ஞாயிறு, 15 நவம்பர், 2020

ஐ ஔ இலக்கணம் தொல்காப்பியம் உரை

 


aathi tamil aathi1956@gmail.com

புத., 17 ஜூலை, 2019, முற்பகல் 11:29
பெறுநர்: எனக்கு
துளிநசைப் புள்
தமிழ்மொழியின் உயிர் - 'ஐ' 'ஔ'
"அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் "
- தொல்காப்பியம்
இந்த தொல்காப்பியத்துக்கு குளறுபடியான உரைகளை பல இடங்களில் காணப்பெறுகிறது.
ஐயா முனைவர்.செளந்தரபாண்டியன் ஐயம் தெளிவுற இதை விளக்குகிறார்.
உரை பின்வருமாறு :
அகர இகர மைகார
மாகும்” (மொழி.21 )
‘அகரம் இகரம்’ - அ , இ என்ற இரு எழுத்துகளும் அருகருகே நின்றால்,
‘ஐகாரம் ஆகும்’ – ‘ஐ’ போல ஒலிக்கும் !
இளம்பூரணர் – “இது போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று ” என்றார்.
நம் காலத்து இலக்கண அறிஞர் எவரும் இந்த உரையை விளங்கிக் கொள்ளவில்லை !
‘போலி’ என இளம்பூரணர் சொன்னது இலக்கணப் போலியை அல்ல !
‘போல’ ஒலிப்பதால் ‘போலி’ என்றார் இளம்பூரணர்.
ஓலைச் சுவடியில் ஊறியவன் நான் ஆதலால் தொல்காப்பியமும் இளம்பூரணர் உரையும் எனக்கு நன்கு விளங்கியது.
அஃதாவது –
அந்தக் காலத்தில் , ஆசான் நூற்பாவைச் சொல்ல மாணாக்கன் அதனை ஓலையில் எழுத்தாணியால் எழுதிக்கொள்வான் .
அப்படி எழுதும்போது அவன் காதில் எப்படி ஒரு சொல்லானது விழுகிறதோ அப்படித்தான் அவன் எழுதிக்கொளவான்.
இதனால் பல சுவடிப்பிழைகள் ஏற்படும்.எண்ணற்ற சுவடிப்பிழைகளை நான் பார்த்தவன்.
இப்படிப்பட்ட சூழலில்தான் தொல்காப்பியருக்கு மேற்கண்ட நூற்பாவை எழுதும் தேவை ஏற்பட்டது !
தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் -
‘அ’வையும் , ‘இ’யையும் அருகருகே நிறுத்தி , ‘அ இ ’ என்று உச்சரித்தால் , காதில் ‘ஐ’ என்றுகேட்கும் ! இதனை உணர்ந்துகொண்டு , ‘ஐ’ என நான் உச்சரித்தால் நீ சுவடியில் ‘அ இ’ என எழுதிக்கொள்ளாதே ; ‘ஐவனம்’ என நான் உச்சரித்தால் ‘அ இவனம்’ என நீ எழுதிக்கொள்ளாதே !
இதுதான் ‘அகரம் இகரம் ஐகரம் ஆகும்’ என்பதன் பொருள் !
இதே பொருளைத்தான் அடுத்த நூற்பாவுக்கும்
கொள்ளவேண்டும் !
“அகர உகரம் ஔகார மாகும் ” (மொழி . 22)
அஃதாவது , தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் -
‘அ’வையும் , ‘உ’வையும் அருகருகே நிறுத்தி , ‘அ உ ’ என்று உச்சரித்தால் , காதில் ‘ஔ’ என்றுகேட்கும் ! இதனை உணர்ந்துகொண்டு , ‘ஔ’ என
நான் உச்சரித்தால் நீ சுவடியில் ‘அ உ’ என எழுதிக்கொள்ளாதே ; ‘ஔவியம்’ என நான் உச்சரித்தால் ‘அஉவியம்’ என நீ எழுதிக்கொள்ளாதே !
சுவடியியல் (MANUSCRIPTOLOGY) நோக்கில் எனது தீர்மானமான உரை இதுதான் !
இந்த நூற்பாவின் உரையில் இளம்பூரணர் ‘அது கொள்ளற்க’ என்ற தொடரை எழுதியுள்ளது நம் கருத்துக்கு அரணாகும் !
அஃதாவது ‘ போல ஒலிக்கும் போலியைச் சுவடி எழுதும்போது எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்பதே
இளம்பூரணரின் ‘அது
கொள்ளற்க’ என்ற தொடரின் பொருளாகும் !
வேறு எப்பொருள் கொண்டாலும் அது பொருந்தாது !
வேறு பல உண்மைகள் இந்த நமது ஆய்வில் வெளிப்படுகின்றன.
ஆனால் ஆய்வாளர்கள் எவரும் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை !
ஓலைச் சுவடித் துறையில் அனுபவமின்மை இதற்குக் காரணமாக இருக்கலாம் !
‘ஐ’ என்று உச்சரித்தால் அது ‘அய்’ எனக் காதில் விழலாம் ! ஆனால் ஏமாந்துவிடாதே !
இதுபோன்றே ‘ ஔ’ என உச்சரித்தால் ‘அவ்’ என அதை எழுதிவிடாதே ! –
இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !
நூற்பாவைப் பாருங்கள் :
“அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”
(மொழி.23 )
நூற்பவை அடுத்து இளம்பூரணர் ‘இதுவுமது’ என்று எழுதியிருப்பதை ஒருவரும் கவனிக்கவில்லை !
‘இதுவும் அது’ என்றால் , இந்த நூற்பாவும் முன்னிரு நூற்பாக்களைப் போன்றே ‘போல உச்சரிக்கப்படும் ’ எழுத்துகளைப் பற்றியது என்பது பொருள் !
‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்’ – ‘அ’ வும் , அதன் பக்கத்தே ‘ய்’ என்ற எழுத்தும்
‘ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ - சேர்ந்து ஒலிக்கும்போது ‘ஐ’ என்ற ஒலி எழலாம் !
இந்தக்கருத்தை முன் நூற்பாக்களோடு சேர்த்து எண்ணினால் , ‘ஐ’ , வேறு , ‘அய்’ வேறு இரண்டு ஒன்றல்ல என்பது புலப்படும் !
மாத்திரைக் கணக்கை வைத்தே இந்த நமது ஆய்வுதான் சரி என்பதை நீங்கள் உணரலாம் !
ஐ = 2 மாத்திரை
அய் = 1½ மாத்திரை
இரண்டும் எப்படி ஒன்றாகும் ?
இந்த நூற்பா உரையில் இளம்பூரணர் ‘வகரப் புள்ளியும் ஔகாரம் போல வரும் எனக் கொள்க’ என்றார் !
இதற்குப் பொருள் – ‘ஔ என்பதைச் சரியாகக் காதில் வாங்கி எழுத வேண்டும் ! ‘ஔ’ என்ற உச்சரிப்பைக் கேட்டு , அது ‘அவ்’ போலக் காதில் விழுமாதலால் ‘அவ்’ என எழுதிவிடாதே ’ என்பதுதான் !
மேலே சொன்னது போன்றே, மாத்திரைக் கணக்கை வைத்தே இந்த நமது ஆய்வும் சரிதான் என்பதை நீங்கள் உணரலாம் !
ஔ = 2 மாத்திரை
அவ் = 1½ மாத்திரை
இரண்டும் எப்படி ஒன்றாகும் ?
தொல்காப்பிய நூற்பாவில் ‘மெய்பெறத் தோன்றும்’ என்பதற்கு , ‘உண்மை போலத் தோன்றும் ; அது தோற்றந்தான் ; உண்மையல்ல’ என எடுத்துக்கொள்ள வேண்டும் !
தொல்காப்பிய நடை என்பது இன்றியமையாதது

எழுத்து எழுத்துரு சீர்திருத்தம் அய் அவ் ஈவேரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக