ஞாயிறு, 11 ஜூன், 2017

நான் தமிழச்சி - ஜெ

aathi tamil aathi1956@gmail.com

14/10/14
பெறுநர்: எனக்கு
இதே அக்டோபர் மாதம் 21 ம் தேதி ..... 1972 ம்
ஆண்டு சரியாக 42 ஆண்டுகளுக்கு முன்னர் .
செல்வி ஜெயலலிதா , ஜெமினி கணேசன்
நடித்த "கங்கா கௌரி " என்கிற புராணப்
படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ,
மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவில் படப்
பிடிப்பு . அந்த சமயத்தில் ஒரு கன்னட
பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்த
செல்வி ஜெயலலிதா , " நான் தமிழச்சி "
என்று கூறியிருந்ததற்கு காரணம் காட்டி ,
கன்னட வெறியர்கள்
ஸ்டுடியோவுக்கு முன்னால்
கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் . படப்
பிடிப்பை ரத்து செய்ய வேண்டும்
என்று போராட்டம் நடத்தினார்கள் .
ஆயிரக் கணக்கான கன்னட வெறியர்கள் ,
கையில் சுத்தியல் திருப்புலி ,
கத்தி போன்ற ஆயுதங்களுடன் சுவர் ஏறிக்
குதித்து ஸ்டுடியோவுக்குள்
புகுந்து விட்டனர் . அந்தக் கூட்டம்
விரட்டியடிக்கப் பட்டதும் படப்
பிடிப்பை நிறுத்திக்
கொள்ளலாமா என்று கேட்டப் பொழுது ,
வேண்டாம் தொடர்ந்து படப்
பிடிப்பை நடத்துங்கள் , என்ன
செய்து விடுகார்கள் என்று பாப்போம் என்றார்
செல்வி ஜெயலலிதா . அந்தக் கூட்டத்தின்
பிரதிநிதிகள் சிலர் மட்டும்
செல்வி ஜெயலலிதாவை சந்தித்து கொலை மிரட்டல்
விடுத்ததுடன் , தான் " கன்னடக்காரி "
என்று சொல்லச் சொல்லி வற்புறுத்திய
பொழுதும் , அவர் சொன்னது , " நான்
தமிழச்சி தான் " , இந்தச் சம்பவம்
குறித்து அப்பொழுதைய பிரதமர்
இந்திரா காந்தி அம்மையாருக்கும் கடிதம்
எழுதினார் செல்வி ஜெயலலிதா .
அதற்கு அன்றைய பிரதமர்
இந்திரா காந்தி நவம்பர் 2 , 1972 ம்
தேதி பதில் கடிதம் எழுதியிருந்தார் ,
அதில் அவர் குறிப்பிட்டிருந்தது , "
கன்னடர்கள் கலாட்டா பற்றி கர்நாடக
அரசாங்கம் விசாரணை மேற்கொள்ளும் , "
என்றும் " உங்கள் வீரத்தையும் , தமிழ்க்
கலாச்சார கொள்கைகளையும் கேள்விப்
பட்டு வியந்தேன் ,
விசாரணை அறிக்கை வந்தவுடன் அவர்கள்
மேல் நிச்சயம் நடவடிக்கை பாயும் "
என்பது தான் ....
அவருக்கு 22 வயதிருந்தப் பொழுதே நடந்தச்
சம்பவம் இது

Kishore k swamy
அ.தி.மு.க அதிமுக கன்னடர் கன்னட கர்நாடகா பார்ப்பனர் அய்யங்கார் ஐயங்கார் திரைத்துறை சினிமா நடிகர் நடிகை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக