சனி, 3 ஜூன், 2017

முதல் இந்தி எதிர்ப்பு 1937 சோமசுந்தர பாரதியார் இந்தியெதிப்பு ஹிந்தி

aathi tamil aathi1956@gmail.com

14/12/14
பெறுநர்: எனக்கு
1938 முதல் இந்தி எதிர்ப்புப் போரின்
தலைமகன் சோமசுந்தர பாரதியாருக்கு வீர
வணக்கம்!
1938ஆம் ஆண்டு இராசாசி அரசு பள்ளிகளில்
கொண்டு வந்த கட்டாய இந்திப்
பாடமொழிக்கு எதிராக சென்னையில் முதல் களம்
அமைத்து போராடியவர் சோமசுந்தர பாரதியார்.
5.9.1937ஆம் ஆண்டு சென்னை செளந்தரிய
மண்டபத்தில் பாரதியார் தலைமையில் முதன்
முதலில் சென்னையில் நடைபெற்ற
இந்தி எதிர்ப்புக்
கூட்டத்திற்கு ஆர்.பி.சேதுப்பிள்ளை,
சுவாமி சகஜானந்தம், டி.ஏ.வி.நாதன்,
உமா மகேசுவரனார், சி.என். அண்ணாதுரை,
பண்டிதை நாராயணியம்மாள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். அக் கூட்டத்தில் தலைவராகிய
பாரதியார் உரை பின்வருமாறு:
"இந்தி மொழி இலக்கண இலக்கியச்
சிறப்பில்லாத வெறுமொழி.
அம்மொழி பயிலுவதால் தமிழ்மொழியும், தமிழர்
நாகரிகமும் கெட்டு விடும். தமிழ்ப்
பள்ளிக்கூடங்களில் கட்டாயப்
பாடமாக்குவதைத் தமிழ் மக்கள்
முழு வன்மையோடு கண்டித்து ஒழிக்க என்னென்ன
செய்ய வேண்டுமோ அத்தனையும்
உடனே தீவிரமாய்ச் செய்திடல் வேண்டும்.
அதுவே தமிழர் வீரமுடையவர் என்பதைக்
காட்டும். அவ்வெதிர்ப்பினால்
ஏதாவது கேடு வருமானால் அதனைப் பெறத் தாம்
முன்னணியில் இருப்பேன் என்று பேசினார்.
(நன்றி: செந்தமிழ்ச்
செல்வி திங்களேடு 1937)
 
kathir nilavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக