 1853லும், பின்னர்
1856லும் அந்த இடத்துக்கு விஜயம் செய்த
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்திய
அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவர் என்ற
நிலையில் 1872ல் மீண்டும் அங்கு சென்றார்.
அவருடைய அறிக்கையில் அந்தப்
பிரதேசங்களில் தான் முன்பு கண்ட பிரமாண்ட
புராதனக் கோட்டைகளின் மதில்கள்
காணாமற்போய்விட்டன என்றும், 160 கி.மீ
தூரத்துக்கு அமைக்கப்பட்ட லாகூர் முல்தான்
ரயில் பாதைக்கு அவை அஸ்திவாரக் கற்களாகப்
பயன்படுத்தப்பட்டுவிட்டன என்றும்
வேதனையுடன் எழுதியிருந்தார்.
 
சிந்துசமவெளி ஆங்கிலேயர் அகழ்வாராய்ச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக