ஞாயிறு, 4 ஜூன், 2017

தெலுங்கு மீனவர் சென்னை மீனவரிடம் பணம்பறிப்பு கடற்கொள்ளை பலமுறை

aathi tamil aathi1956@gmail.com

17/11/14
பெறுநர்: எனக்கு
சென்னை: அம்மன் கோவில்
திருவிழாவை காரணம் காட்டி, ஆந்திர
கடல் பகுதியில் வசூல் வேட்டை நடத்தும்
ஆந்திர கடற்கொள்ளையர்கள்,
சென்னை மீனவர்களை தாக்கி அவர்களில்
சிலரை சிறைபிடித்தனர். அதையடுத்து,
குறிப்பிட்ட தொகை கொடுத்து, சிறைபிடிக்கப்பட்ட
மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ராயபுரம், ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் தனசீலன்,46. அவர்
உட்பட 10க்கும் மேற்பட்டோர் இரண்டு விசைப்படகுகளில்
காசிமேட்டிலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடந்த
28ம் தேதி ஆந்திர கடலோர பகுதியில்
மீன்பிடித்து கொண்டிருந்த போது, ஆந்திர மாநிலம்,
ராமதீர்த்தம் பகுதியிலிருந்து ஐந்து படகுகளில் வந்த
50க்கும் மேற்பட்ட ஆந்திர கடற்கொள்ளையர்கள்,
சென்னை மீனவர்களை வழிமறித்து, அம்மன் கோவில்
விழாவுக்காக பணம் தரும்படி வற்புறுத்தினர். இதில்
இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. மோதலில்,
தனசீலனுக்கு கை, கால் மற்றும் தலைப்பகுதியில் பலத்த
காயம் ஏற்பட்டது. இறுதியில் 11
சென்னை மீனவர்களை சிறைபிடித்த, ஆந்திர கடற்கொள்ளையர்கள்,
விசைப்படகுகளுடன் அவர்களை ஆந்திராவுக்கு கடத்தினர்.
இதில் தனசீலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவரை மட்டும்
கடற்கரையோரம் இறக்கி விட்டனர். கடலோரம் இறங்கிய தனசீலன்,
காரில் ஏறி நேற்று காலை சென்னை வந்தார்.
ராயபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட தனசீலன் தீவிர சிகிச்சை பிரிவில்
சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே சிறைபிடிக்கப்பட்ட 11 மீனவர்களையும் மீட்க,
சென்னையிலிருந்து ஐந்து பேர் கொண்ட குழுவினர்,
நேற்று முன்தினம் ஆந்திரா சென்றனர். ஆந்திர
கடற்கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 30 ஆயிரம்
ரூபாய் கொடுத்து, சிறைபிடிக்கப்பட்ட
சென்னை மீனவர்களை மீட்டதாக கூறப்படுகிறது. அவர்கள்
இன்று காலை சென்னை வந்தடையலாம் என, தெரிகிறது.
இதுகுறித்து இந்திய மீனவர் சங்க தலைவர் தயாளன்
கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சோமாலிய
கடற்கொள்ளையர்களை போல், ஆந்திர கடற்கொள்ளையர்கள், தமிழக
மீனவர்களை தாக்கி வசூல் வேட்டை நடத்துவதை வழக்கமாக
கொண்டுள்ளனர். புகார் அளித்தால் தமிழக போலீசார்
கண்டு கொள்வதில்லை. சம்பவம் அங்கு நடப்பதால், ஆந்திராவில்
புகார் தர சொல்கின்றனர்.
மீன்பிடி துறை நிர்வாகமோ தொடர்ந்து மவுனம்
சாதித்து வருகிறது. ஆந்திர மீனவர்கள் வேடத்தில்
திரியும் கடற்கொள்ளையர்களால், தாக்கப்பட்ட தனசீலன்
ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் பல மீனவர்கள் அவர்களின்
பிடியில் உள்ளதாக தெரிகிறது. ஒரு பக்கம்
இலங்கை கடற்படை மறுபக்கம் அண்டை மாநில கடற்கொள்ளையர்கள்
என, அவதிப்படும் தமிழக மீனவர்களை காக்க தமிழக
அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 http://www.dinamalar.com/news_detail.asp?id=791776&Print=1

சென்னை மீனவர்கள் மீது ஆந்திர கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : ராயபுரம் மீனவர் மண்டை உடைப்பு



பதிவு செய்த நாள்

 
30ஆக
2013 
00:31

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக