ஞாயிறு, 11 ஜூன், 2017

டால்டன் அணுக் கொள்கை மணிமேகலை இல் அப்படியே

டால்டனின் அணுக் கொள்கை தமிழ் இலக்கியங்களில் இருந்து
எடுக்கப்பட்டதா?அவரின் அணுக் கொள்கை என்பது தமிழரின் பூதவாதம்,மற்றும்
ஆசிவகக் கொள்கையில் இருந்தே எடுக்கப்படிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது

மணிமேகலைக் காப்பியத்தில் சமயக் கணக்கர் திறம் கேட்ட காதையில்
சொல்லப்படும் அணுக் கொள்கை

ஆதி இல்லாப் பரமணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுநா
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா
ஒன்று இராண்டாகிப் பிளப்பதும் செய்யா

இதன் பொருள்.

நிலம்,நீர்,தீ,காற்று இவை நான்கும் அநாதியாக விளங்கும் பரமாணுக்களாகும்.
இவை வேற்றியல்பு எய்தும் விபரீதத்தால் கேடுற்று அழிவதில்லை.புதிதாக .
ஓர் அணு தோன்றுவதும் இல்லை.ஒன்று மற்றொன்றில் புகுவதும் இல்லை.அநாதியாக
விளங்கும் நீரணு நிலவணுவாகத்திரிவதும் அடைவதும் இல்லை ;ஒன்று இரண்டாகப்
பிளக்கப்படுவதும் இல்லை

இது தான் அணுவைப் பற்றிய டால்டனின் முதற்கொள்கை.

1) All matter is made of atoms. Atoms are indivisible and indestructible

https://www.facebook.com/eagandan?fref=nf 

ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
அணு அறிவியல் சங்ககால 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக