ஞாயிறு, 4 ஜூன், 2017

ஆப்பிரிக்கா தமிழர் தொடர்பு நீண்ட கட்டுரை 1

ஆப்பிரிக்கா பற்றிய புரிதலில் உள்ள வரலாறும் அதில் தமிழின் பங்களிப்பும்.

தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததால் இருண்ட கண்டம் என்று அறியப்பட்ட ஆப்பிரிக்கா தொடர்ந்த காலங்களில் பல்வேறு விதங்களில் புரிந்து கொள்ளப்பட்டது.

1. 
வரலாற்றின் தந்தை என்று ஐரோப்பியர்களால் சொல்லிக்கொள்ளப்படும் கிரேக்க ஹெரோடோடஸ் (Herodotus கி. மு. 484-425) என்பவரின் புரிதல் படி முழு ஆப்பிரிக்காவும் லிபியா என அழைக்கப்பட்டது.


2. 
பின் கொஞ்சம் விவரமாகி ஆப்பிரிக்காவின் தென் பகுதியிலும் மக்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கேள்விப்பட்டு அப்பகுதியை எத்தியோப்பியா என்று அழைத்தனர்.


அப்பகுதி கடலையும் எத்தியோப்பியக் கடல் என அழைத்தனர்.



செமிட்டிய பினீசியர்களின் (Semitic Phoenicians) தொடர்புக்குப்பின் ஆப்பிரிக்கா என அழைக்க ஆரம்பித்தனர். காண்க:


3.


ஆப்பிரிக்கா என்ற பெயரே தமிழ்ப் பெயர்.

தமிழிலும் ஆப்பிரிக்கா என்பதற்கு பல புரிதல்கள் உண்டு. முக்கியமான நான்கு புரிதல்கள் தமிழோடு தொடர்புடையது.

3.1

1. ஆப்பிரிக்கா ஒரு தூசி, புழுதி நாடு.

இத்தாலிய ரோமர்கள் வடக்கு ஆப்பிரிக்காவை (துனிசியா) வெற்றி கொண்ட பின் அப்பகுதியில் இருந்த அப்ரி (Afri) இன மக்களின் பெயர் கொண்டு முழு பகுதியையும் அவ்வாறே அழைத்தனர். காண்க:

ஆப்பிரிக்கா அபார் (Afar) என்ற எபிரேய வார்த்தையில் இருந்து வந்ததாக பெரும்பாலான தகவல்கள் தெரிவிக்கின்றன. அபார் என்பதற்கு தூசி என்று பொருள். இன்றைய சகாரா பாலைவனம் இருக்கும் வடக்கு ஆப்பிரிக்கா பாலைவனப்புயலால் அப்பெயர் பெற்றது என்றனர். ஆங்கில மூலச்சொல் அகராதி 


அபாகஸ் (Abacus) என்று சொல்லப்படும் கணிக்கும் முறை யின் மூலச்சொல் எபிரேய மூலச்சொல். தரையில் மணல் பரப்பி எழுதும் முறை. காண்க: மற்றும் காண்க:


தமிழிலும் அப்பு என்றால் மண் என்றே பொருள்.

அப்பு [ appu ] {*}, s. water, நீர்; 2. sea, கடல். மண்.  காண்க:


தூசி நாடு, மண் நாடு, அப்பு நாடு - ஆப்பிரிக்க நாடு.

3.2

2. ஆப்பிரிக்கா ஒரு கடல் தாண்டி அடையும் நாடு.


தமிழர்கள் பாலினேசிய, இந்தியப் பெருங்கடல் தீவு மற்றும் நாடுகளிலிருந்து பல இடங்களில் குடியேறியவர்கள் என்ற அடிப்படையில் கடலோடிகளாக இருந்தனர். கலை வளர்த்தனர், கட்டடங்கள் எழுப்பினர். தங்கம் கண்டுபிடித்தனர்.

எரிதிரைக்கடல் என அழைக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் தாண்டிச் சென்று அடைந்த நிலப்பரப்பு என்ற அடிப்படையில் ஆப்பிரிக்கா என்றானது.

காரணம் அப்பு என்றால் கடல் என்றும் தமிழில் பொருள்.

அப்பு [ appu ] {*}, s. water, நீர்; 2. sea, கடல். மண்.  காண்க:

அவ்வாறு இந்தப்பெருங்கடலில் பயணம் செய்து களைத்த சமயத்தில் முதலில் தென்பட்ட தீவில் தங்கி ஓய்வெடுத்தனர். அத்தீவுக்கு அதனால் சுகதரை என்றே பெயரிட்டனர். இன்றும் அத்தீவு சுகத்ரா (Succotra) என்றே அழைக்கப்படுகிறது. காண.
இது பற்றி பின்னர் இதே கட்டுரையில் சற்று விளக்கமாகக் காண்போம்.

    
3.3


3. ஆப்பிரிக்கா ஒரு தங்க நாடு.

தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தங்கம் கண்டுபிடித்தனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலே சான்று. ஒரே ஒரு கோயிலில் இருக்கும் நகையையே இன்றைய நவீன உலகிலும் கணக்கிட முடியவில்லையே. இந்தியா முழுவதும் உள்ள கோயில்களைக் கணக்கெடுத்தால்? ஆனால் என்ன அந்நிய ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களும், உள்ளூர் அரசியல் கொள்ளையர்களும் கொள்ளையடித்தது போக மீதம் தான் இப்ப இருப்பது.

சரி விசயத்திற்கு வருவோம்.

தமிழர்கள் சென்ற, வாழ்ந்த இடங்களில் எல்லாம் தங்கம் கண்டுபிடித்தனர். தென்கிழக்காசியாவில் சுவர்ண பூமி தங்க பூமி தான். கி.மு. 200ல் சுமத்திராவை ‘’ இந்திரகிரி” என்றும் கி.பி. 6ம் நூற்றாண்டில் “ புலாவு பேர்ச்சா”, “ஸ்வர்ண தீபம்” என்று அழைத்தார்கள். 



சுவர்ணதீபம் என்றால் பொருள்: 

சுவர்ண தீவம் - சுவர்ண தீவு. சுவர்ணம் என்றால் சு - வர்ணம். சோதிய வர்ணம் (சோதியான சூரியனின் வர்ணமான தங்க நிறம்.) ஆக சுவர்ண தீவு என்றால் தங்க தீவு, தங்கம் அதிகம் கிடைக்கப்பெறும் தீவு என்றே பொருள்.

பக்கத்தில் உள்ள நிலப்படத்தில் அதன் இருப்பிடம் காணலாம். படத்தை விரிவுபடுத்தியும் காணலாம். 








இன்றும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தின் பெயர் சுவர்ணபூமிதான். 




இந்தியப்பெருங்கடல் தாண்டி ஆப்பிரிக்க பெரு நிலப்பரப்பில் நுழைந்தவர்கள் அங்கும் தங்கம் கண்டறிந்தனர். 

கிறித்தவர்களின் விவிலியத்தில் சாலமோன் அரசர் ஓபிர் (Ophir) பகுதியில் இருந்து தங்கம் இறக்குமதி செய்தார் என்று ஒரு பகுதி வருகிறது. காண்க: 

தமிழில் அபரஞ்சி என்றால் தங்கம் என்று பொருள். 

நம்மூரிலும் அபரஞ்சிதம் என்று பெயர்கள் உண்டு. தங்கப்பெண். 

அபரஞ்சி [ aparañci ] , s. (Tel.) fine gold, the purest gold, தங்கம். காண்க: 

அபரஞ்சி நாடு ஆப்பிரிக்கா நாடு.

ஆப்பிரிக்காவில் தங்கம் கிடைக்கும் பகுதிகள் கொண்ட நிலப்படம்:



3.4


4. ஆப்பிரிக்கா ஒரு கறுப்பு நாடு.

மனிதன் உருவான துவக்க கால கட்டத்தில் உலகின் அனைத்து மக்களும் கறுப்பர்களே.


முதல் ஐரோப்பியர்கள் வெள்ளையர்கள் அல்ல அவர்கள் கறுப்பர்களே. காண்க:

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளிலிருந்து சென்று குடியேறியவர்களே அவர்கள். தொடர்ந்த குளிர் வானிலை, மற்றும் சூரிய வீச்சின் நேரடிபாதிப்புகளற்ற நிலையில் வெள்ளை நிறத்தினை பல நூறு ஆண்டு கால இடைவெளியில் பெறத்தொடங்கினர்.

அந்தமானிய தொல்லின மக்கள் உலகில் வேறெந்த இனத்தோடும் சேராதவர்கள்; ஆனால் தென்னிந்திய தமிழினத்தோடு நெருங்கியவர்கள் என மரபணு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. காண்க:

தென்னிந்திய தமிழினம் ஐரோப்பியா சென்று திரும்பிய ஆரிய இனத்தோடு கலப்பதற்கு முன்னதாக கலப்படமற்ற தொல்லினமாக, குமரிக்கண்ட தமிழினமாக, அந்தமானிய தொல்லினத்தோடு ஒன்றாக இருந்த இனமாக இருந்தது.

A genome-wide study by Reich et al. (2009) found evidence for two genetically divergent, ancient populations that are ancestral to most persons inhabiting the Indian subcontinent today: Ancestral North Indians (ANI), who are genetically close to Middle Eastern, Central Asian, and European populations, and Ancestral South Indians (ASI), who are genetically distinct from both ANI and East Asians. The Onge Andamanese were observed to be related to the Ancestral South Indians, and were unique in that they were the only South Asian population in the study that lacked any Ancestral North Indian admixture. The authors thus suggest that the Onge populated the Andamanese Islands prior to the intermixture that took place between the Ancestral South Indians and Ancestral North Indians on the Indian mainland.காண்க 

மறத்தமிழனும் கறுப்பு நிறமும்:

மூர், மௌர், மௌரிய, நீக்ரோ என்பதெல்லாம் குறிப்பது கறுப்பு இனத்தைத்தான். காண்க: 
மறத்தமிழன் என்பதுவும் கறுப்பைக் குறிப்பதே. வீரம் என்பது பின் இணைப்பு தான்.


( In Tamil there is a term ‘maRavar, maaRan’ etc  a name of a group of Tamils especially in Pandiya country. It is interesting that the root ‘maRu’ also means black ) காண்க:
-"Moor" meant "negro" or "black-a-moor" in A Dictionary of the English Language (1768) by Samuel Johnson.  

-The Encyclopaedia Londinensis (1817) by John Wilkes lists "moor" as follows: "[maurus, Lat. μαυρο, Gr., black.] a negro; a blackamoor." 

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி நாடுகளான மௌரித்தானியா (Mauritania), மொராக்கோ (Moracco), அங்கு வாழும் மூரி இனத்தவர், மொரீசியஸ் (Mauritius) தீவு நாடு என எல்லாம் குறிப்பது கறுப்பு நிறத்தைத்தான்.













Roman Catholic writers of the 5th-9th centuries AD used "Mauretania" synomymously with all of Africa, not any one particular region.

Although most Moorish families of nobility (the origin of the term "Black Nobility") intermarried with Europeans, their surnames continued to link to their heritage. Family names such as Moore, Morris, Morrison, Morse, Black, Schwarz (the German word for "black"), Morandi, Morese, Negri, etc. all bear linguistic reference to their African ancestry. For example, the oldest Schwarz family crests even depict the image of an African, or "Schwarzkopf," ("black head" in German). Other families and municipalities adopted similar coats of arms which continue to exist in some form, demonstrating the important role Africans played in European history.காண்க:

நம்மூரில் மாநிறம் என்றாலும் நல்ல கறுப்பு என்றே பொருள் என்பதை நாம் அறிவோம். மாரி, கருமாரி, மழைமேகம் எல்லாம் கருமையை குறிக்கும்.

தமிழில் அ-பிரகாசம் என்றால் இருள் என்றே பொருள். 

அப்பிரகாசம் [ appirakācam ] {*}, s. (அ, priv.) darkness, இருள். காண்க: 

அப்பிரகாச தேசம் ஆப்பிரிக்க தேசம்.

நீக்ரோ: சுத்த தமிழ் வார்த்தை

கறுப்பு இனத்தவரைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல் நீக்ரோ (Negro). இனத்துவேசம் கொண்ட வார்த்தை இது என்று இவ்வார்த்தைக்கு எதிர்ப்பு வந்ததால் கறுப்பர்கள் (Blacks) என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது.

வேர்ச்சொல்லின் படி இரண்டும் ஒரே அர்த்தம் கொண்டதே.

Negro (n.) 
"member of a black-skinned race of Africa," 1550s, from Spanish or Portuguese negro "black," from Latin nigrum (nominative niger) "black, dark, sable, dusky," figuratively "gloomy, unlucky, bad, wicked," of unknown origin (perhaps from PIE *nekw-t- "night;" see Watkins). As an adjective from 1590s. Use with a capital N-became general early 20c. (e.g. 1930 in "New York Times" stylebook) in reference to U.S. citizens of African descent, but because of its perceived association with white-imposed attitudes and roles the word was ousted late 1960s in this sense by Black (q.v.).
(கறுப்புதான்  எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் தமிழர் நிறம் கறுப்பு என்று  வரும். உண்மைதான்.  
மனிதர், தெய்வங்கள் அனைத்தும் கறுப்பாக வைத்திருந்தான் தமிழன். கறுப்பை பிடித்திருந்தது தமிழனுக்கு. இப்ப இல்லை. வெள்ளைக்கு தாவி விட்டான். நடிகர், நடிகை முதற்கொண்டு, தெய்வத்தின் நிறம் வரை அனைத்தும் வெள்ளையாக இருக்க வேண்டும். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வடிவேல் சொல்வது வெறும் நகைச்சுவை மட்டும் அல்ல அது சமுதாய உண்மை, கேடு. வெள்ளையாக இருக்கும் எதுவுமே நல்லதில்லை. பசும்பால், உப்பு, சர்க்கரை, வெள்ளை அரிசி, பற்பசை. எல்லாம் இரசாயன நிறமிகளால் நிறம் மாற்றப்படுகிறது வெள்ளையாக. ஐரோப்பாவிலுள்ள வெள்ளையர்களும் வெள்ளைத்தோல் நேரடியாக சூரிய ஒளியால் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாவதால் சூரியக்குளியல் செய்கிறார்கள். கறுப்பாக, நோய் எதிர்ப்புத்தன்மை பெற,  d விட்டமின் பெற. நமக்கு அது தேவையே இல்லை. உடம்பெல்லாம் மச்சம், d விட்டமின், கறுப்பு. சரி.)

தமிழில் நிறம் என்றாலே அது கறுப்பைத்தான் குறிக்கும். நம்மூரில் மாப்பிள்ளை மாநிறம் என்றால், அவர் கறுப்பும் இல்லை. சிவப்பும் இல்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம் என்று நினைக்கிறோம். உண்மையில்லை. மாநிறம் என்றால் மா கறுப்பு, மிகவும் கறுப்பு என்றுதான் அர்த்தம். 

நிறம் என்றால் கறுப்பு என்றே பொருள்.
மா என்றால் அதிகம், பெரிய என்று பொருள். (மாமகம், )
மாநிறம் என்றால் அதிக கறுப்பு என்றுதான் பொருள்.  

நிறம் என்றாலே தமிழில் பொருள் கறுப்புத்தான்.

இந்த நிறம்,  கறுப்பு என்ற வார்த்தை தான் (நிறம்-negro-நெகறோ )நீக்ரோ என்றும் ஆனது. கறுப்பு இனத்தவர் 

அது இத்தாலியில் நேரோ-கறுப்பு என்று ஆகிவிட்டது. நிறம் என்றாலும் நீக்ரோ என்றாலும் நேரோ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். கறுப்பு.
ஸ்பானிய மொழியில் கறுப்பு - Negro
இத்தாலிய மொழியில் கறுப்பு - Nero 





III. ஆப்பிரிக்கரா? தமிழரா ? யார் உலகின் மூத்த மக்கள் இனம் ?


உலகின் தொன்மையான மனித இனத்துக்கான தேடலில் 
DNA ஆய்வும் தமிழர்களின் தொன்மையும்.

பெற்றோரிடம் இருந்து மரபியல் கூறுகளை சந்ததி சந்ததி யாக பரிமாற உதவும் உடலில் உள்ள செல் என்ற அமைப்புக்குள் காணப்படும் அடிப்படை மரபியல் தகவல்கள் கொண்ட கரு மரபணு (DNA) எனப்படும். காண்க:

நம் உடலில் பல வகையான செல்கள் உள்ளன: இரத்த செல், நரம்பு செல்... என
மேலுள்ள மனிதனின் பல வகை செல்களில் எந்த ஒரு செல்லின் அடிப்படை மரபணுவும் கீழுள்ள வாறு அமையும்.


உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் இன்றைய மனிதர்களின் மரபணு மூலக்கூறுகளைக் கொண்டு மனிதனின் மூதாதையர் எங்கு தோன்றினர், பின்னர் மனிதப்பரவல் எங்கெங்கெல்லாம் பரவியது என்பதைக் காண முடியும். 
அந்த மரபணு ஆய்வின் அடிப்படையில் பழங்கால தொன்மையான மனித இனத்தின் மரபணு வகை இரண்டே இரண்டு தான் உள்ளது. 

ஒன்று M 1 ஆப்பிரிக்க மரபணு மற்றொன்று  M 2 இந்திய மரபணு.

இவை இரண்டில் எது அதிக தொன்மையானது என்ற கேள்விக்கு சிலர் ஆப்பிரிக்க வகை என்று சொல்லும்போது, வேறு சிலர் இந்திய (திராவிட) தமிழ் மரபணு தான் தொன்மையானது என கூறுகின்றனர். இவை பற்றியே கீழுள்ள ஆங்கிலத்தகவல்கள் விளக்கம் தருகின்றன. தமிழ் தொன்மைக்கு கூறப்படும் காரணம்.

1. ஆப்பிரிக்க மரபணு ஆப்பிரிக்கா முழுவதும் இல்லை. எத்தியோப்பியா, எகிப்து பகுதியில் மட்டும் தான் காணப்படுகிறது. 
2. தமிழ் (தென்னிந்திய) மரபணு 75 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதுமட்டுமல்ல ஆசியா, தென்கிழக்காசியா முழுவதற்கும் மூல அடிப்படையாக இருக்கிறது. 

Considering the antiquity of M2 and other East Asian specific M lineages [33], Ethiopian M1 lineage is by far a relatively newer branch. Our study on M1 and M2 mitochondrial genomes clearly established the Asian origin of M macrohaplogroup, followed by a back migration to Africa. We further suggest that as more M1 mt DNA genomes are sequenced, there is a possibility that this lineage might find its root in one of the peripheral branches of Asian M lineage. காண்க:

The deep roots of M phylogeny clearly establish the antiquity of Indian lineages, especially M2, as compared to Ethiopian M1 lineage and hence, support an Asian origin of M majorhaplogroup. காண்க:

The lineages M2, M3, M4, M5, M6, M18 and M25 are exclusive to India, with M2 reported to be the most ancient lineage in the sub-continent with an age estimation of 60,000 yrs-75,000 yrs. காண்க: 



M2 is estimated to be the oldest lineage with an age of 49,686+/- 10,903 years before present (YBP). Furthermore, sub-lineage M2a differs from M2 by a minimum of six coding region substitutions, reiterating the antiquity of M2.   காண்க: 

We report a phylogenetic tree constructed from the whole genome sequencing of twenty-three Indian and one Ethiopian M lineage to resolve some of the anomalies occurring due to recurrent mutations in control region.
M2 lineage is the oldest M lineage found in India with an estimated age of approximately 50,000 YBP, using only coding region motifs estimation, opposed to the expansion date of 60,000–75,000 yrs calculated from control region sequence information. காண்க: 

If M originated in Africa, then it must have occurred at an ancient time, since it had to spread throughout Asia and the New World. However, it is paradoxical that M crossed such a vast distance andfailed to accomplish other populations of Africa, except Ethiopians and few Egyptians. காண்க:


The chronology of stars is as follows (loosely based on this previous exploration):
  • A very long period of African coalescence and gradual expansion (almost 30 molecular clock ticks, about half of human history). No star-like structures (no node with 5 or more basal branches)
  • L3 in East Africa (Sudan-Ethiopia-Eritrea) – Abbassia Pluvial?
  • Two ticks without major events
  • M in South Asia and into East Asia and Melanesia – beginning of Eurasian expansion. Huge demic explosion
  • M4″64 in South Asia.
  • Triple expansion (good climatic moment?)
    • N, probably in SE Asia (Burma?), with expansion Westwards
    • M30 in South Asia
    • L1b1a, maybe around Chad
  • R in South Asia SE Asia with expansions to West, North and South
  • P in Melanesia and B4’5 in SE/East Asia (updated)
  • Four expansions:
    • D4 in East/NE Asia
    • M5a in South Asia
    • HV in West Asia
    • L3e1 maybe at Sudan
  • D1 in Beringia?
  • Several expansions (7 haplogroups in 4/5 regions):
    • H and V in Europe. Huge demic explosion (Aurignacian?)
    • M1a and U2’3’4’7’8’9 in West Asia (two different centers possibly)
    • Z and A in NE Asia
    • L2a1 in East Africa probably
  • Two expansions (three haplogroups but two centers):
    • H1 and H3 in West Europe with eventual penetration into North Africa
    • X2, probably from the Levant, into Central Asia and eastwards (reaching to America eventually)
  • Six haplogroups in four regions:
    • C, D4a1 and A2 in NE Asia
    • R2a in West Asia
    • H2a in Europe
    • U6a in North Africa (Egypt?)
  • A tick without anything notable happening
  • Two expansions:
    • M7a1a in Japan (?)
    • J1c in West Asia
  • I and U5b3 in Europe probably
  • W in West Asia, B2 in America (updated).
  • D4h3a in America
  • Two ticks without major events
  • T2 and K2a in West Eurasia
  • Another idle tick
  • K1a1b and T2b in West Eurasia (Danubian Neolithic?)
  • No more stars till present
மேலும் இது குறித்த தகவலுக்கு - காண்க:

IV. எத்தியோப்பியா நாடும் தமிழின் வேர்களும் 


ஆப்பிரிக்காவின் முதல் தேசம் எத்தியோப்பியாதான்
அதனால் தான் முழு ஆப்பிரிக்காவும் முதலில்எத்தியோப்பியா என்றே அழைக்கப்பட்டது.



1. மேலுள்ள நில படத்தில் அபிசீனியா என்பதும்எத்தியோப்பியாவின் பழைய பெயரே. காண்கமேலும் நிலபடத்தில் அபிசீனியா என்று குறிக்கப்பட்டுள்ள இடம் இன்றுஎத்தியோபியா என்ற நாடு இருக்கும் இடம்தான்.


  
In English, and generally outside of Ethiopia, the country was also oncehistorically known as Abyssinia, derived from Habesh, an early Arabicform of the Ethiopian Semitic name "abaśāt" (unvocalized "BŚT")The modern form Habesha is the native name for the country's inhabitants, the Habesha people. In a few languages, Ethiopia is still referred to by names cognate with "Abyssinia", e.g., modern Arabic al-abashah.
2. மேலுள்ள நில படத்தில் soudan என்பதன் பொருள் தெற்கத்தியநாடு என்பதே. ஐரோப்பாவுக்கு தெற்கே உள்ள நாடுகள் என்றபொருளில்.
பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் (இத்தாலி, ஸ்பெயின்,போர்த்துக்கல்...) sud என்பதன் பொருள் தெற்கு தான்
North - Nord - வடக்கு 
 South - Sud - தெற்கு
 West - Ovest - மேற்கு
East - Est - கிழக்கு
 



அதே போல் ஆப்பிரிக்காவை ஒட்டிய கடலும் (இன்றைய அட்லாண்டிக் பெருங்கடலின் தென்பகுதி)எத்தியோப்பியக் கடல் என்று தான் அழைக்கப்பட்டது.




--> 
எத்தியோப்பியாவின் கொடி தான் பெரும்பாலான ஆப்பிரிக்ககொடிகளின் நிறத்திற்கு அடிப்படை
கீழே 
எத்தியோப்பிய நாட்டுக் கொடி பச்சை, மஞ்சள், சிவப்பை 
அடிப்படையாகக் கொண்டது. 


எத்தியோப்பிய  பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற நிறங்கள் 
பெரும்பாலான ஆப்பிரிக்க நாட்டு கொடிகளுக்கு அடிப்படை நிறமாக இருக்கிறது.


ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல cuzco என்ற தென் அமெரிக்க பெரு நாட்டு இன்கா இன கொடிக்கும் இந்த நிறங்களே அடிப்படை.


இன்கா இனம் வாழ்ந்த பெரு நாட்டை ஒட்டிய பொலிவியா நாட்டுக் கொடியும் அப்படியே எத்தியோப்பிய கொடியின் நிறங்களே

ஆக எத்தியோப்பிய நாட்டு தொடர்புகள் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா என பரந்து விரிந்து உள்ளது தெளிவாகிறது. எத்தியோப்பியா நாடோ தமிழர் இனத்தோடு தொடர்புள்ளதாய் இருக்கிறது. 

--> 
எத்தியோப்பியா என்ற பெயரே தமிழ்ப் பெயர்.

எத்தியோப்பியா வின் தொன்மையான பெயர் அபிசீனியா

  In English, and generally outside of Ethiopia, the country was also once historically known as Abyssinia, derived from Habesh, an early Arabic form of the Ethiopian Semitic name "Ḥabaśāt" (unvocalized "ḤBŚT")The modern form Habesha is the native name for the country's inhabitants, the Habesha people. In a few languages, Ethiopia is still referred to by names cognate with "Abyssinia", e.g., modern Arabic al-Ḥabashah.

அபிசீனியா என்பதன் பொருள் என்ன?
தலைவர்களின் நாடு என்பதே பொருள்.
சித்தி அடைந்தவர்கள், விடுதலை அடைந்தவர்கள் நாடு.
 
சித்தி, விடுதலை அடைந்த இன மக்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல நம்மகர்நாடகாவிலும் வாழ்கிறார்கள். 
அவர்கள் தோற்றத்தில் ஆப்பிரிக்கர் போலவே இருக்கிறார்கள். காண்க:

கர்நாடகாவில் வாழும் ஆப்பிரிக்கர்


 
 Similarly, another term for Siddis, habshi (from Al-Habsh, the Arabic term for Abyssinia), is held to be derived from the common name for the captains of the Ethiopian/Abyssinian ships that also first delivered Siddi slaves to the subcontinent.[4] The term eventually came to be applied to other Africans and not only to emancipated Siddis. In time, it came to be used to refer to their descendants as well. காண்க:

மேலும் 
எத்தியோப்பியாவின் மலைகள் சிமைய மலைகள் என்றே அழைக்கப்படுகின்றன. தமிழில் சிமையம் என்றாலே மலை அல்லது சிகரம் தான்.


65) சிமை cimai (p. 153) , s. the summit of a mountain; 2. tuft of hair, குடுமி.
66) சிமையம் cimaiyam (p. 153) , s. top, உச்சி; 2. a peak; 3. a hill or a mountain, மலை. காண்க:

7) சிகரி cikari (p. 149) , s. a tower, கோபுரம்; 2. a mountain;  
6) சிகரம் cikaram (p. 149) {*}, s. a peak, ridge of a hill, summit; 2. the crown of the head, உச்சி; 3. the top of a tower, car etc., pinnacle; 4. a mountain, மலை; 
 18) சிகை cikai (p. 149) {*}, s. a tuft of hair on the head, குடுமி; நகசிகைபரியந்தம், from the toe nails to the crown of the heat, from head to toe. சிகரச் சேதனம், tonsure. சிகாமணி, the chief gem in a crown; 2. the most excellent person, (as தேவசிகாமணி, the chief among gods). காண்க:

அரபு நாடுகளில் ஷேக்குகள் (Sheiks) என்பதன் பொருள் சிகரமானவர், தலைவர்என்பதே. காண்க:

ஆக எத்தியோப்பியா-அபிசீனியா-ஹப்ஸ் - சித்தி-சிகரம்-அராபிய ஷேக்- தமிழின் அரிமா-வட இந்திய கேசரி- ஆஸ்திரிய கெய்சர்- இத்தாலிய சீசர்- ரஷிய ஜார் எல்லாம் நம்ம தமிழின் வேர்ச்சொல்லை கொண்டிருப்பதைக் காணலாம்.

கேசரி - கேசம் உள்ள அரி (அரிமா என்றால் சிங்கம், கேசம் உள்ள சிங்கம், பிடரி உள்ள சிங்கம்) 

சீதாராம் கேசரி, கேசரிவர்மன். 

இதிலிருந்தே ஜெர்மானிய கெய்சர் மன்னன் (Keiser. காண்க:), 

இத்தாலிய சீசர் மன்னன் (Caesar- இத்தாலியில் சேசரே என உச்சரிப்பு), 

ரஷ்ய ஜார் மன்னன் (Tzar/Czar. காண்க:) உச்சரிப்பு சேசர் தான்.

இந்த தமிழின் தலைவன்-அரசன்-அரிமா-சிகரன்-சிகாமணி என்பதன் வேர்ச்சொற்கள் எந்தெந்த கண்டத்தில் எப்படியெல்லாம் பரவி இருக்கிறது என்பதைக் கீழே காணலாம்.

1. தென் அமெரிக்காவில்: 
Keshua (Inca leadership caste); 
  
2. வட அமெரிக்காவில்
Kashitl; Kashikeh (Aztec, Toltec, and Nahuatl chiefs); 
Kashikel; Kisheh (Mayan leaders); 
Kashekwa; Kashikah (Caribbean and Florida Taino and Arawak chieftains); 
Kushuu (Mexican Mixtec and Zapotec rulers); 
Kashonsee (Mexican Tarascan leaders); 
Kais (Arizona O’odham word for “rich, wealthy people”); 
Katsina (Hopi and other Puebloan protective deities); 
Koshair (Southwestern Puebloan sun priests); 
Koshikwe (Zuñi leadership clan); 
Gasha (Seneca Indian chiefs); 
Kaddi (leaders of the Caddoan tribe); etc., etc.

அமெரிக்க (இந்திய) தொல் தமிழர் இனங்கள் பற்றி காண:

3. ஆப்பிரிக்காவில் 

Kush (ancient rulers of Egypt, Ethiopia, and other parts of Africa); 

4. மேற்கு ஆசியாவில் 
Kais (hereditary leaders of Afghanistan); 
Kish (hereditary leaders of Persia); 
Kassi, Kassites; (ancient rulers of Assyria and Mesopotamia); 
Kashu (Babylonian leaders); 
Kossoei (Persian or Iranian aristocracy);


5. ஐரோப்பாவில் 
Kastra (Roman hereditary leaders); 
Kshatrap (early Greek leaders); 
Hessian (German warrior caste) 
Katholic (universal religion of mankind); 
Kashteel (a name of Spain’s first leadership caste); 
Kastro (another name of Spain’s leadership caste); 
Kaesar/Caesar (mispronounced as “Seezar”; title of Roman kings); 
Kushang (a fierce warrior tribe that once left Eastern Siberia, moved across Mongolia, swept across China, and kept on going to India); 
Kaiser (title of German kings); Kzar (title of Russian rulers); 
Kossaks; Kazaks (hereditary warrior class of Russia); Castle (home of hereditary leaders).

6. கிழக்கு ஆசியாவில்
Kish (Hereditary leaders of Kishtawar, Kashmir); 
Kathay (China’s ancient leadership caste); 

 7. இந்தியாவில் 

Kshatriya; Hattiya (India’s ruling caste);
Jutes, Goths, Guti, Gades, Cadis, etc., (ancient Rajput or Yadava warriors that once overran Europe); 


8. மேலும் கோண்-அரசன் என்ற பொருளில் 

'king' in Other Languages

  • Brazilian Portuguese: rei
  • Croatian: kralj kraljica
  • Czech: král
  • Danish: konge
  • Dutch: koning
  • European Spanish: rey
  • Finnish: kuningas
  • French: roi
  • German: König
  • Italian: re
  • Norwegian: konge
  • Polish: król
  • Portuguese: rei
  • Romanian: rege regi
  • Russian: король
  • Spanish: rey
  • Swedish: kung
  • Turkish: kral
  • Ukrainian: король



எத்தியோப்பிய மன்னர்களும் அவர்களின்தமிழ்ப்பெயர்களும்

இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல்வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக்கொள்கிறது.
ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர். அதில்முதலாமவர்





1. O r i or aram 4530-4470BC தமிழில் ஓரி என்பது செப்பமான்வடிவம் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்கஇலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவேஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.
2. Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் - காரி அக்கன்  எனசெப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழுவள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான்திருமுடிக் காரி என்பான். 
 
இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun  வழிமரபில் ஒருமன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில்காரி அக்; காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் -வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்தபானைஓட்டில் அதியகன் எனறு உள்ளது. இதை அத்தி + அக்கன்என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், , ,, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்றவழக்குள்ளது. எகிபது நாகரிகத்தில் 4, 7 ; 8 ஆம் ஆள்குடிகளில்காரி என பெயர் கொண்டோர் பலர்.

3. Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரையன் எனபதுசெப்பமான் வடிவம். எல் - ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களைகொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும்வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் -அரசன் எனும் பொருள்  உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில்பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது. 
4. Eylouka 3836 - 3932 BC (QUEEN) -  தமிழில் அரசி எயில் அக்கா -எழில் அக்காள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச்சொல் பண்டைத் தமிழகத்தில்  பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில்எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லைஎன்பதற்கு இவள் சான்று. 
5. Kam 2713 - 2635 BC - தமிழில் காம் - காமன் என செப்பமாகபடிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம்அல்ல.இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளிமுத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன்இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர்வழங்குகிறது.




6. Elektron 2515 - 2485 BC - தமிழில் எல்லி கீற்றன் என்பதுசெப்பமான வழக்கு. எல் இகர ஈறு  பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில்Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD -தமிழில் எல்லு அப்பய்ய தி; எல்லு அப்பய்யன் தி என செப்பமாகபடிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் -அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி -- சீனத்தில்வேந்தன் என பொருள் தரும். 
7. Manturay 2180- 2145 BC - தமிழில் மாந்தரை என்பது செப்பவடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர்.எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல்சான்று. மாந்தர  மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்கா வில்கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.

மாந்தரன் என்னும் சேர அரசன். காண்க
8. Azagan 2085 - 2055 BC - தமிழில் அழகன் என்பது செப்பமானவடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம்பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும்தமிழ்ப பெயர்கள்.
9. Ramen Phate 2020-2000 BC - தமிழில் இராமன் வட்டி என்பதுசெப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது.இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல் வாலமீகி இராமாயணத்திற்குமுன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிபதுமன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர். காட்டாக
 Ramesses I 1295-1294 BC -  தமிழில் இராமி சே - இராமி சேயன்என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது.சேயன் - சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறுபெற்றும், பெறாமல் சேய் எனறும், இன்னம் குறுக்கமாக சேஎன்றும் வழங்குகிறது.

 இராமி. காண்க: (தொல்லன் என்ற பெயரின் கீழ் )
10. Wan Una 2000 BC - தமிழில் வண் உன்ன - வண்ணன் உன்னன்என செப்பமாக படிக்கலாம். வண்ணன் - சிந்து வெளிமுத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Hanஆள்குடி அரசர் ஒருவர் பெயர்

11.  Liu Bang 206 -195 BC - 
தமிழில் ஒளிய பண் -ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். -  திரிபுசீனமொழியில் ன்;ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில்ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது உன்னன் - தமிழகசிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறுபெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு 
எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர்  
Unas 2375 -2345 BC - தமிழில் உன்ன - உன்னன் என செப்பமாகபடிக்கலாம்.
Piori 2000 - 1985 BC - தமிழில் பய் ஓரி - வய் ஓரி - வய்யன் ஓரிஎன செப்பமாக படிக்கலாம். வய் - வெம்மை வைதல் என்பதன்வேர், வய்யன் - சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டுஅருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீனநாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது. 
12. Kosi Yope (queen) 1871 - 1890 BC - தமிழில் அரசி காதி யாப்பி -காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இனஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி - தமிழக ஊர்புறங்களில்பெண் பெயராக வழங்குகிறது.ஆண் பால் பெயரான காத்தன் சிந்துவெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால்பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி - இது ஒரு முதுபழந்தமிழ்ச் சொல்
ஆண் பால் பெயர் யாப்பன் என்பது. 
13. Etiyopus I 1856 - 1800 BC - தமிழில் எட்டி யாப்ப - எட்டி யாப்பன்என செப்பமாக படிக்கலாம். எட்டி - வணிகர்க்கு உயர்ந்தோன்எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும்தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் - ஒரு பழந்தமிழ் பெயர்தென்அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் .  
14. Pachacutec Inca Yupanqui 1438 - 1471 AD .- 
தமிழில்பச்சகுடி யாப்அங்கை - பச்சைகுடி யாப்பன்  அங்கை என செப்பமாகபடிக்கலாம்அஙகன்  அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும்தமிழக்த்தில்  வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும்தமிழர் நாகரிகங்களே.
15. Lakndun Nowarari  . தமிழில் இள கந்தன்  நவ்வர்  அரிஎன்பது செப்பமான வடிவம் இள  - இளமைப் பொருள்சங்கஇலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி எனவழங்குகிறதுஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன்அத்திளாஅத்தி+இள எனபான்சிந்துவெளி முத்திரையில் அத்திளவழங்குகிறது. கந்தன்  சிந்துவெளி முத்திரையில் அருகிவழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின்அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் - சிந்துவெளிமுத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும்காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி அரியாஇன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர்அரியான்குப்பம்; அரியாங்குப்பம்.




16. Senuka I 1700 -1683 BC - தமிழில் சேன் உக்க - சேனன் உக்கன்என செப்பமாக படிக்கலாம்சேனன் - சிந்து வெளிப் பெயர். இளஞ்சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்குஎன பொறிக்கப்பட்டுள்ளது. 
17. Mandes 1531 - 1514 BC - தமிழில் மாந்தி என்பது செப்பமானவடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தைஎனவும் ஆகும். மாந்தரன் ; மாந்து + அரன் ஒரு சேரப் பெயர்.மாந்தை சேரர் நகரம்.

18. Amoy 1481 -1460 BC - தமிழல் ஆமை - ஆமன் இதன்செப்பமான வடிவம். யா;  திரிபு, யானை - ஆனை, யாந்தை -ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்றுஆமை ஆனது. குட்டாமன் - குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும்வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார்;முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.
இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon 642-640 BC .

19. Titon Satiyo 1256 - 1246 BC - தமிழில் திட்டன் சாத்தைய திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம் திட்டன் -திட்டன் குடி; திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிகஅரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD. அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன.   சாத்தன் +அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளிமுத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரியநாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC . சாத்தைஐகார ஈறு பெற்றுள்ளது. 

ஈரானின் ஈலம் நாகரிக மன்னன்பெயர் .Ukku-Tanish 2500 BC  என்பது . 
 
பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II 732 BC.  சீனநாகரிகத்தில்Shang  ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்;ங் எனமூக்கொலி பெறும்.
20. Wiyankihi I 1140 - 1131 BC - தமிழில் வய்யங்கி - வய்யன்+அங்கி என செப்பமாக படிக்கலாம் . சங்க இலக்கியத்தில் ஒருமன்னன் பெயர் வய் ஆவி என்பது.
சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடையஇயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொருமன்னனுக்கு ஆட்சிப் பெயர்
 Xiao xin 1300 - 1251 BC - 
தமிழில் வய்ய வய்யன் என்பது.சீனத்தில் வய்;Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.
21. Ramenkoperm 1057 -1043 BC - தமிழில் இராமன் கோப்பெரும்என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்கஇலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன்கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.

22. Pino stem 1073 BC - தமிழில் பிண்ண சேம் - விண்ணன் சேமன்என செப்பமாக படிக்கலாம்.  -  திரிபு விண்ணன் - சங்கஇலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது.கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 - 1552 BC தமிழில் விண்ணவிண்ணன். சேமன் சிந்துமுத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis)பெற்று சேமன் ஆனதுவிழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர்உள்ளது.

23. Hanyon I 957 -956 BC - தமிழில் கான் யாண் - கானன் யாணன்என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்துவெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும்வழங்குகின்றன. சீனத்தின்  கிழக்கு Han குடியில் ஒருமன்னன் பெயர்   Yan Kang 220 AD - தமிழில் யாண் கான். ன்;ங் எனமூக்கொலி பெறும்.

24. Sera I (Tomai) 956 - 930 BC -  தமிழில் சேர (தாமை) - சேரன்(தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறுபெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல்  காஞ்சிமாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர்
பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர்  
Tiglath Pileser 732 -729 BC - தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் - திகழ்ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல்ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன் சேரர் வில்லவர்எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில் இப்பெயர் சேரர்பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று.

25. Nicauta Kandae (queen) 740 - 730 BC - தமிழில் அரசி நய் காத்தகந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன்சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலைதெளிவாக குறித்து வந்துள்ளது. 
26. Erda Amen Awseya 681 - 675 BC - தமிழில் எருத ஆமன் அவ்சேய - எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம்.எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டுஇடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின்தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 - 414 AD  -தமிழில் தூவா எருதன் - தூவான் எருதன் என செப்பமாகபடிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் - கொரியநாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன்  கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்துவெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் - தேனி வட்டம்புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள்ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.

27. Gasiyo Eskikatir  - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் - காத்தய்யன்இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலிபெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது.காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன்,இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன
 பாபிலோன் மன்னன் ஒருவன்பெயர்  
 
28. Ishki bal 1732 BC  - தமிழில் இசக்கி பால் - இயக்கி வால் எனசெப்பமாக படிக்கலாம். வால்  ஒளிரும் வெண்மை எனப் பொருள்,; திரிபால் பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்துவேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது
ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர்  
Kutir Nahhunte 1740 BC -தமிழில் கதிர் நக்கந்தி - கதிர் நக்கன் கந்திஎன செப்பமாக படிக்கலாம். நக்கன்  சிந்து முத்திரைப் பெயர்.கந்தன்; கந்தி ஆகும்.

29. Tomadyan Piyankhi III 671 - 659 BC - தமிழில் தாம் அதியன்பய்யங்கி - தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம்.அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர்.

Elalion Taake 402 -392 BC - தமிழில் எல்லாளியன் தக்கி என்பதுசெப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தைமிக சிறப்பாக ஆண்டவன்
சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் 
   
30. Liu Eloulou 356 -358 BC - தமிழில் ஒளிய எல்லாள - ஒளியன்எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப்பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC -தமிழில் எல்லளைய; எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம்.தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில்கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் எனபெயர் குறிப்பிடப்பட்டிருந்தது
சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 - 1180 AD - தக்ககுர - தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.

31. Atserk Amen III 382 BC - தமிழில் ஆட் செருக் ஆமன் - செருக்குஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு - வெற்றி, செருக்கு --பெருமிதம்.  ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ளஆமன் என பொருள் இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்,சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச்சிறப்பு சுட்டிய பெயர்.

32. Kolas 295 - 285 BC - தமிழில் காள - காளன் என செப்பமாகபடிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர்.தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால்பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன்என்பது. 
33. Stiyo 269 - 255 BC -  தமிழில் திய்ய - திய்யன் என செப்பமாகபடிக்கலாம்
தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன்அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல்கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிகபின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன்பெயர் Deun gol 874 - 849 BC தமிழில் திய்யன் கோல் எனசெப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளதுகோல் -கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.

34. Bawawl 70 - 60 BC தமிழில் பவ்வல் - வவ்வல் என செப்பமாகபடிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும்
சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர்
Helian Bobo 407 - 425 AD - தமிழில் கிளியன் பப்ப - கிளியன்வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாகதிரிந்துள்ளதுஇவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம்தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி  எனப்பட்டனர்

35. Barawas 60 - 50 BC - தமிழில் பரவன் என செப்பமாகபடிக்கலாம் பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன்மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும். 
36. Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத - சேரன் ஆதன்  எனசெப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர்கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன்.


37. Azegan Malbagad  200 - 207 AD - தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம்.மால் -- கருமைக் கருத்து, பகடு - எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.

நன்றி: தென்பாண்டி சிங்கங்கள்.

மேலே உள்ள எத்தியோப்பிய அரசர்களின் பெயர்கள் எல்லாம் உண்மைதானா என்று சந்தேகம் கொள்பவர்கள் எத்தியோபிய நாட்டு மன்னர்களின் பெயர்களை அந்நாட்டைச் சேர்ந்த ஒரு பதிவு வெளியிட்டுள்ளதைக் காணலாம். காண்க:

V. எகிப்து நாடும் தமிழின் வேர்களும். 

5.1. எகிப்து நாட்டின் பெயரே ஒரு தமிழ்ப்பெயர் 

ஜான் P.ராபர்ட்டி (John P. Rafferty) என்பவர் எழுதி ஒருங்கிணைத்த ஆறுகளும் ஓடைகளும் (Rivers and Streams) என்ற புத்தகத்தில் பக்கம் 155ல்  பண்டைய எகிப்தியர் ஆறுகளை ஆறு என்றே அழைத்தனர் என்கிறார்.

  
 "The ancient Egyptians called the river Ar or Aur (Coptic: Iaro)" காண்க: 

1986 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பிரிட்டானியா என்சைக்ளோபீடியா முதல் தொகுப்பில் பக்கம் 121 ல் 
கிரேக்க ஹோமர் எழுதிய ஒடிசி என்ற காவியத்தில் நைல் நதியின் பெயர் அகப்பிதோஸ் என்று ஆண்பாலாகவும் இந்த நதி பாயும் எகிப்து நாடு, அதேபெயரில்  அகப்பிதோஸ் என்று பெண்பாலாகவும் அழைக்கப்பட்டதாக எழுதியிருக்கிறார்.
 காண்க:
  
  In The Odyssey, the epic poem written by the Greek poet Homer (7th century bce), Aigyptos is the name of the Nile (masculine) as well as the country of Egypt (feminine) through which it flows. 
எகிப்து என்ற பெயரின் மூலச்சொல் அகப்பிதா என்பதே. அகம்-பிதா, தந்தையரின் நாடு, முன்னோர்களின் நாடு என்பதே பொருள். காண்க: 

  Egyptians referred to their country as "Hwt-ka-Ptah" (Ht-ka-Ptah, or Hout-ak Ptah) , which means "Temple for Ka of Ptah", or more properly, "House of  the Ka of Ptah" Ptah was one of Egypt's earliest Gods. Hence, in pronouncing Hwt-ka-Ptah, the Greeks changed this word to Aegyptus (Aigyptos)

5.2. நைல் நதி ஒரு தமிழ்ப் பெயர் 

நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. எகிப்தில் நைல் நதி என்று ஒரே நதியாக சொல்லப்பட்டாலும் இரண்டு நைல் நதிகள் உண்டு. ஒன்று வெள்ளை நைல். மற்றொன்று நீல நைல். தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது. திண்டுக்கல்லில் ஒரு சாலை இருக்கிறது, அதன் பெயர் சாலை ரோடு அது போலத்தான் வரலாறு மறந்த தமிழர்கள் நாம் ப்ளூ நைல் என்று சொல்லும் போது நீல நீல என்று சொல்லுகிறோம்.
எகிப்திய காப்டிக் மொழியில் நைல் நதி ஆறு என்றே சொல்லப்படுகிறது.
The Nile (Arabic: النيل‎, Eg. en-Nīl, Std. an-Nīl; Coptic: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; Ancient EgyptianḤ'pīand Iteru) is a major north-flowing river in northeastern Africa, generally regarded as thelongest river in the world.[2] காண்க:



5.3. பாரவோன் மன்னன் 

பார் என்றால் உலகம் என்று நமக்குத்தெரியும். கோண் என்றால் அரசன் என்பதும் நமக்குத்தெரியும். இரண்டையும் சேர்த்து சொன்னால் அதுதான் பார்கோன். இத்தாலியில் Faraone (பாரவோனே) ஆங்கிலத்தில் Pharaoh (பாரோ)


5.4. பிரமிடு தமிழ்ப்பெயர் 

திரு ம. சோ. விக்டர் எனும் தமிழ் ஆர்வமிக்க தமிழாசிரியர் நல்லேர் பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் ஒன்று எபிறேயமும் தமிழே என்பதே. அதில் அவர் தமிழே மூலமாய் உள்ள பல மொழிகளின் தொடர்புகளைத் தருகிறார். அதில் ஒன்று பிரமிடு என்பது ஒரு தமிழ் வார்த்தை என்பதே. இறந்தவர்களை அடக்கம் செய்ய இரண்டு வகை இடங்கள் தமிழர்களிடம் உண்டு. ஒன்று இடுகாடு, மற்றொன்று சுடுகாடு. குழியில் இட்டு அடக்கம் செய்வது இடுகாடு. சுட்டு எரிப்பது சுடுகாடு. அந்த வகையில் தமிழர்கள் பழக்கமான முதுமக்கள் தாழியின் பெரிய வடிவம் தான் பெரும் இடு அல்லது பிரமிடு என்பது. 'பெரும்' என்பது பல சொற்களில் திரிந்து 'பிர' என்றாகி உள்ளது என்கிறார். உதாரணமாக, பெரும் அண்டம்-பிரமாண்டம், பெரும் சாதம்-பிரசாதம், பெரும்அயணம்-பிரயாணம்.

5.5. சினை மலை 

நான்கு பக்கமும் நிலம் தீர்ந்த பகுதி தீவு. ஒரு பகுதி மட்டும் நிலமாக இருந்து மீதி மூன்று பகுதியும் நீர் சூழ்ந்த நிலமாய், நிலத்தின் நீட்சி இருப்பது தீவக்குறை அல்லது தீபகற்பம். கர்ப்பமான பெண்ணைப்போல இருப்பதால் அப்பெயர். தென் இந்தியப்பகுதி ஒரு தீபகற்பம். படம் பார்த்தால் பொருள் எளிதில் விளங்கும்.


இதே கருத்தினைத்தான் இதற்கான ஆங்கில வார்த்தையும் கொண்டிருக்கிறது. Peninsula அதாவது,  சினைகொண்ட அல்லது சூல் கொண்ட ஒரு பெண்ணைப்போல இருப்பதால் பெண்ணின்சுலா. அதனால்தான் அம்மலைசினை மலை என அழைக்கப்படுகிறது. சினை மலையின் நில படம் பார்த்தால் எளிதில் புரியும்.





5.6. எரிதிரைக்கடல் (Red Sea - செங்கடல் )


 

 தமிழ் அன்பர் ஒருவரின் தளத்தில் இந்தியப்பெருங்கடல் எவ்வாறு தமிழர் சூட்டிய கடல் பெயர் என்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறார்.
தமிழர்கள் சூட்டிய கடல் பெயர்கள் :

"
பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ" (Periplus of Erythrean sea) என்ற புத்தகத்தில்முதலாம் நூற்றாண்டில் கடல் வாணிபம் குறித்த முக்கிய வரைபடம் குறிக்கபட்டுள்ளது . எரித்ரயென் கடல் என்பது இன்று நாம் சொல்லும் இந்து மாசமுத்திரம் . இந்து மா சமுத்திரம் வழியாக கடல் வாணிபத்தை குறிக்கும்வரைபடம் அது. அகவே முதலாம் நூற்றாண்டில் எரித்ரயென் கடல் என்று இந்துமா சமுத்திரம் அழைக்கப்பட்டது உறுதி ஆகிறது. இப்பொழுது "எரித்ரயென் சீ"என்ற வார்த்தையின் தன்மையை ஆராயும் பொழுது தான் அதிர்ச்சிகாத்திருந்தது.பெயர் : எரித்ரயென் சீ
பெயர் காரணம் : அந்த கடல் பகுதியில் சிவப்பு நிற பூஞ்சை முளைத்து அதுஅழுகும் வரை கடல் மட்டம் தீ பற்றி எரிவது போல காட்சியளிக்குமாம் அந்தபூஞ்சையின் அறிவியல் பெயர் (Trichodesmium erythraeum Algae) ட்ரைகோதேசமியும்எரித்ரயெயும் பூஞ்சை. இதனால் இந்தவகை பூஞ்சை வளரும் கடல் என்பதால்இந்த கடல் அப்பெயர் பெற்றதாக கூறபடுகிறது.கேள்விகள் :இந்த வகை பூஞ்சை முதன் முதலாக கடல் மாலுமி குக்(Captain Cook) என்பவரால்1770 ஆம் ஆண்டு தன பயணத்தின் பொழுது கவனித்து பின்பு ஆராய்ச்சிக்குஉட்படுத்தி அறிவியல் பெயரிடப்பட்டது . அப்படி இருக்குமெனில் முதலாம்நூற்றாண்டில் உள்ள வரை படத்தில் எப்படி அந்த பெயர் இடம்பெற்றது ???பின்பு இதற்கு தமிழ் விளக்கத்தை பார்த்தால்
 :
Erthraean sea = Ery + Thraen sea
எரித்ரயென் = எரி + த்ரயென்
Ery or Eri (
எரி) = எரி என்பதன் அர்த்தம் நெருப்பு (burning or firing red in colour)

Thirai or Tharai- (
திரை) = திரை என்பதன் பொருள் ''திரைகடல்'' ''அலைகடல்'' என்றவார்த்தையில் இருந்து புரியும்(a screen or a wave)எரி+திரை = எரிதிரை ; எரித்ரை ; எரித்ரயென் கடல் 

Eri + thirai = Erithirai ; Erythirai ; Erythraean Sea

''
எரியும் திரைகடல்'' என்று அழகாக சொல்லப்பட்ட இந்த கடலின் பெயர்காலபோக்கில் மறைந்து இந்து மா கடல் என்று மாற்றப்பட்டுள்ளது. 

மேலும் இந்த பெயரினால் அழைக்கப்பட்ட பெருங்கடல் பிறகு அதனோடு தொடர்புடைய ஒரு சிறு பகுதிக்கு மட்டும் வழங்கப்படலாயிற்று. அதுதான் செங்கடல். எரி திரை-எரி கடல்-இரத்த கடல்-red sea-செங்கடல். அதனால் தான் இந்த எரி திரைக்கு அருகில் உள்ள ஒரு நாடு எரித்திரேயா என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. 1993 ல் சுதந்திரம் பெற்ற நாடு.

5.7.  எரித்ரேயா- [எரி -தேயம் அல்லது எரி - தேசம்


5.8. சுக தரைத் தீவு (Succotra)


    
சகோத்ரா தீவு நிலப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல சவூதி அரேபியாவுக்கு கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ள ஏமன் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவு. இந்த சகோத்ரா என்ற பெயரின் மூலச்சொல் சுக தரை. தமிழர்கள் எகிப்த்துக்கும் கிரேக்க ரோம நகரங்களுடன் வியாபாரம் செய்ய கடலில் பயணித்த பொது தங்கி ஓய்வெடுத்த இடம் இது. ஆங்கிலேயர்கள் இதன் மூலச்சொல் சுகதரை தீவு என்றே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது சமஸ்க்ரிதம் என்று நினைத்துவிட்டார்கள். இது பற்றிய தகவல் காண.
இங்கு மட்டுமே காணப்படும் பல வித்தியாசமான தாவர விலங்கு உயிரினங்களில் ஒரு மரத்தின் பெயர் சின்ன பாரி (Dracaena cinnabari)

  
Socotra appears as Dioskouridou ("of Dioscurides") in the Periplus of the Erythraean Sea, a 1st century AD Greek navigation aid. In the notes to his translation of the Periplus, G.W.B. Huntingford remarks that the name Socotra is not Greek in origin, but derives from the Sanskrit dvipa sukhadhara ("island of bliss").


--> 
ஆப்பிரிக்க பகுதியில் அகழ்வாய்வில் தமிழ் 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக