ஞாயிறு, 4 ஜூன், 2017

8ம் நூற்றாண்டு வரை கேரளா தமிழே மலையாளி பிறகே சேரர் சேரநாடு தமிழறிஞர் மணிப்பிரவாகம்

aathi tamil aathi1956@gmail.com

30/11/14
பெறுநர்: எனக்கு
அப்புறம் எவன்லே சொன்னது, பிரபாகரன்
மலையாளின்னு...?
பண்டைக்காலம் தொடக்கம் சேரநாட்டில் (கேரளம்)
பேச்சு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், இலக்கிய
மொழியாகவும், தமிழே இருந்து வந்தது.
சிலப்பதிகாரம், பதிற்றுப் பத்து என்னும் நூல்களும்,
புறநானூற்றில் சில பாடல்களும், (சங்க இலக்கியங்கள்)
சேர நாட்டுத் தமிழாகும்,(மொழி வரலாறு, பக், 349)
கி.பி. ஏழு எட்டு, ஒன்பதாம், நூற்றாண்டுகளில்
வாழ்ந்து, பக்திப் பாடல்கள் பாடிய, ஆழ்வார்,
நாயன்மார்களில் சேரமான் பெருமாள் நாயனாரும்,
குலகேசர ஆழ்வாரும், கேரள நாட்டைச்
சேர்ந்தவர்களாவர்.
கி.பி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தமிழ்
இலக்கண நூலாகிய புறப் பொருள் வெண் பாமாலையின்
ஆசிரியர் ஐயனாரிதனார் சேரநாட்டைச் சேர்ந்தவர்.
(தமிழ் இலக்கிய வரலாறு பக் 3 மு.வ)
சேரநாட்டில் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரையும்,
எழுதப் பெற்ற சாசனங்கள் யாவும், தமிழிலேயே எழுதப்
பெற்று வந்துள் ளன. இவ்வாறு ஸ்மித் என்ற
வெளிநாட்டு அறிஞர் குறிப்பிடுகின்றார்.
(பண்டைத்தமிழர் வரலாறு பக்.26,27).
இவ்வாறு பழங்காலத்திலிருந்து கேரள நாட்டில்
நிலவி வந்த தூய தமிழே வடமொழியாளரின்
தாக்கத்தால் (வடமொழி என்று கூறப்படும் 'சமைத்த
மொழி'யாகிய சமற்கிருதம்) மிக, மிகத்
திரிபுற்றுக் கலப்பு மொழியான மலையாளமாக
மாறியது. அப்போதும் தூய தமிழ் வழக்குகள்
காப்பாற்றப்பட்டுள்ளன. (இலக்கிய ஆய்வு, பக் 212 )
மலையாளம் தமிழிலிருந்து தோன்றியது என்ற உண்மை,
கிழக்கு திசையை அது உணர்த்த அது ஆளும்
சொல்லினாலேயே விளங்கப் பெறும். அச்சொல்
கிழக்கு ஆகும். இவ்வாறு டாக்டர் கால்டுவெல்
(திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம் பக், 37 தமிழில்
புலவர் தா. கோவிந்தன், எம்.ஏ.க.இரத்தினம் எம்.ஏ.
1992) குறிப்பிடு கின்றார்.
மலையாளத்தில், ஐம்பது விழுக்காட்டிற்கும் மேல் தூய
தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவ்வாறு, முத்தமிழ் காவலர்,
கி.ஆ. பெ. விசுவநாதம் அவர்கள்
குறிப்பிடு கின்றார்.
 
search திருவனந்தபுரம் தமிழர் நகரம் வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக